ஒற்றுமை
ஒற்றுமை


ஒரு ஏழை விவசாயி அவர் மனைவி, நிலத்தில் பாடுபட்டு உழைத்து வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
அவர்கள் தரித்திரம் விடியவே இல்லை. என்றாவது ஒரு நாள் விடியும் என்று இருவரும் மனம் தளராமல் விவசாயத்தை செய்து வந்தனர்.
கணவனும் நல்ல நிலபுலன்கள் வாங்கி இருந்தால் அதை நாம் அறுவடை செய்து சுகமாக வாழலாம் நீண்டகாலம் என்றான்.
ஒரு நாள் அவர்கள் வேலை செய்த போது ஒரு பூதம் வெளியே வந்தது.
நல்ல பூதம்அது.இருவரையும் பார்த்து கணவன் மனைவியை. நீண்ட நாட்களாக சிறைபட்டு கிடந்தேன் .என்னை விடுவித்து அதற்கு நன்றி என்று கூறி உங்களுக்கு ஏதேனும்வரம் தர விரும்புகிறேன் .என்னை காப்பாற்றியதற்கு நன்றி என்று கூறியது.
மூன்று வரம் தர என்னால் முடியும் என்று பூதம் கூறியது.
உடனே விவசாயின் மனைவி விவசாயி காதில் சொன்னாள். நாம் இப்போது அந்த வரத்தை கேட்க வேண்டாம் .பிறகு யோசித்து கேட்கலாம் என்று.சிறிது கால அவகாசம் கேட்டனர்.பின் வீட்டிற்கு சென்று கணவனும் மனைவியும் என்ன கேட்கலாம் என்று நீண்ட நேரம் ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டனர்
அப்போது மனைவி சொன்னாள் .நமக்கு இப்போது அறுசுவை உணவு இருந்தால் நாம் சாப்பிடலாமே என்றாள்.
உடனே என்ன ஆச்சரியம் இரண்டு தட்டுகளில் அருமையான சுவையான உணவு வந்து வந்தது.விசாயி சொன்னான் இந்த உணவிற்காக நீ நேரத்தை வீணடித்து விட்டாயே. இந்த உணவு எல்லாம் அலமாரியில் வைத்துப் பூட்டி கொள் நீ .
என்ன ஆச்சரியம் உடனே உணவு
அலமாரிக்குள் சென்று மூடிக்கொண்டது.
பிறகு அவள் அந்த சாப்பாடு வெளியே இருந்தால் நல்லா இருக்குமே என்றாள்.
சாப்பாடு வெளியே சென்று விட்டது.
ஆக அற்புதமான மூன்று வரத்தை அநியாயமாக வீணடித்து விட்டார்கள். கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒற்றுமை இல்லாமல்.இப்படித்தான் நாமும் நம் வாழ்வில் பல அரிய பொக்கிஷங்களை ஒற்றுமையின்மையால் இழந்து கொண்டிருக்கிறோம்.