அழகிய சுழல்
அழகிய சுழல்
அன்று தான் உணர்ந்தால் அவள் இருப்பது ஒரு பிரமாண்டதில் வசிக்கிறால் என்று,
ஆம் அது ஒரு அழகிய இருப்பிடம் எங்கும் மகிழ்ச்சி சுழந்து இருக்கும்,
எந்த ஒரு பெண்ணும் விரும்பும் தருணம் இதுவாக தான் இருக்கும்,
அவள் சாப்பிட நினைப்பதை அனைத்தையும் உன்ன கிடைத்தன,
இது தான் சொர்க்க பூமி என பார்பவர்கள் அனைவருமே பொறாமை கொள்ளும் அளவு அவளுக்கு உபசாரம் கிடைக்குமிடம்,
வானவில் கண் முன்னே இருப்பது போல ஒரு உணர்வு அவளுக்கு எப்போதும் உண்டு,
அவளின் செல்லுக்கே முக்கியத்துவம் தரப்படும் அவளே அனைவரின் தேவதை,
பெண்கள் அனைவருமே விரும்பும் ஒரு வாழ்வு அது கிடைத்தால் மட்டற்ற மகிழ்ச்சி சுழலும்,
எண்ணி செயலை செய்ய வாய்ப்புகளும் நேரமும் அந்த பெண்ணுக்கு உண்டு,
அவள் வசிக்கும் அறை ஒரு சொர்க்கம் அங்கு அன்பும் உண்டு சுய மரியாதையும் நிரம்பி இருக்கும்,
வாழ்வின் கடைசி வரை இப்படி இருந்தால் அவளின் மனம் இன்ப வெள்ளத்தில் நிரம்பும்,
கனவுகள் அனைத்தும் மெய்ப்பட செய்யும் திறன் கொண்ட பெண் அவள்,
அவள் இருக்கும் இடம் அவள் பிறந்த விடு அவளின் அறை அன்பும் அரவணைப்பும் நிறைந்திருக்கும்,
அது போல அவள் இருக்கும் இடமெல்லாம் இருக்கும் என்றால் அது சொர்க்கம்,
என்றும் தான் வாழ்க்கை முடிவை அவளே தீர்மானித்தாள் என்றால் அந்த மங்கை ஒரு சாதனை பெண்.
