STORYMIRROR

வெண்பா வெண்பா

Romance

4  

வெண்பா வெண்பா

Romance

மன்னிப்பாயா தாரகையே 3

மன்னிப்பாயா தாரகையே 3

2 mins
290

வயல்வெளி அழகாக காட்சி அளித்தது நல்ல விளைச்சல் வயல்கள் நிறைந்து காணப்பட்டது. மக்கள் அனைவரும் தங்கள் பணிகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டு யிருந்தனர்.அந்த ஊரின் உள்ள மையப்பகுதியில் உள்ள பெரிய வீட்டிலும் வேலை ஆட்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.


அந்த வீட்டின் தலைவர் பலராம் சக்கரவர்த்தி அவர் ஒருவர் மட்டுமே அந்த வீட்டில் உள்ளார்.அருக்கு வேலை பார்க்க வேலை பார்க்கவும் அந்த வீட்டை பராமரிக்கவும் நான்கு பேர் உள்ளனர் அவர்களுக்கு தலைமையாக கணவன் மனைவி இருவர் உண்டு.


பலராம் சக்கரவர்த்தி யின் மனைவி ருக்மணி இறந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றது.ஒரு மகன் ரவிராம் சக்கரவர்த்தி மனைவி ராதா மற்றும் மகன்‌ கபிலன் ராம் சக்ரவர்த்தியுடன் அமெரிக்காவில் நண்பர்களுடன் தொழில் தொடங்கி அங்கேயே தங்கி விட்டார்.மருமகள் பேரன் மட்டும் எப்பையாவது வருவார்கள்.அதுவு இந்த ஐந்து வருடங்களாக யாரும் வருவது இல்லை.தொலை பேசியில் மட்டும் பேசி கொள்வர்.


பலராம் படிக்கட்டில் இறங்கி வந்தார். ஹாலில் மாட்டபட்டு இருந்த மனைவிபடத்தை பார்த்து சில விஷயங்களை நினைத்து கொண்டு உணவு மேசையில் அமர்ந்தார்.


பவாணி என்ன பண்ற அய்யா வந்துட்டார் என மாரி முத்து அழைத்தார். பவாணி மாரிமுத்து இருவரும் ருக்மணி அம்மாவின் தூரத்து உறவினர். இருவரும் திருமணம் முடிந்து சில நாட்களில் இங்கு வேலைக்கு வந்தவர்கள் உறவினர் என்ற முறையில் எந்த சலுகையும் எடுத்து கொள்ள மாட்டார்கள். ருக்குமணி அம்மா சகஜமாக பழகினாலும் அவர்கள் அவர்களுக்கு உரிய எல்லையிலேயே நின்று கொள்வார்கள்.


அருகில் ஒரு வீட்டில் குடியிருக்கின்றனர்.பவானி சாப்பாட்டை எடுத்து வைத்தார்.சாப்பிட்டுக் கொண்டே என்ன உன் பேரன் பேத்தி கிட்ட பேசிட்டியா என்ன பள்ளி கூடத்துக்கு கிளம்பிட்டாங்களா என்றார்.



பேசி டேங்க் அய்யா பள்ளி கூடத்துக்கு கிளம்பிட்டாங்க .


சரி பவானி உன் மகள் கிட்ட கொடுத்த நேரம் முடிஞ்சு போச்சு என்ன பதில் சொல்லுதுனு ஒரு வார்த்தை கேட்டுருவோமா.


எனக்கு என்னமோ அவள் நீங்கள் சொல்றதுக்கு சரி பட்டு வருவானு தோனல . 


அதுவும் சரி தான் அதுக்கு அப்பறம் நான் யோசிச்சு வச்சு இருக்க படி செய்ய வேண்டியது தான்.


உங்கள் இரண்டு பேருக்கும் உங்கள் மகள் வாழ்கையில் நான் முடிவு எடுக்குறதுல எதுவும் பிரச்சனை இல்லையே.அய்யோ என்னய்யா இப்படி கேட்டுட்டிங்க என் இருவரும் பத்ரி போய் கேட்டனர். பின்பு பவானி அவள் வாழ்க்கை எப்படி எப்படியோ போய்ருக்க வேண்டியது இன்னிக்கி ஓரளவுக்கு இரண்டு பிள்ளைய வைச்சு கிட்டு கௌரவம வாழுதுனாலே அது நீங்க பண்ண உதவி. அப்படி இருக்கப்ப அவள் விஷயத்துல முடிவு எடுக்க எல்லா உரிமையும் உங்களுக்கு மட்டும் தான் இருக்கு என்றால்.




நான் அவள் இந்த வீட்டு பிள்ளையா என் பேத்தி மாதிரி தான் நினைக்குறேன்.என் பேரன் கூட நான் வளக்கல அவள் தான் குழந்தையில் இருந்து நானும் என் பொண்டாட்டியம் பேத்தியா வளர்த்தோம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டியது என்னோட பொருப்பு.



சரி ஞாயிற்று கிழமை அவளுக்கு லிவ் அன்னைக்கு போய் பிள்ளைகளையும் பாத்துட்டு அப்படியே பேசிட்டு வந்துருலாமா என்றார். அதற்க்கு மாரிமுத்து மூனு பேரும் போய்ட்டா இங்க வேலை கேட்டு போய்டும் அதனால் நான் இங்க இருக்கேன் அய்யா நீங்க இரண்டு பேரும் போய்ட்டு வாங்க நான் இன்னோரு நாள் போய் பசங்கள பாத்துக்கிறேன் என்றார்.


அதற்க்கு பெரிய அய்யாவும் சரி உன் தோது பாத்துக்க என்றார்.பின் மனதில் சிலபல திட்டங்களை வகுத்தார்.


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil story from Romance