கொரோனா
கொரோனா


கொரோனா
மாணவர்கள் ஆசையா வச்சு வளர்த்த பூஞ்செடிகள் எல்லாம் தண்ணீர் இல்லாமல், வாடிப்போயிருந்துச்சு. அதைப் பார்த்ததும் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா போச்சு. உடனே, ஆசிரியர்கிட்ட சொல்லிவிட்டு நானே தினமும் வந்து தண்ணீர் ஊத்திட்டு இருக்கேன்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 224 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் சில தன்னார்வல மாணவர்களின் முயற்சியால், கடந்த சில வருடங்களாகப் பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள், பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டு பள்ளி பூஞ்சோலையாக மாறியுள்ளது.
தற்போது, பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவர்களால் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற முடியாமல் போகவே, மரக்கன்றுகள், பூஞ்செடிகள் கருகத்தொடங்கின. இதையறிந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தினமும் பள்ளிக்கு வந்து தனி ஆளாக மரக்கன்றுகள் மற்றும் பூஞ்சோலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். இவரின் முயற்சியால், கருகிப் போன மரக்கன்றுகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. வாடிப்போன பூஞ்செடிகள் எல்லாம் பூத்துக் குலுங்குகின்றன.