saravanan Periannan

Inspirational

4.8  

saravanan Periannan

Inspirational

நெல்மணிகள் எழுதியவர் சரவணன் பெரியண்ணன்

நெல்மணிகள் எழுதியவர் சரவணன் பெரியண்ணன்

2 mins
370


கிரிஷ் தன்னுடைய தொலைக்காட்சி நேரலைக்காக அவனுடைய நண்பர்களோடு கலையூர் எனும் கிராமத்தை நோக்கி சென்றுகொண்டு இருந்தனான்.

அவன் மனதில் ஒரு கேள்வி ஒடிகொண்டே இருந்தது.

எந்தவொரு தந்தையும் தன் மகன் தன்னைவிட உயர்ந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்றே உழைப்பார்கள்.

ஏனேனில் அந்த வேலை ஒரு தந்தைக்கு மரியாதை,உரிய சம்பளம் அல்லது நல்மதிப்பை தேடி தராமல் இருக்கலாம்.

ஆனால் மக்கள் கடவுளாக கும்பிட வேண்டிய விவசாயிகளில் சிலர் தன் மகன் விவசாயத்தை தவிர வேறு எந்த வேலை செய்தாலும் பரவாயில்லை என ஏன் நினைக்கின்றனர்?


கலையூர் கிராமத்தை வந்து அடைந்த உடன் கிராம மக்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்றனர்.

கிரிஷ் நேர்காணல் செய்ய போகும் நபர் அய்யா நல்லகண்ணு அவர்கள்.

இங்கு பலர் அய்யா எனும் வார்த்தையை கூட மறந்து போயிருப்பார்கள்.

அய்யா நல்லகண்ணு,ஒரு இயற்கை விவசாயி.

கலையூர் கிராமத்தில் விவசாயம் உயிர்ப்பித்திருக்க காரணம் இவர் தான்.

நல்லகண்ணு அவர்கள் சிறு வயது முதல் தன்னுடைய ஆர்வத்தினால் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.

அவர்கள் கிராமத்தையும் காவேரி தாய் தன்னுடைய நீரினால் நனைத்தப்படி சென்றாள்.

அந்த கிராமத்தில் ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

அது தன்னுடைய ‌கழிவுகளை நீருடன் அந்த ஆற்றில் கலந்தது.

ஆறும் தன்னுடைய‌ சுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது.

நல்லகண்ணு ‌வருத்தப்பட்டார்,அத்துடன் நிற்கவில்லை தன்னுடைய பங்களிப்பாக ஆற்றை சுத்தம் செய்ய கோரி போராட ஆரம்பித்தார்.


தன்னுடைய சொந்த முயற்சியினாலும் அதனுடன் அரசாங்க உதவியையும் சேர்த்து அந்த ஆற்றை சுத்தம் செய்தார் இரண்டே ஆண்டுகளில்.

அந்த தொழிற்சாலைக்கு கடுமையான விதிமுறைகளை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கிரிஷ் உண்மையிலேயே ஆனந்தம் அடைந்தான் அவரை நேர்காணல் செய்ய போவதற்காக.


அடுத்த நாள் அவருடைய இல்லத்திற்கு சென்று அவரை நேர்காணல் செய்ய ஆரம்பித்தான்.

கிரிஷ்:  நல்லகண்ணு அய்யா வணக்கம்

நல்லகண்ணு அய்யா: வணக்கம் 

கிரிஷ்:  அய்யா தங்களுக்கு எப்படி போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது?

நல்லகண்ணு அய்யா: தம்பி,பிரச்சனை நம்மளோடது அப்ப நம்மதான்‌ களத்திலே இறங்கி போராடனும்.

கிரிஷ்: அய்யா விவசாயிகள் சந்திக்கிற பிரச்சனைகள் என்னது?

நல்லகண்ணு அய்யா : விவசாயி எவ்வளவு சொத்து சேர்த்தாலும் அவன் கிட்ட இருக்கிற ஒரே நிரந்தர சொத்து அவனோட விவசாய நிலம்.

அதே அவனை விக்கிற நிலைமைக்கு தள்ரது தான் தம்பி.

மருத்துவ செலவு ,கல்வி இதுக்கு நிலத்தை அடமானம் வச்சுட்டு கஷ்டப்படுறாங்க.

மருத்துவம்,கல்வி இலவசமாக கிடைச்சா பயனடைய போறது விவசாயி மட்டும் இல்ல, நம்ம எல்லாரும் தான்.


கிரிஷ்: அய்யா இது என்னோட கேள்வி 

எந்தவொரு தந்தையும் தன் மகன் தன்னைவிட உயர்ந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்றே உழைப்பார்கள்.

ஏனேனில் அந்த வேலை ஒரு தந்தைக்கு மரியாதை,உரிய சம்பளம் அல்லது நல்மதிப்பை தேடி தராமல் இருக்கலாம்.

ஆனால் மக்கள் கடவுளாக கும்பிட வேண்டிய விவசாயிகளில் சிலர் தன் மகன் விவசாயத்தை தவிர வேறு எந்த வேலை செய்தாலும் பரவாயில்லை என ஏன் நினைக்கின்றனர்?

ஏன் அய்யா?


நல்லகண்ணு அய்யா:  தம்பி விவசாயி மகன் தான் விவசாயி ஆகனுமா?

ஏன் நீங்க எல்லாம் விவசாயம் பண்ண மாட்டீங்களா.

படிச்சவன் விவசாயம் பண்ண கூடாதுனு என்ன சட்டமா இருக்கு.

எல்லாரும் விவசாயம் பண்ண கத்துக்கணும் எனா அது நம்ம வாழ்க்கையோடு அடிப்படை.


கிரிஷ்: இளைஞர்களுக்கு எதாவது அறிவுரை‌ சொல்லுங்க அய்யா.

நல்லகண்ணு அய்யா:  படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலான வேலைக்கு முயற்சி பண்ணுங்க.

விவாசாயம் சம்பந்தமான படிப்பையும் எடுத்து படிங்க.

எதுனாலனா விவசாயம் நம்மள உசுரோடு வாழ வைச்சு காப்பத்துற சாமி.

கிரிஷ்:  நன்றி அய்யா.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational