மன்னிப்பாயா தாரகையே 7
மன்னிப்பாயா தாரகையே 7
பலராமன் ஐயா வீடு எல்லோரும் வேலையாக இருந்தனர்.தாத்தாவும் ஆவலோடு காத்துயிருந்தார் தன் பேரன் கபிலன் ராம் சக்ரவர்த்தியை கான கிட்ட தட்ட ஆறு வருடங்கள் ஆகின்றன.ஊருக்கு வந்து அவன் மேல் கோபம் இருந்தாலும் அவன்மேல் கொண்டுள்ள பாசமும் விடுவேனா என்கிறது.
மாலை நேரத்தில் அந்த உயர் ரக கார் வந்து வாசலில் நின்றது அது கபிலன் உடையது அவன் ஊரில் இருந்து கிளம்பு வதர்க்கு முன்பே அதனையும் அனுப்பிவைத்து இங்கு வந்து எடுத்துக்கொண்டே வந்து விட்டான்.காரில் இருந்து இறங்கி நின்று வீட்டை பார்த்தான் .
அவனுக்கு எப்போதும் இந்த வீட்டின் மீதும் தாத்தா பாட்டி மீதும் அளவுகடந்த அன்பும் பாசமும் உண்டு அதான் தாத்தாவுக்கு முடியவில்லை என்று தெரிந்த உடன் வந்து இறங்கி விட்டான் அவனும் எத்தனை நாள் பயந்து ஓடுவான் இப்போது ஒரு முடிவோடு வந்து விட்டான் தன்னை துரத்தும் அந்த கனவிற்க்கு ஒரு முற்று புள்ளி வைக்க தான் பருவத்தில் செய்த தவரை எதிர் கொள்ள.எல்லாத்தையும் ஒரு முறை நினைத்து பார்த்தவன்.வீட்டினுள் காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான்.
தாத்தா தாத்தா என்று அழைத்தான் மாடியில் இருந்த அவருக்கு சத்தம் கேட்டு கீழே வந்தார். பின் கட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பவானியும்.மச்சில் நின்று வேலை செய்த மாரிமுத்துவும் மற்ற அனைத்து வேலை காரங்களும் ஹாலில் கூடினர்.
முதலில் வந்த தாத்தா ஒரு கையில் ட்ராவல் பேக்கும் மற்றோரு கையில் போனுமாக தன் உயரத்திற்க்கு நிமிர்ந்து தன்னை போலவே ஆனால் இவரை விட சற்று நிறமாக ஆண்களே திரும்பி பார்க்கும் உடற்கட்டு டன் நின்று இருந்த தன் பேரனையே கண் அசைக்காமல் பார்த்தார் .அவன் அவர் அருகில் வந்து தாத்தா என்று அனைத்துக் கொண்டான் .அவரும் அனைத்து விடுவித்தார்.அவனை மறுபடி கீழ் இருந்து மேல் ஒரு முறை பார்த்தவருக்கு சட்டேன்று ரகுவின் நினைவு வந்தது. பின் தன்னை சுதாகரித்துக் கொண்டு எப்படி இருக்க கபிலா என்றார். நீங்களே சொல்லுங்க நான் எப்படி இருக்கேன் என்று கேட்டான் .
அவர் மறுபடியும் அவனை பார்த்துக் கொண்டு ஆளு எல்லாம் நல்லாதான் இருக்க ஆனா இந்த மீசை தான் சிறுசா இருக்கு என்றார்.தன் பெறிய மீசையை முறுக்கி கொண்டு.அவ்வளவு தானே வளத்துட்டா போச்சு என்று அந்த சிறிய மீசையை முறுக்கினான்.இருவரும் சிரித்தனர்.
அதற்க்குள் வாங்க தம்பி எப்படி இருக்கிங்க அப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க என்று பாவானி வினவினார். அவரையும் அவர் அருகில் நின்று இருந்த மாரிமுத்துவையும் பார்த்து அவனால் நிமிர்ந்து அவர்களை பார்க்க முடியவில்லை .மிகவும் குற்ற உணர்வாக இருந்தது.ஆன் நல்லாருக்கேன் ஆண்ட்டி அவுங்களும் நல்லா இருக்காங்க சீக்கிரம் வந்துறேன்னு சொல்லி இருக்காங்க என்றான்.பின் திரும்பி நீங்க எப்படி இருக்கீங்க ஆங்கிள் ஆண்ட்டி என்று இருவரையும் கேட்டவன் உள்ளம்.பவித்ராவை தேடியது .
அவள் எங்க இருக்கா என்ன பண்றா என்பது போன்ற பல கேள்விகளும் மனதில் தோன்றியது. நாங்க நல்லா இருக்கோம் தம்பி என்று மாரிமுத்து சொல்லிவிட்டு மித்த சாமன் எல்லா வண்டியில் இருக்கா தம்பி என்று கேட்டவர் மற்று வேலை ஆளான கருப்பையாவை கூட்டிக்கொண்டு எடுக்க சென்றார்.
