முதலில் உதவி,,மோசடி
முதலில் உதவி,,மோசடி


முதலில் உதவி செய்தேன்; பிசினஸ் நஷ்டமடைந்ததும் மனம் மாறினேன்!"- தொழிலதிபர் டு ஏடிஎம் கொள்ளையன் பார்த்தசாரதி
` முதலில், ஏடிஎம் மையத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு உதவி செய்தேன். பின்னர், என்னுடைய பிசினஸ் நஷ்டமடைந்ததும் மோசடியில் ஈடுபடத் தொடங்கினேன்' என்று ஏடிஎம் கொள்ளையன் போலீஸாரிடம் கூறியுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில், ஏடிஎம் மையத்தில் சீனியர் சிட்டிசன் பிரபாகரனிடம் உதவி செய்வதுபோல நடித்து, 50,000 ரூபாயை ஏமாற்றிய பார்த்தசாரதியை உதவி கமிஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீஸார் கைது செய்துள்ளனர். பார்த்தசாரதியிடம் போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. ஒருகாலத்தில் தொழிலதிபராக இருந்த பார்த்தசாரதி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடியில் ஈடுபட்ட தகவல்களை விசாரணை அதிகாரிகள் நம்மிடம் கூறினர்.
`ப்ளீஸ் ஹெல்ப் பண்ண முடியுமா?' -ஏடிஎம் மையத்தில் உதவி கேட்ட கணக்காளருக்கு தொழிலதிபர் கொடுத்த`ஷாக்'
`ப்ளீஸ் ஹெல்ப் பண்ண முடியுமா?' -ஏடிஎம் மையத்தில் உதவி கேட்ட கணக்காளருக்கு தொழிலதிபர் கொடுத்த`ஷாக்'
ஹெல்மெட் அணிந்து செல்லும் பார்த்தசாரதி
ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை நுழைத்து பின் (ரகசிய) நம்பர்களை டைப் செய்யும் பார்த்தசாரதி, தொகையை குறிப்பிடுவதற்குப் பதிலாக கேன்சல் பட்டனை அழுத்திவிடுவார். அதனால் பணம் வராது. அப்போது ஏடிஎம் இயந்திரத்திலிருந்து கார்டை எடுக்கும் பார்த்தசாரதி கண்இமைக்கும் நேரத்தில் தன் கையில் வைத்திருக்கும் ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு வெளியில் சென்றுவிடுவார்.
போலீஸ்
இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் கூறுகையில், ``சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி, விருகம்பாக்கத்தில் டெக்ஸ்டைல்ஸ் கடை நடத்திவந்துள்ளார். ஆரம்பத்தில் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததும் சந்தோஷமாக குடும்பத்தினருடன் வாழ்ந்துவந்துள்ளார். பணமதிப்பிழப்பு, தொழிலில் நஷ்டம் ஆகியவற்றால் பார்த்தசாரதியின் வாழ்க்கை தடம் மாறியுள்ளது. டெக்ஸ்டைல்ஸ் கடையில் நஷ்டம் ஏற்பட்டதும் ஆன் லைன் மூலம் தொழில் செய்துவந்துள்ளார். அதிலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. தனக்குத் தெரிந்த கார்மென்ட்ஸ் தொழிலை நம்பியிருந்த பார்த்தசாரதி, அம்பத்தூர், ஆவடி பகுதியில் பிளாட்பாரத்தில் துணி வியாபாரம் செய்துவந்துள
்ளார். அதிலும் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை.
இந்தச் சமயத்தில், ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது முதியவர் ஒருவர், சார்... கொஞ்சம் பணம் எடுக்க உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். உடனே பார்த்தசாரதி, அந்த முதியவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுத்துள்ளார். தற்போது பணநெருக்கடியிலிருந்த பார்த்தசாரதிக்கு ஏடிஎம் கார்டு மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனை வந்துள்ளது. அதனால் ஏடிஎம் மையங்களுக்கு அடிக்கடி சென்ற பார்த்தசாரதியிடம், ஏடிஎம் கார்டை பயன்படுத்த தெரியாதவர்கள் உதவிகள் கேட்கும்போது அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளார். இதற்காக, பழைய ஏடிஎம் கார்டுகளைச் சேகரித்துள்ளார். அந்தக் கார்டுகளுடன் ஏடிஎம் மையங்களுக்குச் செல்லும் பார்த்தசாரதி, பணம் எடுக்க வரிசையில் நிற்பவர்களுடன் காத்திருப்பார்.
அப்போது, பணம் எடுக்கத் தெரியாதவர்கள் உதவி எனக் கேட்டவுடன், அவர்களுக்கு ஹெல்ப் பண்ணுவதைப் போல நடிப்பார். ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை நுழைத்து பின் (ரகசிய) நம்பர்களை டைப் செய்யும் பார்த்தசாரதி, தொகையை குறிப்பிடுவதற்குப் பதிலாக கேன்சல் பட்டனை அழுத்திவிடுவார். அதனால் பணம் வராது. அப்போது ஏடிஎம் இயந்திரத்திலிருந்து கார்டை எடுக்கும் பார்த்தசாரதி, கண்இமைக்கும் நேரத்தில் தன் கையில் வைத்திருக்கும் ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு வெளியில் சென்றுவிடுவார். பணம் ஏன் வரவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அந்த ஏடிஎம் கார்டை அருகில் உள்ள இன்னொரு ஏடிஎம் சென்டருக்குச் சென்று முதலில் எவ்வளவு தொகை கார்டில் இருக்கிறது என்பதைப் பார்ப்பார். பின்னர், கார்டிலிருக்கும் முழுத் தொகையையும் எடுத்துவிட்டு, அந்தக் கார்டையும் கையோடு கொண்டுசென்றுவிடுவார்.
அடுத்து, ஏடிஎம் மையத்தில் உதவி கேட்பவர்களிடம் தன்னிடம் இருக்கும் ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு, அவர்களின் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்துவிடுவார். இப்படி மோசடி செய்து 28 ஏடிஎம் கார்டுகளை வைத்திருந்தார். பார்த்தசாரதி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறைக்குச் செல்வதும் பிறகு வெளியில் வருவதும் அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. கார்மென்ட் பிசினஸை பகுதி நேரமாகச் செய்துவந்தவருக்கு, முழுநேர தொழிலாக ஏடிஎம் கார்டு மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளார்.