மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண்
மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண்


மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண்சொந்தக்காரங்க, 'முட்டாள்தனமா முடிவெடுக்காத, உனக்கும் கொரோனா வந்துரும்'னு சொன்னாங்க. என்னோட உசுருக்காகப் பையன் எப்படிப் போனாலும் பரவாயில்லைனு எப்படி இருக்குறது? போற உசுரு புள்ளைக்காகப் போகட்டும்னுதான் துணிஞ்சு முடிவெடுத்தேன்."
மொத்த உலகமும் இயக்கத்தை நிறுத்தி, நிம்மதியை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறது. காரணம் கொரோனா. கொரோனாவைவிடக் கொடிய ஒன்றாகக் கொரோனா குறித்த பயம் உலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன் மகனுக்காக 10 நாள்கள் கொரோனா வார்டில் தங்கி, கொரோனா என்ற கொடிய அரக்கனிடமிருந்து மகனின் உயிரை மீட்டெடுத்துள்ளார் ஒரு தந்தை. சென்னை, தண்டையார்பேட்டையில் வசித்து வரும் அந்தத் தந்தையை ஒரு காலை வேளையில் சந்தித்தோம்.
வீடு முழுவதும் அமைதி. ஆங்காங்கே சில விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள் கலைந்து கிடந்தன. இன்முகத்துடன் வரவேற்கிறார் மாதேஷ்.
"வெளியுலகத்தையும் மனிதர்களையும் பார்த்து முழுசா ஒரு மாசம் ஆகப்போகுது. என் மனைவிக்கும் பையனுக்கும் கொரோனா. சிகிச்சை முடிஞ்சு வந்த பிறகும்கூட, தெருவில் இருக்கவங்க சகஜமா பழக கொஞ்சம் பயந்தாங்க. அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம்னு, வீட்டுக்குள்ளயே இருந்துட்டோம். இந்தப் பாழாப்போன கொரோனா எங்களுக்கு எப்படி வந்துச்சுனு தெரியல. ஆனா, என் பொண்டாட்டியும் பிள்ளையும் சாவோடு போராடி மீண்டு வந்துருக்காங்க. இவங்க இன்னைக்கு உசுரோட இருக்கிறதே நிம்மதியா இருக்கு.