குப்பை
குப்பை


.இப்படி வீணாகிப் போகிற வேப்பிலையை மக்க வைத்தால் உரமாகும்,விலை போகும்னு......மொபைலில் கங்கா காய்ந்த வேப்பிலை குறித்து பேசிக்கொண்டிருந்தாள்.என்றது நெகிழி .
போடா! உன்னைப் பயன்படுத்திதான் தண்ணீர் இல்லைன்னு இப்ப நான் நிறைய வந்துட்டேன்னு குப்பை அள்ளுற கங்கா பொம்பளை திட்டுறா என்றது டிஷ்யு பேப்பர்.
கொட்டாங்கச்சி அக்கா ஏன் இன்னைக்கு பேசாமல் இருக்காங்க! என வாயைக் கிண்டியது செய்தித்தாள் குப்பைகள்.
ஆமா! நானும்தான் விலைக்குப்போறேன்,உரமாகிறேன்.மக்கள் எடுத்து பயன்படுத்துகிற விதத்துல இருக்கு....
இதோ1 அந்த குப்பைக்காரர் வந்தாரு! வேப்பிலை எல்லாத்தையும் எடுத்து மூட்டை கட்டி நாட்டுமருந்து கடையில் எடைக்கு போட்டாரு......தெர்மோகோல் பெட்டி ஒண்ணு வந்துச்சு..அதுல செடி போட்டார்......வீட்டுக்கு காய் வாங்கறதே கிடையாது.
இந்த மனுஷங்க பண்ற வேலையில நம்ம நாத்தம் தாங்கமுடியலைன்னு மூக்கை வேற பொத்திக்கிட்டே போறாங்க!
செய்யறதை எல்லாம் செய்துட்டு என நெகிழி பேசிக்கொண்டிருக்குமு்போதே எதிர்வீட்டு அடுக்கக நான்காம் மாடியிலிருந்து விழுந்த நெகிழி மூட்டை குப்பைத்தொட்டியின் உள்ளே கிடந்த கொட்டாங்கச்சி மீது விழுந்து உடைந்து நாற்றத்தைப் பரப்பியது. சிமெண்ட்குப்பைத்தொட்டியில் வெளியில் மக்கும் குப்பை,மக்கா குப்பை பிரித்துக் கொடுப்போம் என்ற வாசகம் குப்பைகளினால் மறைய ஆரம்பித்திருந்தன.