பெண்கள் பாதுகாப்பு செயலி
பெண்கள் பாதுகாப்பு செயலி


சன்னலோரமாக மணத்துக் கொண்டிருந்த மல்லிகைப்பூவைப் பார்த்தபடி பத்மா நின்று இருந்தாள்.
டேய்! போதுமா லூசுப். ..பையா....குறும்படம் எடுக்கிறேன்னு சொல்லி காலேஜ்ல படிச்சிட்டிருக்கிற என்னை கொண்டாந்து வச்சிருக்கே. .. உன் மனைவியும் மாமனார் வீடும் பக்கத்துலதான்டா இருக்கு....உன் மனைவியை நடிக்க வை! ......ஏண்டா என்னைப்போட்டு தொல்லை இத்தனை பண்றே..உன்கூட படிச்சேன்...அதுக்காக தெரியாமல் நான் விளையாட்டுக்கு எழுதிய காதல் கடிதத்தை வச்சே என்னை வளைக்கறியா...என முகத்திலிருந்த மேக்கப்பை கலைக்க ஆரம்பித்தாள் பத்மா.
ரொம்ப பேசாதே பத்மா.........சினிமாவுல ஒரு உன்னத இடத்தை நான் அடையணும்னு நினைக்கிறேன்.
அதுக்காக ஒருநாள் முழுவதும் நிற்க முடியுமா? என் கடிதத்தை எல்லாம் கொடுத்துடுடா! என்று சொல்லியபடி மொபைலை அழுத்தினாள்.
சும்மா ஏதோ மொபைலில் விளையாடுகிறாள் என நினைத்திருந்த அவனுக்கு கதவை போலிஸ் தட்டி இழுத்துச் சென்றபின்தான் தான் செய்த தவறு அவனுக்குப் புரிய ஆரம்பித்தது.