விவசாயி
விவசாயி


விதைப்புக்கு தண்ணீர் இல்லைன்னு சொன்னோம்..தந்த கடவுள் இப்ப களை வர்றப்ப இறங்க விடாமல் செஞ்சுட்டாரே! இந்த வருடம் சாப்பாட்டுக்கு என்ன செய்யறது.....
நாம என்ன தப்பு செய்தோம்னு கடவுள் இப்படி தண்டிக்கிறார்னு தெரியலையேன்னு கதறி அழத் தொடங்கினார் குப்பன்.
இந்த வருடம் பொண்ணுக்கு விவசாயத்தை நம்பி கல்யாணம் வச்சிருக்கேன். இப்படி பண்ணிட்டாங்களே!
ஆளாளுக்கு அவரவர் பிரச்னைகளை ஆஞ்சநேயர் கோவிலில் உட்கார்ந்து முகமூடிகளை மாட்டி பேசியபடி இருந்ததைக் கண்ட பெருமாள் ஸ்ரீதேவியிடம் பேச ஆரம்பித்தார்.
தேவி,பூலோகத்தில் என்ன ஒரே ரகளை?
விவசாயிகள் ஊரடங்கில் இருப்பதால் விவசாயம் பாதிக்கிறதாம் சாப்பிடவே அரிசி,கடலை இல்லையென்றால் நாளை எதை சாப்பிடுவார்கள் என்ற கேள்விதான்.
நேற்றே இது குறித்து நபியிடமும்,புத்தரிடமும்,இயேசுவிடமும் கேட்டிருந்தேன்.
என்று சுயநலமில்லாமல் உலக மக்கள் ஒன்று திரண்டு நாம் போதித்த அன்பு தத்துவத்தை பின்பற்றுகிறார்களோ அன்றுதான் கரோனா போகும்,தீயவர்கள் பணத்தை மக்களுக்காகச் செலவிடவேண்டும் என்றும் சொல்லி விட்டனர்.
விவசாயிக்கு மட்டும் இதிலிருந்து விடுதலை அளிக்கக்கூடாதா நாதா!
இயற்கை உரம் போடமல் செயற்கை உரம் போட்டு விவசாயத்தைச் செய்கிறார்கள் என மண்மாதா உரக்க அழுகிறாள்.
காளைகளை வளர்க்காமல் இனப்பெருக்கம் செய்ய மருத்துவத்தை நாடுவதாக நாரதர் சொல்கிறார். வட்டி வாங்கி இப்படி செய்ய வேண்டுமா? இதுவா விவசாயம்?
நாதா! பொறுத்தருள வேண்டுகிறேன் ..இனி விவசாயம் நகரத்து மக்களும் செய்வார்கள்.தயவு செய்து எமதர்மராஜனைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள். கோபம் வேண்டாம்...மக்கள் மிகுந்த துயரத்தில் இருக்கிறார்கள்.தகுந்த மருத்துவம் இல்லையென்றால் அவர்கள் பாடு திண்டாட்டமாகிவிடும்.
அநீதிகள் பெருகும்போது புவிபாரம் குறையவேண்டும் என்பது விதியம்மா!