❤️ மன்னிப்பாயா தாரகையே ❤️ 9
❤️ மன்னிப்பாயா தாரகையே ❤️ 9
பவித்ராவை பார்த்து அதிர்ந்த கபிலனுக்கு அவளையும் அவள் பிள்ளைகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.பவித்ரா தன்னை சமாளித்துக் கொண்டு ஹாலோ சொல்ல.ஆனால் அதிர்ச்சியில் இருந்து மிள முடியாத கபிலன் தினறலாக ஹாலே சொன்னான்.
தாத்தா நேரம் ஆகிறுச்சு டாக்டர் வெய்ட் பன்றாங்க வாங்க போகலாம் என்றால் .
இருமா பிள்ளைங்களை ஏன் கூட்டிட்டு வந்த என்றார்.
இல்ல தாத்தா அக்கா மாமா இரண்டு பேரும் இன்னைக்கு ஆசிரமத்துக்கு போய் இருக்காங்க அதான் இல்லைனா அவுங்க கிட்ட விட்டுட்டு வந்து இருப்பேன்.இப்ப பரவாயில்லை இங்க அவுங்க இருந்துகு வாங்க.என்றவள் பப்பு அப்பு வாங்க என்றால்.இருவரும் அவள் அருகில் வந்து நின்றுகொண்டனர்.போலாமா என்றால்.சரி என்று முன்னே அவர்களுடன் சேர்ந்து நடந்தார்.அவர்களை பார்த்து கொண்டு பின்னால் நடந்தான் கபிலன்.
இப்போது அவன் பார்வை முழுவதும் பவியின் மீது இருந்தது காட்டன் சுடிதார் போட்டு அதன் மேல் டாக்டர் கோட் போட்டு இருந்தால் .இடுப்பு வரை முடியை பின்னி போட்டு இருந்தால்.கழுத்தில் சிறிய செயின் காதில் இரு குட்டி வளையங்கள் ஒரு கையில் வாட்ச் மற்றோரு கையில் இரண்டு வளையள்கள்.ஒல்லியும் இல்லை பருமனும் இல்லை மிதமான உடல்வாகு மாநிறம் அன்று பார்த்ததை விட இன்று முகத்தில் பக்குவம் இருந்து அனுபவமும் படிப்பிற்க்கான கம்பிரமான தோற்றமாகவும் இருந்தால்.
அந்த ஹாஸ்பிடலின் எம் டி யும் டாக்டருமான டாக்டர் அன்பரசன் அறையின் முன்பு வந்து நின்று அவள் பிள்ளைகளை பார்த்து இரண்டு பேரும் சமத்தா இங்க உட்காந்து இருக்கனும் அம்மா தாத்தா உள்ள கூட்டி போய் டாக்டர்ட செக்கப் முடிச்சுட்டு வர வறைக்கும் ஒழுங்கா இருக்கனும் என்றால் .
இதை கேட்ட தாத்தா ஏன்மா பசங்கள இந்தா கபிலன் இருக்கான்ல அவன் பார்த்துக்கொண்டு இருக்கட்டும் என்றார்.
இல்ல தாத்தா அவருக்கு எதுக்கு சிரமம் அவுங்க பாட்டுக்கு இருக்கட்டும் வாங்க நாம உள்ள போலாம் என்றால்.
அதற்க்குள் கபிலனுக்கு ஒரு அழைப்பு வர தாத்தா நீ பேசுப்பா பேசிக்கிட்டு அப்படியே பிள்ளைகளையும் ஒரு பார்வை பார்த்துக்க என்றவர் .
வாம்மா போலாம் என்று உள்ளே நுழைந்தார்.அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அவளும் பின்னாடியே சென்றால்.
கபிலன் போனை அட்டன் செய்தவன் அப்பறமா கூப்புடுறேன் என்று போனை வைத்தவன் பிள்ளைகளை பார்த்து அவர்களிடம் வந்தான்.அவர்கள் இருவரும் அவனை ஈர்த்தனர் அவனை அவர்கள் எதோ செய்தனர்.அவர்களிடம் நெருங்கியவன் பேச ஆரம்பித்தான்.
அதர்க்குள் உள்ளே நுழைந்த பவியும் தாத்தாவும் டாக்டரிடம் வணக்கம் என்றார்.
வணக்கம் வாங்க எப்படி இருக்கிங்க என்றார் அன்பரசு.
அவரும் நல்ல பழக்கம் தாத்தாவுக்கு அதான் உரிமையாக பேசினர் .
அதான் எப்படி இருக்குனு நீங்க தான் பாத்து சொல்லனும் என்றார்.
சரி பார்த்தறளாம் என்று எல்லா டெஸ்ட்டையும் எழுதி கொடுத்து எடுக்க சொன்னார்.பவியிடம் திரும்பி நீயே கூட்டிபோரியா என்றார் சரி டாக்டர் என்று அழைத்து சென்றாள்.
இருவரும் வெளியே வந்தனர் அங்கு ரகுவும் ரஞ்சனியும் கபிலன் உடன் பேசிக்கொண்டு இருந்தனர்.இதை பார்த்த பவி அவர்கள் அருகில் வந்தால் .
அப்போது அவர்கள் ஏன் சார் நீங்க இவ்வளவு ஹைட்டா இருக்கிங்க என்றான் ரகு .
அதற்க்கு ரஞ்சனி டேய் அவுங்க பிக்பாய்ல அதன் ஹைட்டா இருக்காரு.
அப்ப நானும் பிக்பாய் ஆனா இவர மாதிரி ஹைட்டா ஆகிருவேனா.
