உதவி பண்ணுங்க சாமீ"
உதவி பண்ணுங்க சாமீ"


வீட்டு வேலை செய்யும் பெண்உண்மையைச் சொல்லணும்னா கொரோனா எங்களோட வாழ்க்கையையே திருப்பிப் போட்டுட்டுப் போயிருச்சு. நாங்க காசு பணமெல்லாம் எடுக்க மாட்டோம்னு எங்களை நம்பி வீட்டுக்குள்ளவிட்டவங்க கூட, இப்போ கொரோனா பரவிரும்னு வீட்டுக்குள் விடமாட்றாங்க. நான் ஆறு வீட்டில் வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வேலை இருக்கும்... மாசம் 20,000 ரூபாய்க்கு மேல கிடைக்கும். இந்த ஊரடங்கு அறிவிச்சதால் வருமானமே இல்லாம போயிருச்சு. வீட்டில் இருக்கிறதை வச்சு சமாளிச்சுட்டு இருக்கோம். படிக்கலைனாலும் மாசம் 15,000 ரூபாய் வீட்டுக்குக் கொடுத்தாதான் எங்க குடும்பத்துல எங்கள மதிச்சுட்டு இருந்தாங்க. இப்போ அந்த மரியாதையை இழந்துட்டோம். எங்களுக்குனு எந்த அடையாள அட்டையும் இல்லாததால் அரசுடைய உதவியும் கிடைக்காதுனு சொல்றாங்க. ஆனாலும் அரசாங்கத்தை நம்புகிறதைத் தவிர வேறவழியில்ல... உதவி பண்ணுங்க சாமீ" என கைகூப்பி விடைபெறுகிறார்.