Anu Mva

Drama Romance

3.6  

Anu Mva

Drama Romance

காதலின் கீதம்

காதலின் கீதம்

3 mins
904


"என்ன இது?"


என்று கோவமாக ஒரு கடிதத்தை வினோத்திடம் நீட்டினாள் அவனது காதலி ப்ரியா.


வினோத் எதுவும் புரியாமல் அந்த கடிதத்தை வாங்கிப்படித்தான்.


அது அவனுக்கு அவனுடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி எழுதிய காதல் கடிதம். நேரில் சொல்ல தயக்கமாக இருப்பதால் கடிதத்தில் எழுதியிருந்தாள்.


"ப்ரியா இது எங்கிருந்து கிடைத்தது?"


"உன்னோட பாக்கெட்டில் இருந்தது"


என்று கண்களில் அனல் பறக்க அவள் கூற,


"நான் பார்க்கவில்லையே"


"நடிக்காத... இரண்டு நாளாக நானும் நீ இதைப்பற்றி சொல்லுவ என்று வெய்ட் பன்றேன். ஆனால் நீ இதைப்பற்றி வாய் திறக்கவில்லை... இதுக்கு மேலும் என்னால பொறுமையா இருக்க முடியாது"


"ஏய் லூசு நான் இந்த லெட்டரை பார்க்கவில்லை... பிறகு எப்படி இதைப்பற்றி உன்கிட்ட சொல்ல முடியும்?"


"பொய் சொல்லாத நீ பார்த்திருப்ப... "


"ஓஹோ... அப்படினா இந்த லெட்டரை நீ பார்த்ததுமே என்கிட்ட இதைப்பற்றி விசாரிச்சுருக்கலாமே? ஏன் கேட்கவில்லை?"


"நான் ஏன் கேட்கணும்? உனக்கு வந்த லெட்டர்... நீதான் என்கிட்ட சொல்லியிருக்கணும்"


"நான்தான் பார்க்கவேயில்லைன்னு சொல்றேனே... என்னை நம்பமாட்டியா?"


"மாட்டேன்"


"என்ன?"


"உன்னை நம்பமாட்டேன்... எனக்கு உன் மேல நம்பிக்கையில்லை"

என்று ப்ரியா கூறியதும் வினோத்திற்கு கோவம் வந்துவிட்டது.


"அப்படினா இதையும் கேட்டுக்கோ... கல்யாணம் செய்துகொள்ளலாமானு நான் கேட்ட போது எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்ற ஐடியா இல்லைனு சொன்ன உன்னை இனிமேலும் காதலிக்கனுமா என்று எனக்குத் தோணுது"


என்று கூறிவிட்டு ப்ரியாவின் வீட்டிலிருந்து வெளியே சென்றான் வினோத். ப்ரியா செய்வதறியாது திகைத்து நின்றாள்.


ப்ரியா வினோத் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு இடையில் வரும் முதல் சண்டை இதுதான். இதற்கு முன்னாளெல்லாம் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து போய்விடுவது வழக்கம். ஆனால் இப்போது இருவருமே கோவமாக இருக்கின்றனர்.


வினோத் கடந்த சில மாதங்களாக திருமணத்தைப் பற்றி ப்ரியாவிடம் பேசும் போதெல்லாம் அவள் மறுத்துக்கொண்டே இருந்தாள்.

இப்போதைக்கு திருமணம் வேண்டாம், சில காலம் போகட்டும் என்றே கூறிவந்தாள்.


வினோத்திற்கோ திருமணம் செய்துகொண்டு குழந்தைகளோடு வாழ ஆசை.


ப்ரியாவிற்கோ எங்கே திருமணம் செய்துகொண்டாள் பெரிய பொறுப்புகளை சுமக்க வேண்டுமோ, திருமணத்திற்குப் பின் காதல் குறைந்துவிடுமோ என்ற பயம். இந்த பயத்திற்கு முக்கிய காரணம் ப்ரியாவின் பெற்றோரின் வாழ்க்கை.

காதலித்துதான் ப்ரியாவின் பெற்றோர் திருமணம் செய்துகொண்டனர்.


இருப்பினும் இன்று டிவோர்ஸ் வாங்கிவிட்டு தனித்தனியாக வாழ்கின்றனர். அதேபோல தனது வாழ்க்கையும் ஆகிவிடுமோ என்ற பயம் அவளுக்குள் இருந்தது.

வினோத்திற்கும் ப்ரியாவிற்கும் சண்டை ஏற்பட்ட பின்னர் இருவரின் மனமும் சரியில்லாமல் இருந்தது. ப்ரியாவிற்கோ வினோத்தின் கோவம் புதிது.


முன்தினம் வினோத் பேசிய வார்த்தைகளே ப்ரியாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்க, வினோத் அவளுக்கு போன் செய்தான்.


"இன்னைக்கு ஈவினிங் வழக்கமா நாம சந்திக்கிற ரெஸ்டாரண்ட்க்கு வா... ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"

என்று உயிரற்ற குரலில் கூறிவிட்டு ப்ரியாவின் பதிலைக்கூட எதிர் பார்க்காமல் போனை வைத்துவிட்டான்.


ப்ரியாவிற்கோ அழுகையாக வந்தது. எப்போதும் வினோத் இப்படி பேசியதில்லை. இம்முறை அவன் பேசிய விதமே ப்ரியாவின் மனதிற்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.


உடனே தனது தோழிக்கு போன் செய்து முந்தைய நாள் நடந்த விஷயங்களை விவரித்தாள்.


