தனிக் கதை
தனிக் கதை


எங்க கிராமத்து ஓராசிரியர் பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன்.
முற்பகலில் பத்து நிமிடமும் பிற்பகலில் பத்து நிமிடமும்தான் எங்களுக்கு ‘ஒன்னுக்கு’ப் போக அனுமதி. மற்ற நேரங்களில் எதிரே நின்று ஒருவிரல் காட்டினால், மண்டையில் கொட்டி உட்கார வைத்துவிடுவார் ஆசிரியர்.
மதிய உணவுக்குப் பிறகு, நாற்காலியில் உட்காந்துகொண்டே கொஞ்ச நேரம் தூங்கித் தூங்கி விழுவார். நான் அவர் முன்னால் போய் ஒரு விரல் நீட்டி நின்றுகொள்வேன். அவர் தலை முன்னோக்கிச் சரியும்போது, அதை அவரின் சம்மதமாக எடுத்துக்கொண்டு வெளியே போய்விடுவேன். என்னை அடியொற்றி ஒரு பத்துப்பேராவது வெளியேறுவார்கள். இது பல நாள் சம்பவம். ஒரு நாள் அகப்பட்டுக்கொண்டு நானும் என் சகாக்களும் முதுகு பழுக்க அடி வாங்கியது தனிக் கதை.
தனிமையில் இருக்கும்போது இதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வதுண்டு.