STORYMIRROR

Velumani Velumani

Comedy Crime Thriller

3  

Velumani Velumani

Comedy Crime Thriller

வெணிலா புடிங் கொள்ளை.

வெணிலா புடிங் கொள்ளை.

1 min
248


(வங்கிக்(?) கொள்ளையை மையமாய் வைத்து புனையப்பட்ட நகைச்சுவை.

படித்து முடித்து விட்டு சிரிப்பு வராதவர்கள் மருத்துவரை பார்த்தல் நலம்)


ஓர் நள்ளிரவு,

முன்னரே வங்கியின் வாட்ச்மேன் மூலம் வங்கியின் அலாரம் செயலிழந்ததை அறிந்த ஐந்து கொள்ளையர்கள், வங்கி கதவை நவீன யுத்தியால் திறந்து மிகச் சாதுர்யமாக உள்ளே நுழைந்தனர்.


அங்கே மிகப் பெரிய காற்று புகா எலெக்ட்ரானிக் லாக்கரை கண்டனர்.

குளிர் வேறு அதீதமாயிருந்தது.

என்ன கருமம்டா இது ? என்று நன்கு போர்த்திக் கொண்டனர்.


லாக்கரை மிக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் திறந்து உள்ளே பார்த்தால், பணமோ,வைரங்களோ,நகையோ,தங்கக் கட்டிகளோ இல்லை. மாறாக வெணிலா புடிங் அடைக்கப்பட்ட டப்பாக்கள் மட்டுமே இருந்தன.


மனம் தளரா கொள்ளையர்கள். மற்ற காற்று புகா எலெக்ட்ரானிக் லாக்கர்களையும் வெறியுடன் திறக்க எல்லாவற்றிலும் வெணிலா புடிங் அடைக்கப்பட்ட டப்பாக்கள் மட்டுமே இருந்தன.


நீண்ட போராட்டமாதலால் அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக பசித்தது. திருட வந்த இடத்தில் கை நனைக்க கூடாது என்ற கொள்கையை தளர்த்தி, சுமார் 1500 வெணிலா புடிங் டப்பாக்களை ஐந்து கொள்ளையர்களும், வந்த வரையில் லாபம் என்று போட்டிபோட்டு உள்ளே தள்ளினர்.


கடைசியில் விதியை நொந்து கொண்டு வெளியேறிய கொள்ளையர்களுக்கு எஞ்சியது வயிறு அசவுகரியம் மட்டுமே.

--

-

-

-

- மறுநாள் செய்தித்தாளில் வந்த தலைப்புச்செய்தி:-

அயர்லாந்தின் பிரபல விந்து வங்கி உடைக்கப்பட்டது.

ஆயிரத்திஐநூறுக்கும் மேற்ப்பட்ட விந்து மாதிரிகள் சேதம்.

கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்


Rate this content
Log in

Similar tamil story from Comedy