Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

anuradha nazeer

Tragedy

4.6  

anuradha nazeer

Tragedy

கேன்ஸ் திரைப்பட திருவிழா

கேன்ஸ் திரைப்பட திருவிழா

2 mins
11.5K


கொரோனா பாதிப்புக்கு பலியான உலக நாடுகளின் பல்துறை பிரபலங்கள்


கொரோனா பாதிப்புக்கு உலக நாடுகளின் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் பலியாகியுள்ளனர்.


லண்டன்,


கொரோனா வைரஸ் பாதிப்பு 185 நாடுகளில் பரவி உலக அளவில் 1 லட்சத்து 82 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். 26 லட்சம் பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர்.


இந்த வைரஸ் பாதிப்பு ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி, நடிகை மற்றும் பாடகியான ரீட்டா வில்சன், இங்கிலாந்து நாட்டு நடிகர் இத்ரிஸ் எல்பா, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பாடகி பிங்க் மற்றும் பாடகர் பிளேசிடோ டோமிங்கோ உள்ளிட்ட பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு ஆளானவர்கள்.


இவர்களை தவிர்த்து கொரோனா வைரசின் பாதிப்புக்கு பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் பலியாகி உள்ளனர்.


அவர்களில், நைஜீரியா நாட்டின் உயர் பதவி வகித்த, அதிபருக்கு ஆலோசகராக இருந்த அப்பா கியாரி கடந்த 17ந்தேதி பலியானார்.  


துருக்கி நாட்டு அரசியல்வாதி மற்றும் சுதந்திர துருக்கி கட்சி தலைவரான ஹைதர் பாஸ் (வயது 73) கடந்த 14ந்தேதி பலியானார்.


கடந்த மார்ச் 25ந்தேதி புடாபெஸ்ட் நாட்டுக்கான இங்கிலாந்து தூதரகத்தின் துணை தலைவர் ஸ்டீவன் டிக் பலியானார்.


பிரபல செப் மற்றும் அமெரிக்காவின் டாப் செப் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 வின்னரான பிளாய்ட் கார்டோஜ் கடந்த மார்ச் 25ந்தேதி பலியானார்.


ஆப்ரோ-ஜாஸ் இசை பிரபலம் மனு திபாங்கோ (வயது 86) கடந்த மார்ச் 24ந்தேதி பலியானார்.


ஸ்பெயின் நாட்டின் சான்டேன்டர் என்ற பெரிய வங்கியின் போர்ச்சுகல் பிரிவு தலைவராக இருந்த ஆன்டனியோ வியர்ரா மோன்டீரோ (வயது 73) கடந்த மார்ச் 18ந்தேதி பலியானார்.


ஜப்பான் நாட்டின் சிறந்த காமெடியனான கென் ஷிமூரா கடந்த மார்ச் 30ந்தேதி பலியானார்.


இங்கிலாந்து நாட்டின் லங்காஷைர் கிரிக்கெட் கிளப் தலைவர் டேவிட் ஹாட்ஜ்கிஸ் கடந்த மார்ச் 30ந்தேதி பலியானார்.


ஐ லவ் ராக் அண்டு ரோல் பாடலாசிரியர் ஆலன் மெர்ரில் கடந்த மார்ச் 29ந்தேதி பலியானார்.


நாஜி படைகளிடம் இருந்து பாரீஸ் நகரை விடுவித்த முதல் ஸ்பானிஷ் படை பிரிவின் கடைசி நபராக உயிர் வாழ்ந்த ரபேல் கோம்ஸ் நியோட்டோ கடந்த மார்ச் 31ந்தேதி பலியானார்.


சோமாலியாவின் முன்னாள் பிரதமர் நூர் ஹசன் மற்றும் செர்பியா நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் பிளேசிக் ஆகியோர் கடந்த 1ந்தேதியும், காமெடி நடிகர் எட்டீ லார்ஜ் (வயது 78) கடந்த 2ந்தேதியும் பலியாகினர்.


இது தவிர்த்து பிரான்ஸ் நாட்டில் இந்த வருடம் மே மாதம் நடைபெறவிருந்த கேன்ஸ் திரைப்பட திருவிழா தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மே மாதம் நடைபெற இருந்த மெட் காலா என்ற வருடாந்திர நிகழ்ச்சியும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.



Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Tragedy