ஆமா என்றால் ரஞ்சனி.
அப்ப நீ என்னைய அடிக்க முடியாதுல டேய் நீ பிக்பாய் ஆனா நானும் பிக்கேள் ஆகிருவேன் அப்ப நானும் ஹைட்டா அம்மா மாதிரி இருப்பேன் அப்ப நானும் உன்னைய அடிப்பேன் என்றால் .
இவர்கள் பேசுவதை பார்த்து கொண்டு இருந்த கபிலன் இரண்டு பேரும் பெரிய பசங்க ஆனா அடிக்க தான் செய்விங்களா என்றான்.
அப்படி இல்ல சார் இவன் வீட்டுல எதுவும் கொட்டி விட்டுவான் இல்ல ஒடச்சு வச்சுருவான் அதான் அவனை நான் அடிப்பேன் என்றால் .
ஒ ஒ அப்ப நீங்க சமத்து பாப்பா வா என்றான்.
இல்ல இல்ல இவளும் வீட்டுல சேட்டை செய்வா அப்ப நானும் இவளை அடிப்பேன் என்றான்.
இவர்கள் பேசுவது அவனுக்கு வினோதமாக இருந்தது இந்த மாதிரி குழந்தைகள் உடன் அவன் பேசியது பழகியது இல்லை.
அவனுக்கும் உடன்பிறந்தோர் இல்லை அதனால் அவனும் இந்த மாதிரி சண்டைகள் எல்லாம் போட்டதும் இல்லை அவனுக்கு அவர்கள் தலையை கை காலை ஆட்டி பேசுவது சிரிப்பது இது எல்லாம் பார்ப்பதற்க்கு அழகாகவும் ரசனையாகவும் இருந்தது .
இவர்கள் அருகில் வந்த பவித்ரா ஏய் இங்க என்ன பனிறிங்க வாங்க அங்க வந்து உட்காருங்க என்று இழுத்து வந்து சேரில் உட்கார வைத்தால்.
இதனை பார்த்த கபிலன் முகம் வாடிவிட்டது.
தாத்தா விடம் திரும்பி வாங்க தாத்தா என்று அழைத்தால்.
ஏன்மா அவன்கூட இருக்கட்டும் என்றவரிடம் இல்ல தாத்தா புதுசா யார்க்கூடையும் பழகவிட்டா எல்லார் கூடயும் பழக ஆரம்பிச்சுருவாங்க அப்பறம் தேவையில்லாத பிரச்சினை தான் வரும் எப்பையும் மத்தவுங்க கிட்ட தள்ளி இருக்குது தான் நல்லது என்றால்.
சரி தாத்தா நேரம்ஆகுது வாங்க என்று முன்னால் நடந்தால்.தாத்தாவும் அவனை பார்த்து நீ பாத்துக்க வந்துறேன் என்று சென்றார்.
கபிலன் தள்ளி சுவர் அருகில் நின்று கொண்டான் அவளை கோபபடுத்த விரும்பாமல் .பிள்ளைகளும் அவர்களுக்குள் பேசி விளையாட்டு கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்தவனின் எண்ணத்தில் இவள் நம்ம மேல இவ்வளவு கோபத்துல இருக்கா இவள் கிட்ட எப்படிபேசுறது எப்படி மன்னிப்பு கேட்குறது என்று யோசித்தான்.அவள் கோபபடுறதும் நியாயமான விஷயம் தான் நான் அவளுக்கு எவ்வளவு பெரிய பாவத்தை பண்ணி இருக்கேன்.
ஆனாலும் அதுல இருந்து வெளிய வந்து இப்படி படிச்சி கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்றா பரவாயில்லை என்று நினைத்தான்.ஆனால் அந்த பிள்ளைகளை பார்க்க பார்க்க ஆசையாக வந்தது அவர்கள் கூடவே இருக்கனும் போல இருந்தது அவர்களை தன் போனில் நிறைய போட்டோஸ் எடுத்துக் கொண்டான்.
பவித்ராவிற்க்கு கல்யாணம் ஆனது அவன் மனதில் ஒரு விதமான
வலியை உண்டு பண்ணியது அதை அவனால் ஏற்க்கவே முடிய வில்லை.அவன் கண்களை அழுத்தமாக முடிய போது அவன் கண்முன்பு சிரித்த முகமாக பழைய பவித்ரா சிரித்தாள் அவள் வேறு ஒருவருடைய மனைவி என்று அவனால் நினைத்து பார்க்க முடிய வில்லை என்னுடைய பவித்ரா என்று அவன் உதடுகள் முனங்கியது .
அப்போது அருகில் வந்த ரகு இல்ல இல்ல பவி ஏன்அம்மாஉங்க பவித்ரா கிடையாது என்றான்.
இதை கேட்டு கண்னை திறந்த கபிலன்.
என்ன சொன்ன என்றான்.
நீங்க ஏன் பவி அம்மாவ ஏன் பவித்ரானு சொன்னிங்க அதன் நான் அப்படி சொல்ல கூடாதுனு சொன்னே என்றான்.
அதை கேட்டு யோசிக்க ஆரம்பித்தான் அப்போது தான் அவனுக்கே புரிந்தது அவன் பவித்ராவை விரும்புவது அதனால் தான் அவனால் மற்ற பெண்ங்களிடம் நெருங்க முடியவில்லை அதே மாதிரி அவளையும் மற்றோரு வன் மனைவியாக நினைக்க முடியவில்லை என்பதை .

