Hurry up! before its gone. Grab the BESTSELLERS now.
Hurry up! before its gone. Grab the BESTSELLERS now.

Harini Ganga Ashok

Action


4.7  

Harini Ganga Ashok

Action


மாணிக்கமும் காமேஸ்வரனும்

மாணிக்கமும் காமேஸ்வரனும்

2 mins 245 2 mins 245

பாட்ஷா 1995-ல் வெளியான திரைப்படம் மாணிக் பாட்ஷா இன்றும் நாம் விரும்பும் கதாபாத்திரத்தில் ஒன்றாக இருக்கிறது. பாட்ஷா என்று சொன்னாலே தனி கெத்து வர தான் செய்கிறது.


மைகேல்மதனகாமராஜன் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த காமேஸ்வரன் என்னும் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்தது.


மாணிக் பாட்ஷாவையும் காமேஸ்வரனையும் இணைத்தால் என்ன?

என் கற்பனை குதிரையை சிறிது ஓடவிட்டு புது கதையாக உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன்.இரு திரைப்படத்தின் கதைகளும் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று என்பதால் நேரடியாக என் கதைக்குள் வந்துவிட்டேன்.


மெட்ராஸில் தன் தம்பி மற்றும் தாயுடன் வசிக்கிறான் மாணிக்கம். தம்பியின் விருப்பத்திற்கேற்ப அவனின் IAS கனவை நிறைவேற்றுகிறான். பழைய தொழில்களை விட்டுவிட்டு மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வந்தான்.


ஆந்திராவில் மார்க் ஆண்டனியிடம் வேலையாளாக இருந்து கடைசியில் பணத்திற்காக அவருக்கே துரோகம் செய்தவரின் மகள் தான் பிரியா.


பிரியா ஒருமுறை வண்டியின் சென்றுகொண்டிருக்கும் போது பழுதாகி விட்டதால் மாணிக்கத்தின் கடைக்கு வண்டியை தள்ளி சென்றாள். மாணிக்கத்தின் செயல்கள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தினம் ஒரு சாக்கை உருவாக்கி கொண்டு அவனை சந்தித்து வந்தாள்.


வீட்டில் நடைபெற்ற சிறு பேச்சுவார்த்தைகளில் இருந்து தன் அப்பா ஏதோ சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதாக புரிந்துகொண்டாள். அடுத்த நாள் அதனை மாணிக்கத்திடமும் தெரிவித்தாள். மாணிக்கமும் அவள் கூறிய விஷயத்தில் இருந்து அது கேசவனாக தான் இருக்கும் என்று எண்ணினான்.


வீட்டில் தன் அப்பாவை ஒரு சில விஷயங்களில் எதிர்க்கவும் தொடங்கினாள். அதில் சந்தேகம் கொண்ட கேசவன் அவனை கண்காணிக்குமாறு ஆட்களுக்கு உத்தரவிட்டான். பிரியா தன் வீட்டில் மாணிக்கத்தின் புகைப்படத்தை கண்டாள். அதில் ஒரு டான் போன்று இருந்தான். அதனை மாணிக்கத்திடம் காட்டி அவனை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்தும் கொண்டாள்.


அதேநேரம் போதைகடத்தல் சம்பந்தமாக சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளை சிறைபிடிக்க உத்தரவிட்டு இருந்த சிவாக்கும் பாட்ஷாவை பற்றி சிறிது தெரிய வருகிறது தன் அண்ணன் தாதாவாக இருந்திருப்பதால் அவரின்மேலும் தவறு இருக்கும் என்று நினைத்து அவரை விசாரிக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறான்.


செய்தி அறிந்த பிரியா மாணிக்கம் தன்னிடம் கூறிய அனைத்து உண்மைகளையும் கூறினாள். மேலும் தவறு தன் அப்பா கேசவனின் மேல் தான் உள்ளது என்றும் எடுத்துரைத்தாள்.


பிரியா இந்த அளவுக்கு செல்வாள் என்று எதிர்பாராத கேசவன் அவளை வீட்டை விட்டு வெளியேற்றினான்.

பிரியா மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்துவிட்டாள்.


பிரியா வெளியேறிவிட்டதால் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியாதலால் அதற்கு மாணிக்கம் ஒரு வழி ஏற்பாடு செய்தான். அவனுடைய நண்பன் காமேஸ்வரனை அழைத்து விஷயங்களை கூறி அவன் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் திட்டம் போட்டு கொடுத்தான். காமராஜன் சமையல்காரன் ஆவான். கேசவனின் வீட்டில் சமையல் பணியில் சேர்ந்து கொண்டான். அங்கு நடக்கும் சம்பாஷணைகளை உடனுக்குடன் மாணிக்கத்திற்கு தகவல் கொடுத்து வந்தான்.


காமேஸ்வரன் சமையலில் மட்டும் சிறந்தவன் அல்ல மிகவும் புத்திசாலியும் கூட மாட்டிக்கொள்ளாமல் எப்பொழுதும் தன் பணியை செவ்வனே செய்து வந்தான். அவர்கள் பேசும் போது எடுத்த காணொளியையும் வீட்டில் கிடைத்த இதர ஆதாரங்களையும் மாணிக்கத்திடம் ஒப்படைத்தான். மாணிக்கம் தன் நண்பனிற்கு நன்றியை கூறி கொண்டான்.


ஆதாரத்தை பார்த்த பொழுது பல வருடங்களாக போதைமருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் பல தவறான தொழில்களில் ஈடுபட்டதும் நிரூபணமானது.


சிவாவின் பார்வைக்கு அனைத்தையும் கொண்டு வந்தான் மாணிக்கம். சிவா உடனே டிஐஜியிடம் கேசவனை கைது செய்ய உத்தரவிட்டான். அதன்படி கேசவனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். இரட்டை ஆயுள் தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும்வழியில் தப்பிக்க முயன்றபோது பிரியா தன் அருகில் நின்றிருந்த காவல் அதிகாரியின் துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டாள்.


இதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தற்காப்பிற்காக செய்த செயல் என்று அவள் மேல் பழி விழாமல் பார்த்து கொண்டனர்.


தவறு செய்கிறவர்கள் எல்லாருக்கும் அன்றே தண்டனை கிடைப்பதில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும். தவறான காரியங்களில் ஈடுபடமால் நாம் நம் மனதிற்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.


Rate this content
Log in

More tamil story from Harini Ganga Ashok

Similar tamil story from Action