மன்னிப்பாயா தாரகையே 5
மன்னிப்பாயா தாரகையே 5
பவித்ரா வீடு
ஞாயிற்று கிழமை
பவியின் அப்பா அம்மா பெரிய அய்யா பல ராமன்.பவியின் குழந்தைகள் சரோ மற்றும் சதிஷ்.எல்லோரு மத்திய உணவை சாப்பிட்டு முடித்து விட்டு அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.குழந்தைகள் இருவரும் உண்ட களைப்பில் அவர்கள் அம்மாச்சி மடியில் படுத்து தூங்கி விட்டனர்.
அப்போது பெரிய அய்யா சதிஷ் இடம் பசங்கள கொண்டு போய் உள்ளே படுக்க வைக்க சொன்னார்.சரோ சிறு வயதில் இருந்து ஆசிர்மத்தில் வளர்ந்தவள் பண்ணியிரன்டாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் இடம் பிடிக்க அவளுடைய மொத்த படிப்பு செலவையும் பலராமன் தன் மனைவி பெயரில் நடத்தி வரும் ட்ரஸ்ட் மூலம் ஏற்றுக் கொண்டார்.அவள் அது மூலம் டாக்டருக்கு படித்தால்.
பவித்ரா வும் சிறு பிள்ளையின் இருந்து பலராமன் ஐயா ருக்மணி அம்மாவிடம் வளர்ந்தவள் ருக்மணி அம்மாள் இறப்பிற்க்கு பிறகு பவி முழு வதும் பலராமன் பொருப்பாகி போனால்.அவரின் ஒரே ஆதரவு அவள் மட்டுமே .மகன் குடும்பம் அமெரிக்கா வில் வாழ பவி மகள் தோழி பேத்தி சமயங்களில் அவரை மாத்திரை மருந்து சாப்பிடும் போது அதட்டி தாய் ஆகவும் மாறிப்போனால்.
அவளும் பள்ளி இறுதி ஆண்டில் தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் அடைந்தால் அவளுக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையிருந்தது அதை ஐய்யாவே நிறைவேத்தி வைப்பேன் என்று இருந்தார்.
ஆனால் அவள் வாழ்க்கையையே புரட்டி போட்ட சம்பவத்திற்க்கு பிறகு மிகவும் இடிந்து போனால் ஆனால் அதில் இருந்து சீக்கிரமே வெளியேவும் வந்தால்.அவள் கிராமத்தை விட்டு வெளியே வந்து பாதுகாப்பிற்க்காக சேர்ந்த இடம் சரோ இருவரின் படிப்பு செலவு தங்கு இடம் என்று எல்லா செலவுகளையும் பெரிய ஐய்யா வே பார்த்தார்.பவியின அப்பா அம்மா மறுத்த போதும் அவள் பிரசவ கால செலவு முதற்கொண்டு அவரே பார்த்தார் என்னுடைய பேத்தி நான் பார்ப்பேன் என்று விட்டார் அவரை அதற்கு மேல் பேச முடிய வில்லை.
பவி சரோ இருவரு ஒரே வீட்டில் தங்கி படித்தனர் பவியை விட சரோ நான்கு வயது பெரியவள்.இருவரும் அக்கா தங்கையாக பழகினர்.சரோ படித்து முடித்த வேலை பார்த்த ஹாஸ்பிடலில் வேலை பார்த்தவன் சதிஷ் அவனுக்கு சொந்தங்கள் கிடையாது ஒரே மாமா அவரும் கல்யாணம் ஆகாதவர் அப்பா அம்மா ஒரு விபத்தில் இறந்துவிட இவனை எடுத்து வளர்த்தார்.அவரும் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
ஹாஸ்பிடலில் வேலை செய்யும் போது சரோவை பார்த்து பிடித்து போனது அவளும் தன்னை மாதிரி என்று தெரிந்ததும் மிகவும் பிடித்து போனது ஆனால் சரோ ஒத்துக் கொள்ள வில்லை .தான் சேவை செய்து கொண்டு வாழப்போவதாக சொல்ல பின்னாடியே அழைந்து கூடவே பவி மற்று பிள்ளைகளின் உதவியோடு மூன்று வருட போராட்டத்திற்க்கு பிறகு ஒத்துக் கொண்டால் .அந்த நேரம் அவன் மேல் படிப்பிற்க்கு அப்லே பண்ணியிருக்க இடம் அமெரிக்கா கல்லூரியில் சீட் கிடைக்கவும். அவனை பலராம் ஐயாவே படிப்பு செலவை ஏற்று படிக்க அனுப்பி வைத்தார்.
இரண்டு வருட படிப்பு முடித்து வந்ததோடு சரோ சதிஷ் இருவரும் தங்கள் நண்பர்கள் ஹாஸ்பிடலில் வேலை செய்வோர்.மற்றும் தங்கள் குடுபம் உறுப்பினர்களான தந்தா பலராமன் அப்பா அம்மாவான மாரிமுத்து பவானி தங்கை மற்றும் தங்கை பிள்ளைகளான ரகு ரஞ்சினி முன்னிநிலையில் திருமணம் முடித்து வாழ்கையை தொடங்கினர்.அது வரை ஒரே வீட்டில் இருந்தவர்கள் எதிர் வீட்டுக்கு மாறிக் கொண்டனர்.இவர் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்கின்றர்.வேலை விஷயமாகவும் கிராமத்தில் உள்ளவர்களின் பார்வையில் இருந்தும் விலகி இங்கே அவர்கள் ஊரில் இருந்தூ முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் வாழ்கிறாள் .மகள்களையும் பேத்தி பேரனை பார்த்த செல்ல வருவார்கள் இன்று இரண்டு விஷயமாக பேச வந்துள்ளனர் .ஒன்று சரோவின் வளைகாப்பு மற்றோன்று பவியின் அடுத்த கட்ட வாழ்க்கை என்ன....

