பாடம்
பாடம்


ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எல்லாவற்றிற்கும் விடுமுறை. மேலும் வெளியில் யாரும் நடமாடக் கூடாது என்ற வந்து உத்தரவு வேறு. எல்லோரும் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்து தின்று தின்று.
குண்டாகி விட்டனர்.அம்மாவிற்கு சர்க்கரை ஏறிவிட்டது. அப்பாவிற்கு பிரஷர் ஏறிவிட்டது. குழந்தைகளுக்கு எடை கூடிவிட்டது.என்ன செய்வது?எந்த ஒரு செயலிலும் நலனும் உண்டு. தீமையும் உண்டு.குழந்தைகளுக்கு உடம்பில் ஒரே. புண்கள்.
ஒருவரை ஒருவர் அடித்து பின்னி பிராண்டி கொண்டு.அப்போதுதான் புரிந்தது .ஆகா வீட்டில் அனைவரும் சேர்ந்து இல்லையே என்ற வருத்தமும் இப்போது மாறிவிட்டது.அந்தந்த செயல்கள் அந்தந்த நேரத்தில் நடந்தால் தான் எதற்குமே மதிப்பு
குரானா கற்றுத். தந்த பாடம்.
எப்ப நடமாட்டம் ஆரம்பிக்கும்? அம்மா அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச். செல்ல வேண்டும். இதுதான் மூத்த பிள்ளையின் கவலை இப்போது.