பவானியும் ரொம்ப நேரம் பயணம் செஞ்சு களைச்சு போய் இருப்பிங்க போய் குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு பிடிச்ச சாப்பாடு எல்லாம் தயார் பண்ணி வச்சு இருக்கேன் என்றார். ஆமாடா கபிலா உன்னோட அந்த ரூம்ல ரெடி பண்ணி ஏசி டிவி எல்லா போட்டு வச்சு இருக்கு உனக்கு வேற எதாவது தேவையா சொல்லு அதையும் செய்யலாம் என்றார்.சரி என்று மேலே ஏறி சென்றான்.
கதவை திறந்தான் தினமும் அவன் கனவில் வந்து தொல்லை செய்யும் அந்த சம்பவம் அரங்கேறிய இடம் அது எல்லாம் அவன் நினைவிற்க்கு வந்தது.அவளின் சோர்ந்து முகம் வலி நிறைந்த கண்ங்கள் இரத்தம் உரைத்த இதழ் வேண்டாம் என்னை விற்று என்ற பலகினமான வார்த்தை.அனைத்தும் நினைவிற்க்கு வந்தது இறுதியாக எச்சிளை காரி உமிழ்ந்து.கண்ங்கள் குளம் கட்டி நின்றது.
தம்பி தம்பி என்று அழைப்பில் நிகழ்விற்க்கு வந்தான்.பின்னாடி மாரி முத்து கையில் பெட்டியுடன் வேலை ஆட்களுடனும் நின்று இருந்தார்.அவன் வழியை விட்டான் உள்ளே வந்து அதை வைத்து விட்டு மற்றவர்கள் சென்றனர். மாரிமுத்து அருகில் வந்த சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க தம்பி சாப்பிடலாம் என்று கீழே இறங்கி போனார்.
அவன் மனதில் இவுங்க எல்லாம் என் கிட்ட எப்பையும் போல பேசுறாங்க பழகுறாங்கனா அவள் இவுங்க யாருகிட்டையும் நம்மள பத்தி சொல்லல இது ஏற்கனவே அவனுக்கு இருந்த சந்தேகம் இருந்தது அப்படி அவள் சொல்லியிருந்தால் தாத்தா நம்மளிடம் கேட்டு இருப்பார் அவர் இத்தனை வருடம் கேட்காத போதே தோன்றியது தான் ஆனால் ஏன் சொல்ல வில்லை நம்மை பற்றி சொல்லவில்லையா இல்லை தனக்கு நடந்த சம்பவத்தை பற்றியே சொல்லவில்லையா என்று குழம்பினான் முதலில் அவளை பார்க்கவேண்டும்.அந்த சம்பவம் நடந்த அன்று அவளை பார்த்தது அதற்க்கு பிறகு ஊருக்கு செல்லும் போது கூட அவளை பார்க்கவில்லை.
இப்போது என்ன செய்கிறாள் படித்து கொண்டு இருப்பாளா இல்லை கல்யாணம் எதுவும் முடிந்து இருக்குமா என்று யோசனை செய்தவன்.அவளை முதலில் பார்த்து மன்னிப்பு கேட்க்க வேண்டும்.அன்று தன் மனநிலை பற்றி கூற வேண்டும் என்று பல நினைவுகளோடு குளித்து முடித்து கீழே இறங்கி வந்தான்.
சாப்பாடு பரிமாறப்பட்டது விருப்பமாக உண்டான். சிறிது நேரம் தாத்தாவோடு பேச ஆரம்பித்தான் என்ன தாத்தா உடம்பு எப்படி இருக்கு எப்ப ஆப்ரேஷன் செய்யலாம்னு சொல்லி இருக்காங்க என்று கேட்டான்.ம்ம் சொல்லியிருக்காங்க நீயும் என்கூட ஹாஸ்பிடல் வா வந்து நீயே கேளு கேட்டு தெரிஞ்சுக்கோ என்றார் சரி தாத்தா எப்போ போலம் என்றான் இன்னைக்கு தான் வந்து இருக்க இரண்டு நாள் ரெஸ்ட் எடு பிறகு போகலாம்.இல்ல தாத்தா இது தான் முக்கியம் நாம் நாளைக்கே போகலாம் என்றான் அவரும் சரி காலைல போகலாம் இப்ப போய் படு என்றார் அருகில் நின்று இருந்த மாரிமுத்துவுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. என்ன ஐயா தம்பி என்ன என்னமோ சொல்றாரு அதை எதையும் கண்டுக்காம இரு மித்த விஷயத்தை நான் பாத்துக்கிறேன்.நாளைக்கு காலைல நாங்க ஹாஸ்பிடல் வரை போய்ட்டு வறோம் நீ மித்த வேலைய பாத்துக்க என்றார்.

