தகுதி
தகுதி


வீடு நிறைய ராக்கி கயிறுகளைத் தயாரித்துக்கொண்டிருந்த சீதா சத்தம் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள். லாக்டவுன் சமயத்தில் என்னம்மா செய்துட்டு இருக்கீங்க?
போனமுறை அம்மாவுக்கு நிறைய வருமானம் வந்தது. கடையில் உனக்கு வாங்கித்தந்தேன். இந்தமுறை அம்மாவா செய்துட்டேன் கௌசல்யா என்றாள்.
இந்தமுறை காலேஜ் கிடையாதும்மா! அதனால் நோ ராக்கிடேம்மா! இதையும் ஆன்லைன்லயா கட்ட முடியும்?
ஐலவ்யு சொன்னான்னு ஒரு பையனுக்கு இந்த வருஷம் கட்டணும்னு சொன்னியே!
அவன் வேற லவ்வரைத் தேடிட்டு ஓடிட்டான். ராக்கி கயிறு மிச்சம்!
நம்ம ஃப்ளாட் வாட்ச்மேனுக்குக் கட்டணும்!
ஏன்?
பாப்பான்னு சொல்லிட்டு கண்ட இடத்துல க
ை வைக்கப் பார்க்கிறான்.
குடிச்சிருக்கானா?
இந்த சென்னையில் அவனுக்கு எப்படி பாட்டில் லாக்டவுனில் கிடைக்கிறதென்றே புரியவில்லை! ஃபிளாட் காம்பவுண்ட் சுவர் வெளியில் பாதைக்கு என இருக்கும் இடத்தில் மது பாட்டிலாக இருக்கிறது.
அதுதான் வடபழனி! பின் எப்படி கொரானா குறையும்? பாலியல் வன்முறை குறையும்? என்று புரியவில்லை.
இந்தமாதிரி இருக்கிறவனுக்கு நீ ராக்கி கயிறு கட்டணும்னு நினைக்கிறது தப்பு! சகோதரனாக இருக்கிறதுக்கும் தகுதி வேணும்! என்றபடி ராக்கி கயிறில் ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியைக் கையில் எடுத்தபடி நகர்ந்தாள்.
எங்கே எடுத்துச் செல்கிறாய்?
கடையில் போட்டு காசாக்கப் போகிறேன் என்றபடி வேகமாக நடந்தாள்.