கடிதம்
கடிதம்


காலையில் இருந்தே லீனாவை காணவில்லை.
எல்லோருமே வீட்டில் பதறி அடித்துக்கொண்டு இருந்தார்கள்.
எங்கே சென்றாள்? இந்த லீனா வீட்டை விட்டு?
அப்போது லீனாவின் அறைக்கு
அப்பா சென்றார்கள்.
அப்போது மேஜை மேல் ஒரு கடிதம் இருந்தது .
கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார்.
அந்தக் கடிதத்தில் இருந்த வார்த்தைகளை பார்த்து அவர் துணுக்குற்றார்.
அதில் என்ன எழுதியிருந்தது என்றால் அப்பா நான் லாரன்சுடன் நெருக்கத்தில் உள்ளேன் .
அவர் குழந்தையை 4 மாதங்களாக வயிற்றில் சுமந்து உள்ளேன்.
அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது.
அவர் கஞ்சா கடத்தல் காரர்.
அவர் நல்ல படியாக வேண்டும் என்று இயேசுவிடம் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.
என்ன இருந்தாலும் உங்கள் மாப்பிள்ளை அல்லவா ?
இவ்வாறு எல்லாம் கடிதம் நீண்டுகொண்டே போனது.
அதைப் படித்த அவர் தந்தையின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஒரு வாராக கடிதத்தைப் படித்து முடித்தார். அதில் பின்குறிப்பு.
அடுத்த பக்கம் திருப்பி பார்க்கும் படி. எழுதியிருந்தது உடனே திரும்பிப் பார்த்தார்.
திருப்பி பார்த்தால் அப்பா இவ்வளவு எல்லாம் எனக்கு நடந்திருந்தால் நீங்கள் என்ன பண்ணி இருப்பீர்கள் ?
இந்த தவறு எல்லாம் எனக்கு நடக்கவில்லையே !என்று நீங்கள் சந்தோஷப்படுங்கள்.
நான் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை .எனவே
எனது மார்க்சீட் தங்கள் மேஜை மீது வைத்துள்ளேன் .
தயவுசெய்து எடுத்து பார்க்கவும். பார்த்து கோபித்துக் கொள்ள வேண்டாம்.
நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள் பக்கத்து மீனா வீட்டில் உள்ளேன்.
வந்து அழைத்துச் செல்லவும். என்று எழுதியிருந்தது .
அப்பா என்று பெருமூச்சு விட்டார் லீனாவின் தந்தை.