Harini Ganga Ashok

Fantasy Thriller


4.7  

Harini Ganga Ashok

Fantasy Thriller


மர்ம தேசம்

மர்ம தேசம்

2 mins 314 2 mins 314

சோனு சரியான சுட்டி பையன். அவன் கூட்டாளிகளுடன் சேர்ந்துவிட்டால் அவனின் சுட்டித்தனத்திற்கு அளவில்லாமல் போய்விடும். எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு இடத்தில் இருக்க அவனால் முடியவே முடியாது. பல வாலுத்தனங்கள் செய்து அக்கம் பக்கத்தினர் குற்றப்பத்திரிகையும் வாசிப்பர் அவனின் வீட்டின் முன் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதே இல்லை.


அன்று அவனின் நண்பன் ஒருவன் ஊருக்கு புது மந்திரவாதி வந்திருப்பதாகவும் அவனுக்கு நிறைய மந்திர வித்தைகள் தெரியும் என்று எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள் என்ற செய்தியை சோனுவிற்கு தெரியப்படுத்தினான். கிடைத்த வாய்ப்பை அவன் எப்படி விடுவான். அவனின் மூளை சுட்டித்தனத்தை தொடங்க ஆரம்பித்து விட்டது.


மந்திரவாதி அவரின் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அந்த சுட்டிப்பட்டாளாம் வீட்டுக்குள் நுழைந்தது. தேடுதல் வேட்டையை தொடங்கியது. ஒவ்வொரு சுட்டியும் தனக்கு பிடித்ததை எடுத்து பையில் போட்டுக்கொண்டே வந்தது. நம் சோனு தான் பயங்கர வாலு ஆச்சே. நான் இருக்றதுலயே வித்தியாசமா எடுப்பேன் பாருங்கன்னு சொல்லி அவன் ஒரு பக்கம் தேடினான். அவன் கையில் கிடைத்தது ஒரு பழையகாலத்து டைரி அதை பிரித்து படிக்க ஆரம்பித்தவுடன் அவன் அதனுள் சென்றுவிட்டான். நண்பர்கள் திகைத்துவிட்டனர். ஒன்றிரெண்டு பேர் அந்த டைரியை படித்து அதனுள் சென்றுவிட்டனர். மற்றவர்கள் விரைந்து தன் தாய் தந்தையருக்கு தகவல் அளித்தனர்.


ஒவ்வொரு சுட்டியும் அவரவர் படித்த பக்கத்தினுள் சென்றுவிட்டனர். அங்கு போய் பார்த்தால் அநேக மக்கள் இருந்தனர் ஒரு இடத்தில் மற்றொரு புறம் விலைமதிப்பற்ற எண்ணற்ற பொருட்கள் கொட்டி கிடந்தனர். அதற்கடுத்த இடத்தில் மக்கள் கயிற்றில் கட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அங்கு இருந்த மரம் செடி கொடி என அனைத்தும் பேசியது. இதனையும் பார்த்த அந்த மூன்று சுட்டியும் மயங்கிவிழாத குறையாக நின்றிருந்தனர்.


சோனு அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான். அதில் அந்த மந்திரவாதி சைக்கோ என்றும் அவனை எதிர்த்தால் என்ன வேணாலும் செய்வான் சென்றனர். சிலர் அவன் முட்டாள் என்றனர். சிலர் பழிவாங்க அடைத்து வைத்துள்ளான் என்றனர். அவனுக்கு எது உண்மை என்று விளங்கவில்லை. இங்கு இருந்து தப்பிப்பதை பற்றி யோசிக்காமல் அங்குள்ளவர்களின் நிலையை சிந்திக்க ஆரம்பித்தான். தாகம் எடுக்க பக்கத்தில் உள்ள ஆற்றை நெருங்கினான். அங்கே நதியில் அவனுக்கு இங்குள்ளவர்கள் நிலைக்கு காரணம் என்ன என்று தெரியவந்தது.


மந்திரவாதியின் தந்தை மீது கோவில் சிலை மற்றும் நகைகளை திருடியது அவர்தான் என்று குற்றம் சாட்டி அந்த ஊர்மக்கள் அவர் தரப்பு வாதத்தை கேட்காமலே அவரை கிணற்றுக்குள் உயிருடன் தள்ளிவிட்டனர். இதனை கண்ட மந்திரவாதி ஊர்மக்களை தாக்கியபோது அவனை கம்பம் ஒன்றில் கட்டி சாட்டையால் அடித்தனர். செய்யாத தப்பிற்கு அவனும் அவன் தந்தையும் தண்டனை அனுபவிப்பதற்கு காரணமான அந்த ஊர்மக்களுக்கு தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சூளுரைத்தான். அதன்படி அவர்களை அந்த மந்திரபுத்தகத்தில் கைது செய்து வைத்தான். தான் செய்தது தவறு என்று அந்த மக்கள் உணருவரும் வரை அங்கேயே வைத்திருந்தான். தப்பை ஒப்புக்கொண்டவர்கள் உணர்ந்தவர்களை மட்டும் விடுவித்து வந்தான். எந்த சிலை கோவில் சொத்துக்களை அபகரிக்க அவனின் தந்தை மீது பழி சுமத்தினார்களோ அதனையும் அவன் வாசம் ஆக்கிக்கொண்டான்.


இதை தெரிந்துகொண்ட சோனு அங்குள்ள மக்களிடம் பேச ஆரம்பித்தான். நம்மை படைத்தவருக்கு நமக்கு என்னை வேண்டும் நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எல்லாம் தெரியும். மனதில் பேராசையோ பொறாமையோ இருத்தல் கூடாது. அதைவிட பெரிய நோய் இவ்வுலகில் எதுவும் இல்லை. தவறு செய்வது இயல்பு தான் ஆனால் செய்த தவறை ஒப்புக்கொள்ளுதல் வேண்டும் தவறை உணர்ந்து அதற்கு பின் செய்யாமல் இருத்தல் வேண்டும். அநீதி என்று தெரிந்தும் துணை போக கூடாது. இவ்வுலகில் பணத்தை விட முக்கியமானது உறவுகள் நம்மை சுற்றி உள்ளவர்கள். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. யாரிடமும் பகைமை பாராட்டாமல் இருப்பது நல்லது என்றான். அந்த சுட்டித்தனம் நிரம்பிய குழந்தை வாழ்க்கையின் யதார்த்தத்தை உண்மையை அனைவர்க்கும் கூறிக்கொண்டிருந்தது.


அனைவரும் தங்களின் தவறை உணர்ந்துகொண்டனர். அனைவரும் விடுபட்டனர். சோனு மற்றும் அவனின் இரு நண்பர்களுடன் மக்கள் அனைவரும் வெளிப்பட்டனர். பிள்ளைகள் வந்துவிட்ட நிம்மதியில் பெற்றோர் நின்றிருந்தனர். சோனு அந்த மந்திரவாதியிடம் சென்று நான் அதற்குள் செல்ல வேண்டிய காரணம் ஏன் வந்தது என்று வினவினான். அதற்கு அந்த மந்திரவாதி புன்னகையுடன் சில முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் மர்மாக இருந்தால் தான் வாழ்வில் சுவாரசியம் இருக்கும் என்று கண்சிமிட்டி மறைந்தான்.


Rate this content
Log in

More tamil story from Harini Ganga Ashok

Similar tamil story from Fantasy