STORYMIRROR

anuradha nazeer

Tragedy

4.7  

anuradha nazeer

Tragedy

கல்யாண வீடும் துக்க வீடு போல்

கல்யாண வீடும் துக்க வீடு போல்

3 mins
12.1K



இந்த வீட்டுக்கு மருமகளா வர ஆசைப்பட்டாளே..!' -காதலனின் செயலால் விபரீத முடிவெடுத்த ஒரத்தநாடு இளம்பெண்

`புகழரசனுடன் என்னைச் சேர்த்து வையுங்க' எனக் கூறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே அவர் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

ஒரத்தநாடு அருகே தன் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் இளம்பெண்ணின் சடலத்தை தூக்கிக்கொண்டு அவரது காதலனின் வீட்டின் முன்வைத்துக் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு கிராமம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் அர்ச்சுனன், இவரின் மகன் புகழரசன். அதே ஊரில் உள்ள மேலத்தெருவைச் சேர்ந்தவர் செல்வம், இவரின் மகள் அருணா. இந்த நிலையில், சென்னையில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். அப்போது ஒரே ஊர் என்ற அறிமுகம் மற்றும் முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தால் நெருக்கமாகி புகழரசனும் அருணாவும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து புகழரசன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் செல்போன் மூலம் இவர்கள் காதல் வளர்ந்திருக்கிறது. இதற்கிடையில், புகழரசனுக்கு அவரின் பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனால் புகழரசன் அருணாவிடம் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார்.


இதையடுத்து புகழரசனுக்கு அவரது பெற்றோர் ஆம்பலாபட்டு தெற்கு கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதற்கு பேசி முடித்ததுடன் நிச்சயதார்த்தம் செய்து திருமணத்துக்கான தேதியும் குறித்தனர். இதற்காக புகழரசன் வெளிநாட்டிலே இருந்து வந்துள்ளார்.

இதை அறிந்த அருணா, `நான் புகழரசனை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன அவர் இல்லாம என்னால் வாழ முடியாது' என்றும், `புகழரசனுடன் என்னைச் சேர்த்து வையுங்க' எனவும் கூறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே அவர் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது ஊரில் உள்ள பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் சமாதானம் செய்த நிலையில், புகழரசன் தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால், புகழரசன் வெளிநாட்டில் இருந்ததால் இந்தப் புகார் குறித்து போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு புகழரசன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து, ஏற்கெனவே நிச்சயித்த சாந்தி என்ற பெண்ணுக்கும் புகழரசனுக்க

ும் நேற்று பட்டுக்கோட்டையில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது எடுத்த போட்டோவை புகழரசன் அருணாவுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்தார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அருணா சோகமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், `புகழரசன் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என் சாவுக்கு புகழரசன் மட்டுமே காரணம்' எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு பாத்ரூமிற்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

பாத்ரூமிற்குச் சென்ற மகள் நீண்டநேரமாக வெளியே வராததையடுத்து அவரின் பெற்றோர் கதவைத் தட்டியுள்ளனர். அப்படியும் திறக்காததால் கதவை உடைத்தனர். ஆனால், அருணா தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்து கதறிய அருணா அம்மாவின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மற்றும் உறவினர் என நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டுவிட்டனர்.

இதையடுத்து, அருணாவின் சடலத்தை தூக்கிக்கொண்டு நேரடியாக புகழரசன் வீட்டிற்குச் சென்றதுடன் வீட்டின் முன்பகுதியில் சடலத்தை வைத்து அழத்தொடங்கினர். மேலும், `வாழ வேண்டிய என் பொண்ணை காதல் என்கிற பெயரில் ஏமாற்றியதுடன் இந்த வீட்டுக்கு மருமகளாக வர ஆசைப்பட்ட என் பொண்ணை இப்படி பிணமாக வர வைத்துவிட்டீர்களே' என அருணாவின் அம்மா கதறியிருக்கிறார்.

அத்துடன் உடன் சென்ற ஆண்கள் புகழரசன் வீட்டின் கண்ணாடி மற்றும் இரண்டு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த உடனே ஒரத்தநாடு டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் என ஆயிரகணக்கானவர்கள் அந்த இடத்தில் திரண்டதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, லேசான தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர். இதைத் தொடர்ந்து புதுமணத் தம்பதிகளை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து ஊர்மக்கள் சிலரிடம் விசாரித்தோம்.


``புகழரசன் மீது உயிரையே வச்சிருந்தா அருணா. அவனைக் கரம் பிடிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தாள். வாழ்ந்தா அவனுடன்தான் எனக் கூறிவந்தாள். ஆனால், என்னாச்சுன்னு தெரியலை திடீர்னு புகழுக்கு அருணாவைப் பிடிக்காமல் போனது. அத்துடன் தன் காதலன் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டான் என்பதை அறிந்த அருணா மனம் உடைந்த நிலையில் காணப்பட்டதுடன் இப்படி ஒரு விபரீத முடிவையும் எடுத்துவிட்டாள். இதனால் கல்யாண வீடும் துக்க வீடு போல் மாறிவிட்டது" என்றனர்.


Rate this content
Log in

Similar tamil story from Tragedy