anuradha nazeer

Tragedy

4.8  

anuradha nazeer

Tragedy

கொரோனா சமூகஇடைவெளி

கொரோனா சமூகஇடைவெளி

2 mins
164


prompt 8

covid distance

மயானமாம் மயானம்

என் கணவரின் உடன்பிறந்த மூத்த சகோதரி நேற்று இறந்துவிட்டார்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் இறந்து தான் தீர வேண்டும் என்பது விதி எழுதிய சட்டம் .


பிறக்கும் போது அவர்கள் இறக்கும் தேதி நிர்ணயிக்கப் பட்டு விதியாக எழுதி வைக்கப்படுகிறது.

இதில் கொடுமை என்னவென்றால்


அக்காவிற்கு 2மகன், 2 மகள். நால்வருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது .ஒரு மகனும் ஒரு மகளும் இங்கு சென்னையில் வசிக்கிறார்கள் .ஒரு மகள் சேலத்தில் தன் கணவர் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.


தனது கடைக்குட்டி மகனுடன் மதுரையிலேயே அக்கா வசித்து வந்தார்கள்.


ஒரு நாள் முன்பு தான் மதுரையில் உள்ள குரு ஆஸ்பத்திரியில் இருமல் என்று அட்மிஷன் போடப்பட்டது .மறுநாள் காலை இறந்து விட்டார்கள்.


கடைக்குட்டி பையன் என் கணவருக்கு போன் செய்து அழுகிறான், கண்ணீர் விடுகிறான் மாமா இங்கு யாருமே இல்லை.என்ன செய்ய?


என்ன செய்வது என்றே புரிய வில்லை என்று. பிறகு என் கணவர் போனிலேயே ஆறுதல் படுத்தினார். ஒன்றும் கவலைப்படாதே. கடைக்குட்டி மாமா நான் மட்டும் தானே அங்கே இல்லை .மற்ற மூன்று மாமாக்களும் இருக்கிறார்களே, அவர்கள் காரியத்தை

செய்வார்கள் என்று .அதே போல் என் கணவரின் மூன்று அண்ணன்மார்கள் மட்டுமே சென்று   பிணத்தை நல்லடக்கம் செய்து உள்ளார்கள் .


இப்போது குரானா காலம் ஆதலால் மஜீத், தர்கா எல்லாம் இழுத்து மூடப்பட்டு விட்டது. அதனால் அடக்கம் செய்ய அங்கே அனுமதி இல்லை .ஆனால் எங்கோ ஒரு இடத்தில் ஒரு சில தர்ம பிரபுக்கள் ஒருங்கிணைந்து இடம் வாங்கி இன்று நல்லடக்கம் செய்யலாம் என்று இஸ்லாமிய நண்பர்களுக்காக அடைக்கலம் கொடுத்துள்ளார். டாக்டர் சர்டிபிகேட் உடன் சென்றால் அங்கு புதைக்கலாம்.

என்ன ஒரு பெரிய தொண்டு.


சென்னையில் இருக்கும் மகனும் மகளும் போன் செய்து என் கணவரிடம் 

 அழுகிறார்கள் .மாமா என் அம்மாவின் பிணத்தை கூட பார்க்க முடியவில்லையே. அவ்வளவு கொடுத்து வைக்காத பாவிகளா நாங்கள் என்று. இதில் யாரை குற்றம் சொல்வது.என் கணவர் அழுகிறார்கள் . , கண்ணீர் விடுகிறார்கள் .எதுவும் செய்ய 

முடியவில்லை .அக்கா உன் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே அவ்வளவு பாவியா என கதறிக் கதறி அழுதார். பார்ப்பவர்கள் மனதை கரைய வைத்தது.இவரது குடும்பம் மிகவும் பாசக்கார குடும்பம் ஒரு தும்மல், இருமல் என்றால்கூட அத்தனை பேரும் கூறிவிடுவார்கள்.சொந்தங்களின் கூட்டம் பல்லாயிரம்.

அந்தோ பரிதாபம் எனது கணவரின் மூன்று அண்ணன்கள் மட்டும் அக்காவின் கடைசி மகன் மட்டுமே பிணத்தை தூக்கி சென்று அடக்கம் செய்து உள்ளார்கள்.     எனது கணவர் அவர் அனைத்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார் .இதை விதி என்பதா சதி என்பதா குரானாவின் கொடுமை என்பது ஒன்றும் புரியவில்லை.


Rate this content
Log in

Similar tamil story from Tragedy