Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

anuradha nazeer

Tragedy

5.0  

anuradha nazeer

Tragedy

கண்டிக்க

கண்டிக்க

1 min
678


நீலகிரி மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுந்தர். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரியா  . துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்து உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் இந்திரா நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.


இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியா தன்னுடன் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் சென்னையை சேர்ந்த தோழி ஒருவரது தந்தை இறந்து விட்டதாகவும், அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை இரவு நேரத்தில் அவ்வளவு தொலைவிற்கு தனியாக செல்ல வேண்டாம் என கூறி அனுமதி அளிக்க மறுத்ததோடு, எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இதனால் மனமுடைந்த பிரியா, வீட்டில் உருளை கிழங்கு தோட்டத்திற்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (வி‌‌ஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனால் அவர் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார்.

பெற்றோர்களுக்கு குழந்தைகளை கண்டிக்க கூட உரிமை இல்லாமல் போய்விட்டது.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Tragedy