STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Inspirational Others

4  

நிலவின் தோழி கனி

Abstract Inspirational Others

2020

2020

1 min
248

கலாம் அய்யாவின் 

கனவான...

2020 ஆண்டாய்

எங்களுக்குள் 

நீ நுழைந்தாய்...


கூடவே கொரோனா 

என்னும் 

நோயையும்

கொண்டு

வந்தாய்....


எங்களை போன்ற

குழந்தைகளுக்கு

விடுமுறையும்

சேர்த்து

கொண்டு வந்தாய்..


வேலைக்கு ஓடிக் 

கொண்டிருப்பவர்களுக்கு

சற்று ஒய்வை 

கொடுத்து...


வீட்டில் இருக்கும்

மடிக்கணினிகளின்

மூலமாய்

வேலைகளை 

தந்தாய்...


சுட்டிக் குழந்தைகளின்

வாலு தனத்தை

அதிகமாக்கினாய்.....


இல்லத்தரசிகளின்

வேலைகளை

பன்மடங்கு

அதிகமாக்கினாய்...


குடும்பத்திடம்

அதிகமாக

நேரத்தை

செலவழிக்க

வழி வகுத்தாய்....


பிரிந்து போன

சொந்தங்களின்

நெருக்கத்தையும்...

பாசத்தையும்...

அதிகமாக்கினாய்...


இந்த வருடம்

முழுவதும்

நீ எங்களுக்கு

செல்லா காசை.‌.

போல தான்

இருந்தாய்...


நீ பிறந்தது....

யாருக்கு நன்மை??

யாருக்கு தீமை??

என்றே கணிக்க

முடியவில்லை.‌‌....


இன்னும் சில நாட்களில்

இறக்கும் போகும்

உனக்கு...

சொல்ல 

வார்த்தைகள்

ஏதும் இல்லை.....


நீ சென்று...

நல்லதோர்

தொடக்கமாய்....


உன் நண்பன்

2021 னை...

அனுப்பிவை...


உன் கடைசி

நாட்களுக்கு

எங்களின்

ஆழ்ந்த

அனுதாபங்கள்..‌..



Rate this content
Log in

Similar tamil poem from Abstract