STORYMIRROR

வெண்பா வெண்பா

Romance

3  

வெண்பா வெண்பா

Romance

❤️ மன்னிப்பாயா தாரகையே ❤️8

❤️ மன்னிப்பாயா தாரகையே ❤️8

3 mins
168

அன்று ஞாயிற்றுக்கிழமை

பவித்ரா வீடு ரகு மற்றும் ரஞ்சனி தூங்கி கொண்டு இருந்தனர்.பவி அடுப்பில் அவர்களுக்கு பிடித்த பூரி உருளைக்கிழங்கு சமைத்துக். கொண்டு இருந்தால்.


    காலிங் பெல் சத்தம் கேட்டது.கதவை திறந்தால் சதீஷ் மற்றும் சரோ தயாராகி நின்று இருந்தனர்.என்ன கிளம்பிட்டிங்களா என்றால் ஆமா ஒரு மூனு மணி போல வந்துறோம்.


      அவர்கள் இன்று சரோ வளர்ந்த ஆசிரமத்திற்க்கு செல்கின்றனர்.இரண்டு மாததிற்க்கு ஒரு முறை சென்று தங்களால் முடிந்ததை செய்து விட்டு வருவர்.மாலை அனைவரும் பார்க்கு போக வேண்டும் அதான் சீக்கிரம் வந்து விடுவதாக கூறிவிட்டு துங்கும் இருவரையும் பார்த்து விட்டு கிளம்பினர்.




    அவர்களை அனுப்பி வைத்து விட்டு திரும்பிய பவி யின் ஃபோன் அழைத்தது எடுத்து பார்த்தால் தாத்தா அட்டன் பண்ணி பேச ஆரம்பித்தால் சொல்லுங்க தாத்தா என்ன இவ்வளவு காலைல ஃபோன் பண்ணி இருக்கிங்க.


ஆமா ம்மா நான் அங்க ஹாஸ்பிடல் கிளம்பி வரேன் ‌


ஏன் என்ன ஆச்சு பதட்டமாக கேட்டால் .


ஒன்னும் இல்லை லேசா இரண்டு நாளாக நெஞ்சு வலிக்குது அதன் ஒரு வாட்டி டெஸ் பண்ணி பார்க்கலாம்னு.




    சரி வாங்க நான் ஹாஸ்பிடல் வெய்ட் பண்றேன்.தனியா வராதிங்க கூட யாரையாவது கூட்டிட்டு வாங்க என்றால்.



பவிக்கு கபிலன் வந்தது தெரியாது தாத்தா சொல்லவில்லை.பவித்ரா அதிக நேரம் பவானியிடம் பேச மாட்டாள் அவள் உடல் நலம் சரோ மற்றும் பிள்ளைகளின் பேச்சோடு நின்று விடுவாள் இல்லை என்றால் அவள் வாழ்க்கை பற்றி புலம்ப ஆரம்பித்து விடுவாள் இதற்க்கு பயந்த கெண்டே அளவான பேச்சோடு நிருத்தி கொள்வாள்.அதனால் அவன் வந்த விஷயம் அவள் அறியவில்லை. தாத்தாவும் அவன் வருவதாக இருந்த அன்று காலையில் தான் அவன் வருவதாக மற்றவர்களிடம் கூறியிருந்தார்.



       பவித்ரா சமைத்து முடித்து விட்டு இரு பிள்ளைகளையும் எழுப்பி தயார் பண்ணி அவர்களையும் அழைத்து கொண்டு ஹாஸ்பிட்டல் கிளம்பினால் இல்லை என்றால் சரோ விடம் விட்டு சென்று இருப்பல்.பெறும்பாலும் ஞாயிறுகளில் விடுமுறையில் இருப்பதால் ஏதாவது அவசர கேஸ் வந்தால் சென்று வருவாள்.



      மருத்துவ மனை பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு இறங்கி அடுத்த பக்கம் வந்து கதவை திறந்து விட்டான் கபிலன் . தாத்தா இறங்கவும் கை கொடுத்து இறக்கி விட்டான்.அவர்இறங்கவும் அழைத்து சென்று வரவேற்பில் அவர் பெயரை பதிவு செய்த போது இந்த பேரு ஏற்க்கனவே ரிஜிஸ்டர் பண்ணியிருக்கு சார் பிளீஸ் ஒன் மினிட் என்று போனில் யாரையோ அழைத்து பேசினால் தாத்தா விற்க்கு புரிந்தது .