"ப்ரியா... நீ சொல்வதைப்பார்த்தால் வினோத் உன்கூட பிரேக்கப் பண்ணப்போகிறான். "

என்று அவளது தோழி கூறவும் ப்ரியாவின் நிலைமை இன்னமும் மோசமானது.


வினோத்தை சந்திக்கப்போவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்குப் பிறகு வினோத்தை சந்திக்க கிளம்பினாள்.


வழக்கத்திற்கு மாறாக வினோத் சீக்கிரமாகவே வந்து ப்ரியாவிற்காக காத்திருந்தான்.


"என்ன சீக்கிரம் வந்துட்ட?"

என்ற ப்ரியாவின் கேள்வியை புறக்கணித்துவிட்டு,


"ப்ரியா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"


"நானும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் வினோத்"


"சொல்லு..."


"நான் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னதற்குக் காரணம், உன்னை பிடிக்கவில்லை என்பதில்லை... எனக்கும் திருமணம் செய்ய ஆசைதான். ஆனால்... எங்கே திருமணத்திற்குப் பிறகு காதல் இல்லாமல் வெறும் கடமைக்காக வாழ நேறிடுமோன்னு பயம்... பெரிய பொறுப்புகளை சுமக்குற அளவுக்கு எனக்கு வலிமை இல்லையோன்னு பயம்... ஆனால்..."


"ஆனால்?"


"நேற்று நடந்த சண்டைக்குப் பிறகு, மற்ற பயத்தைவிட நீ என்னைவிட்டு பிரிந்துவிடுவியோ என்ற பயம் தான் அதிகமா இருக்கு. பிலீஸ் வினோத் பிரேக்கப் மட்டும் பண்ணிடாத பிலீஸ்..."


என்று மனதுடைந்து அழுகத்துடங்க...


"ப்ரியா என்ன இது... பப்ளிக் பிளேஸ்..."


"எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கு நீ வேணும்... என்னைவிட்டு போய்விடாதே..."

என்று அவள் அழுதுகொண்டே இருக்க, சுற்றி இருப்பவர்கள் இவர்களையே கவனிக்கத் தொடங்கினார்கள்.


"ஏய் லூசு... நான் சொல்றதை கொஞ்சம் கேளு..."


"இல்லை நான் கேட்கமாட்டேன்..."

"பைத்தியம்... வா என்கூட"


என்று ப்ரியாவின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தான்.


"லூசு... நான் எப்போ உன்கூட பிரேக்கப் பன்றதா சொன்னேன்? அந்த ஆசையெல்லாம் இருக்கா உனக்கு? "


"அப்படினா நீ என்கூட பிரேக்கப் பண்ண வரலையா?"


"நான் எதுக்குடி பிரேக்கப் பண்ணனும்?"


"நேற்று நீ பேசியதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது..."


"கடவுளே... நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல... உன்னைத்தவிர இன்னொரு பொண்ணு என்னோட வாழ்க்கையில் வரணும்னா அது நம்மளோட குழந்தையாக மட்டும் தான் இருக்க முடியும்... உலக அழகியே வந்தாலும் எனக்கு இன்னொரு பெண் மீது ஈர்ப்பு கூட ஏற்படாது... "


"...."


" உன்கிட்ட நான் இன்னும் பிராப்பராக ப்ரொப்போஸ் பண்ணல... அதனாலதானோ என்னவோ உனக்கு என்மேல நம்பிக்கை இல்லைனு நினைத்தேன்... இன்னைக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு நினைத்து..."


என்று சொல்லிக்கொண்டே அவனது பாக்கெட்டிலிருந்து மோதிரம் ஒன்றை எடுத்தான்...


"இந்த மோதிரத்தை கொடுக்க நினைத்தால்... நீதான் பிரேக்கப் அது இதுன்னு லூசு மாதிரி பேசிட்டு இருந்த"


"ப்ரொபோசலா?"


"ஆமாம்.. மேரேஜ் ப்ரொபோசல்"

என்றதும் தான் ப்ரியாவிற்கு உயிரே வந்தது. கவலைகளை மறந்து அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டே,


"அப்புறம் எதுக்கு வெய்ட் பன்ற... வா கல்யாணம் பண்ணிக்கலாம்"

"என்ன? என்ன சொன்ன இப்போ?"


"கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன்... "


என்று சிரித்துக்கொண்டே கூற, வினோத்தும் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ப்ரியாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தான்.


திருமணம் ரிஸ்க் தான்... காதல் திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் சொல்வார்களா? அப்படியே சொன்னாலும் முழு மனதுடன் தங்களை ஏற்றுக்கொள்வார்களா?திருமணத்திற்கு பிறகும் அதே காதல் இருக்குமா? நல்ல முறையில் வாழ்க்கையை நடத்த முடியுமா? பொறுப்பாக குடும்பத்தை நடத்த முடியுமா? என்று பல குழப்பங்களும் தயக்கங்களும் வரலாம்.


ஆனால் நாம் விரும்புபவரை பிரியும் துயரத்தைவிட மற்றவை ஒன்றும் பெரிதல்ல... வாழப்போவது ஒருமுறைதான். அதனை நமக்குப் பிடித்தவருடன் வாழ்வோமே... தேவையில்லாத பயத்தை நீக்கிவிட்டு, நம் துணை மீது நம்பிக்கையுடன் வாழ்வதுதான் காதல் வாழ்க்கைக்கு அழகு


Rate this content
Log in

Similar tamil story from Drama