லாக்டவுன் கலாட்டா
லாக்டவுன் கலாட்டா


கொரானா காலத்தில் பசிக்குதுன்னு சொன்னால் என்னடா செய்வேன்!
பள்ளி இருந்தப்பவாவது சோறு போட்டாங்க!
காசு பாங்குல போடறேன்னு பேப்பரில் போட்டாங்களே! டீவில போட்டாங்களே!
காஸ் வருது! ரேஷன் வருது! ஏரி வேலை வருது! இது பத்தலைன்னு உங்களை வெளியே போகச் சொன்னாங்களா?உட்கார்ந்து பாடம் சொல்லிக் கொடுத்தால் என்னவாம்?
நோய் வந்துடுச்சு! வீட்டுக்குள் இருக்கறதை வைத்து சாப்பிடத் தெரியாதா? அவன் திங்கறான்னு நானும் கண்டதைத் தின்னுவேன்னு நின்றால் என்ன அர்த்தம்? கூட்டமாக எதுவும் செய்யாதீங்கன்னா வேகமாக கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து நகைக்கடை,துணிக்கடைன்னு ஓடறீங்க? பின் எப்படி அது ஒழியும்? இதுல மாஸ்கைக் கழட்டி எச்சில் வேறு புளிச்சென்று தெருவில் துப்பி அதுமேலேயே நடந்து போறீங்க! வர்றது மழைக்காலம்.
சொடக்கு தக்காளி,கேரட்,முள்ளங்கி,தூதுவளை,கீரை,வெண்டை,பாகல் இவையெல்லாத்தையும் தொட்டியிலாவது பயிரிட்டு வச்சுக்கோங்க!
சரி! அப்ப உங்க டீச்சர் சொல்றமாதிரி செய்!