பறக்கும் மிதிவண்டி
பறக்கும் மிதிவண்டி


அப்பா! நான் இந்த நோய் காலத்தில் ஒரு சைக்கிள் தயார் செய்யப்போறேன்.
போய் தூங்குப்பா!
நிஷா தன் பங்கிற்கு அண்ணனுடன் சேர்ந்து பழைய புத்தகங்களை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
எனது சைக்கிளுக்கு இறக்கைகள் மட்டும் இருந்தால் அம்மா இருக்கும் இடத்திற்குப் பறந்து போய் உதவிகள் செய்துவிட்டு வந்துவிடுவேன்.
ப்ச்!
அப்பா குடிக்கிறார்னு அம்மா ஒதுங்கிப் போய்ட்டாங்க!
நம்மளை யார் நினைச்சாங்க!
பள்ளியிலாவது ஏதோ ஆதரவா நாலு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுவோம். இப்ப பள்ளியும் கிடையாது.
முதலில் நீ முதலில் அட்டையில் வெட்டிக்காட்டு நிஷா!
எடிசன்மாதிரி போய்டப்போகுது!
ஆகாயம் கண்டுபிடிச்சப்ப அப்படித்தான் வந்தது. எதுவுமே தேவைக்குத்தான் கண்டுபிடிப்பே ஆரம்பமாகும்.
நீ என்ன சொல்ல வர்றே.......
சுற்றுப்புறச் சூழலைப் பாழாக்குறோம்னு அன்னைக்குத் தெரியாமல் ஆகாயவிமானம்,பைக்,கார்னு கண்டுபிடிச்சு பயன்படுத்தறோம். நம்ம வசதியைத்தான் பார்த்தோம். ஆனால் சீவகசிந்தாமணியில் எந்த கெமிக்கலும் இல்லாமல் மயில்பொறி உருவாக்குற முறை இருந்துச்சு...இயற்கையைப் பயன்படுத்தித்தான் வாழ்க்கை. அது திரும்பவும் வந்தால் சரியாகப்போகும்.
காலம் சேமிக்கிறதுக்குத்தான் இந்த பறக்கும் மிதிவண்டி.
நேரமாச்சு! வா தூங்கப் போகலாம். கனவுலயாவது அப்பாவும்,அம்மாவும் நம்ம செய்யப்போகிற பறக்கும் மிதிவண்டியில் ஒண்ணா சவாரி சிரிச்சுக்கிட்டே செய்ய வருவாங்களான்னு பார்ப்போம்.ஒரு காரியம் நினைச்சுக்கிட்டே படுத்தால் அப்படியே நடக்குமாம்!!! அப்ப மதுவிலக்கு வரணும்னு வேண்டிகிட்டே படு!