ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்பு
கவலை மனஅழுத்தம் என
பல்வேறு உபாதைகள்
மனதை ஆக்கிரமிப்பு செய்ய
அதுவே நுழை வாயில் ஆகுமே
பல்வேறு நோய்களுக்கே !
மனதை இலகுவாக்குவோம்
எண்ணங்களை மேம்படுத்துவோம்
நல் எண்ணங்கள் நற்செயல்கள் என
மனத்தில் இவற்றின் ஆக்கிரமிப்பு
மகிழ்ச்சியை நம் வசமாக்கிடுமே !
நிம்மதியான வாழ்வும் கிட்டிடுமே !