Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Harini Ganga Ashok

Thriller Others

4.8  

Harini Ganga Ashok

Thriller Others

துப்பறிவாளன்

துப்பறிவாளன்

2 mins
223


எழில் வேந்தன் அகழ்வாராய்ச்சியில் நாட்டமுள்ள 28 வயது இளைஞன். நாட்டில் நடக்கும் பல்வேறு அகழ்வாராய்ச்சியில் பங்குபெற்றுள்ளான். அரசு அகழ்வாராய்ச்சி கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறான். சின்ன மங்களம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலில் அகழ்வாராய்ச்சி நடக்க போவதை தெரிந்து கொண்டு கல்லூரி நிர்வாகம் அவனுடன்  5 மாணவர்களையும் சின்ன மங்களத்திற்கு அனுப்பிவைத்தது.


சின்ன மங்களம் வந்தடைந்தவர்களை அவ்வூரின் ஊர்த்தலைவர் வரவேற்றார். அவர்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டன. கிராமம் என்பதால் அச்சூழலையும் வெகுவாக விரும்பினர். மறுநாள் கோவிலில் பணியை துவங்கும் முன் எழில் வேந்தன் வித்தியாசமாக உணர்ந்தான். அகழ்வாராய்ச்சியை நேசிக்கும் அவன் அதே அளவு இறைவனையும் நேசித்தான் நம்பினான்.


ஏனோ தன்னை சுற்றி தப்பாக நடப்பதுபோல் உணர்ந்தான். பணிகளை செவ்வனே வழி நடத்துவதில் தாமதிக்கவில்லை. அதிக நேரம் கோவிலில் செலவிட்டு விஷயத்தை கண்டறிய முற்பட்டான். அங்கு அவனுக்கு கிடைத்த சிறு சிறு குறிப்புகள் இங்கு எதோ மறைக்கப்பட்டுள்ளதாக அவனுக்கு உணர்த்தியது. அக்கம் பக்கத்தில் உள்ளோரிடமும் அவர்களுக்கு தெரிந்த அனைத்தும் கேட்டறிந்து வைத்தான். நாட்கள் நகர்ந்தது.


கோவிலின் பின்புறத்தில் இருந்து அழகிய சிவலிங்கம் ஒன்றை கண்டெடுத்தனர். அங்குள்ள மக்களில் சிலர் ஏற்கனவே இருக்கும் கற்பகிரஹத்தில் வீற்றிருக்கும் லிங்கத்தை அகற்றிவிட்டு இதனை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். நொடியில் நிலவரத்தை புரிந்து கொண்டான் எழில் வேந்தன். அவன் சந்தேகித்ததுபோல் இவை அனைத்தும் ஊர்த்தலைவர் மற்றும் பண்ணையாரின் வேலையாகி போனது. வலியுறுத்திய மக்களும் அவன் ஏற்பாடு செய்த ஆட்களே என்று முடிவு செய்துவிட்டான்.


ஊர்த்தலைவர் மக்களின் ஆசையே என் ஆசையும் ஆகையால் நாம் இப்பொது கிடைத்த லிங்கத்தையே பிரதிஷ்டை செய்வோம் என்று அனைவர்க்கும் முன்னிலும் வாக்களித்தார். எழிலின் முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது அது உணர்த்திய செய்தியை யாரும் அறியர்.


கற்பகிரஹத்தில் தற்போது வீற்றிருக்கும் சிவலிங்கம் மரகதத்தால் ஆனது அதனை அவர்களின் சொத்தாக்கிக்கொள்ள முனைந்தனர் அவ்வூரின் தலைவர் மற்றும் பண்ணையார். அவர்களின் திட்டப்படி ஏற்கனவே இருக்கும் சிவலிங்கத்தை அப்புறப்படுத்திவிட்டு மண்ணுக்கடியில் அவர்கள் புதைத்து வைத்த லிங்கத்தை கற்பகிரஹத்துக்குள் கொண்டு செல்வது. அனைத்தும் நடந்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தனர் இருவரும்.


பிறகு எழிலின் புன்னகைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமே...

எழில் அனைத்து விவரங்களையும் பண்ணையார் மற்றும் ஊர்தலைவரின் வேலையாட்கள் கொண்டு அறிந்துவிட்டான். அவனின் திட்டப்படி கற்பகிரஹத்தில் இருந்த லிங்கத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டு அவர்கள் வைத்திருந்த லிங்கத்தை கற்பகிரஹத்தினில் வைத்துவிட்டனர். ஆகமொத்தத்தில் மரகத சிவலிங்கம் மீண்டும் அதன் இடத்திற்கே சென்றுவிட்டது.


தன் கடமையை மட்டுமல்லாமல் இறைவனுக்கான தன் பணியை நிறைவேத்திவிட்டதாக எழில் வேந்தன் உணர்ந்தான்.


துப்பறிவு என்பது எந்தவிதமான கருவிகளை கொண்டோ வசதிகளை கொண்டோ அமைவதில்லை, விசாரிக்கும் முறையில் உள்ளது. கேட்டு தெரிந்து கொள்ளும் பக்குவத்தில் உள்ளது.



Rate this content
Log in

Similar tamil story from Thriller