கபிலன் என்ன தாத்தா என்ற போது இரு என்றார்.


அப்போது கீழே இருந்து தாத்தூ என்று ரஞ்சினி அழைத்தால் .


அவளை இருவரு பார்த்தனர்.அழகான குட்டி டால் போல் இருந்தால்.அவளை பார்த்ததும் ஏய் பாப்பு என்று ஆசையாக தூக்கி கொண்டார்இதை அவர் எதிர் பார்க்கவில்லை அருகில் இருந்த கபிலனுக்கு அந்த பூ மொட்டை பாத்ததும் பிடித்து போனது ஏன் என்று எல்லாம் தெரிய வில்லை அதுவும் தன் தாத்தாவை உரிமை யாக தாத்தூ என்று அழைத்தும்.



       இங்க என்னடி பண்ற என்றார்.


அம்மா தான் கூட்டி வந்தாங்க உங்களுக்கு முடியளைய தாத்தா என்ன பண்ணுது காய்ச்சலா என்று நெற்றியில் கை வைத்து பார்த்தது.



இல்லடா சும்மா தான் உங்களை எல்லாம் பார்க்க வந்தேன் .



அப்படினா வீட்டுக்கு வரவேண்டி தானே என்றாள் உரிமையாக .



இது எல்லாம் ஒரு பார்வையாளனாக நின்று பார்த்துஇருந்த கபிலன் புறம் திரும்பி பாத்தியா எப்படி கேள்வி கேட்க்குறா அப்படியே உங்க பாட்டி மாதிரியே பேச்சு கூட என்றார் மகிழ்வாக.




    அதற்க்குள் இவர் யாரு என்று கேட்டால் ரஞ்சி.



இவர் ஏன் பேரன் கபிலன்.


அப்ப நான் யாரு இத்தன நாள் என்ன தான் பேரன்னு சொன்னிங்க என்ற கோபக் குரல் கேட்க்க திரும்பி பார்க்க கையை இடுப்பில் வைத்துப் படி நின்று கொண்டு இருந்தான் ரகு.


கபிலனுக்கு அருகில் அவனின் அச்சாக.அதை பார்த்த தாத்தாவிற்க்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சிரியாமகவும் இருந்தது.



    கீழே குனிந்து பார்த்த கபிலன் இது யார்டா புதுசா இருக்கு என்று பார்த்தான்.அவன் இவனை பார்த்து புஸ் புஸ் என்று மூக்கு விடைக்க கோபமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.அவனை பார்த்த கபிலனுக்கு சிரிப்பு வந்து விட்டது.


அவன் அளவிற்க்கு கீழே அமர்ந்து ஹலோ லிட்டில் சாம்ப் ஏன் என்ன பாத்து கோபம் படுறிங்க என்றான்.



பின்ன இத்தன நாள் நான் தான் அவர் பேரன்னு சொல்லிட்டு இப்ப உங்களை சொல்ராரு என்றான்.



   அதற்க்குள் நீங்க இரண்டு பேருமே ஏன் பேரன் தான் .இவன் ஏன் பேரன்.நீ ஏன் கொள்ளு பேரன் நீ தான்டா உசத்தி எனக்கு என்றார்.



இதை கேட்ட கபிலன் சிரித்து கொண்டே யாரு தாத்தா இவுங்க இரண்டு பேரும்.



அத நான் சொல்றேன் என்று ரஞ்சினி.நான் ரஞ்சினி இவன் ரகு ராம் ஏன் தம்பி என்றால்.



இல்ல இல்ல நான் ரகுராம் தான் இவள் ரஞ்சினி ஏன் தங்கச்சி என்றான்.


இதை கேட்ட தாத்தா ஆரம்பிச்சுடாங்க இனி நிறுத்த முடியாது என்றார்.



     சிரித்துக் கொண்டே யாரு தாத்தா என்றவனிடம்.


நம்ம பவித்ரா இருக்கா இல்ல உனக்கு ஞாபகம் இருக்கா நம்ம மாரிமுத்து பவானி மகள்.அவன் அவளாக கேட்க்க அவளோட இரட்டை பிள்ளைங்க டா இரண்டும் பயங்கர சுட்டி என்று அவனை கூர்மையாக பார்த்தார்.





இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Romance