Anu Mva

Drama Romance

3  

Anu Mva

Drama Romance

காதல் ஓவியம்

காதல் ஓவியம்

17 mins
913


சுபா தனது பெரியப்பா , பெரியம்மா, சித்தி , சித்தப்பா , மாமா, அத்தை, அண்ணன் ஆகியோருடன் வசித்து வருகிறாள். அவர்கள் இருப்பது ஒரு சிறிய எழில் நிறைந்த கிராமத்தில். சுபாக்கு அப்பா அம்மா இல்லாததால் வீட்டில் இருப்பவர்கள் அவளை பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். சுபாக்கும் தனது குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும். சுபா வீட்டுக்கு ஒரே பெண். அவர்கள் வீட்டில் பிறந்த மற்ற பிள்ளைகள் அனைவரும் ஆண்கள் என்பதாலும் சுபாக்கு அவர்களின் வீட்டில் பாசம் அதிகம். 


வீட்டை விட்டு பெண்கள் வெளியே செல்வதையே அனுமதிக்காத ஒரு ஊரில் முதல் முறையாக சுபா தான் வெளி ஊருக்குச் சென்று பட்டப் படிப்பு முடித்தது. அதைப் பார்த்துதான் மற்ற பெண் பிள்ளைகளை அந்த ஊரினர் படிக்கவே அனுமதித்தனர். சுபாவின் நடை உடை பாவனை போன்றவற்றையும் அவளது அழகான பேச்சு அவளுக்கு இருக்கும் அறிவு என சுபாவைப் பார்த்துப் பார்த்து வீட்டினர் பூரித்துப் போனார்கள். 


அது மட்டும் இல்லாமல் சுபாவை அந்த ஊரில் உள்ள பல பெண்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டுள்ளனர். இப்படி சுபாக்கு எந்த குறையும் இல்லாமல் பெரிய மரியாதையுடன் அவள் இருந்து கொண்டு இருக்கும் சமயத்தில் தான் ரவி அந்த ஊருக்கு வேலை தேடி வந்தான்.


ரவியின் குடும்பத்தில் அவனும் அவனது அம்மாவும் மட்டும்தான். சில நாட்களுக்கு முன்னர் அவரும் இறந்துவிட அவனது ஊரில் இருக்கப் பிடிக்காமல் அவன் இந்த ஊருக்கு வந்துவிட்டான். சுபாவின் பெரியப்பா ஷண்முகம் அவனது திறமையைப் பார்த்து தனது இடத்தில் வேலை போடுக் கொடுத்தார். தினமும் காலையிலும் இரவிலும் ரவிக்கு ஷண்முகம் வீட்டில் தான் உணவு. 


மதியம் சில நேரம் அங்கு சாப்பிடுவான் சில நேரம் வெளி ஊருக்குக் செல்ல வேண்டி வரும். அப்படிப்பட்ட நேரத்தில் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்வான்.


சண்முகத்தின் வீட்டு ஆட்களைப்பற்றி சிறிது சொல்ல வேண்டும்.


சண்முகத்தின் மனைவி விசாலாட்சி அவர்களுக்கு ஒரே மகன் பெயர் சுகன். அவருக்கு அடுத்தது சுந்தரம் அவரது மனைவி மீனாட்க்ஷி. சுந்தரத்தின் தங்கை சீதாலட்சுமி. அவளது கணவன் முருகன். இவர்களுக்கு இரண்டு மகன். ஒருவனுக்கு திருமணமாகி மதுரையில் தனது குடும்பத்துடன் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். பெயர் கணேஷ். இன்னொருவன் வெளிநாட்டில் வேலை செய்கிறான் பெயர் மதன். அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அனைவரும் ஒரே குடும்பமாக இருந்து வருகின்றனர். சுந்தரத்துக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனும் வீட்டுக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டான். சுந்தரத்திடம் சொல்லி இருந்தால் அவரே திருமணம் செய்து வைத்திருப்பார். ஆனால் அவன் சொல்லாததனாலேயே அவனை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை.


அன்று காலையில் ஷண்முகம் வெளி ஊருக்கு சென்றுவிட சுந்தரம் ரைஸ் மில்லுக்கு சென்றிருந்தார். முருகனும் தென்னந்தோப்புக்கு சென்றிருந்தார். அவருடன் சுகனும் சென்றிருந்தான். வீட்டில் இருந்த பெண்கள் கோவிலுக்குச் செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தனர்.


விசாலாட்சி- சுபா நீ கோவிலுக்கு கிளம்பளையா?


சுபா- இல்ல எனக்கு தல வலிக்குது நீங்க போயிட்டு வாங்க


மீனாக்ஷி- உன்ன தனியா விட்டுட்டு நாங்க எப்படிப் போறது? சரி நாம நாளைக்குப் போவோம்


சுபா- என்ன சித்தி இது கிளம்பி ரெடி ஆகிட்டு போகாம இருக்கீங்க? போயிட்டு வாங்க. அதுவும் இல்லாம இன்னைக்கு மதன் அத்தானுக்கு பர்த்டே வேற. போய் அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டாமா?


சீதாலட்சுமி- அடடே நான் கூட மறந்துட்டேன் நீ சரியாய் நியாபகம் வச்சுருக்கியே


மீனக்ஷி- ஆமா மதினி நாங்களும் மறந்தே போய்ட்டோம்


விசாலாட்சி- அப்படினா சுபா நாங்க போயிட்டு சீக்கிரம் வந்துடுறோம் நீ பத்திரமா இருந்துக்க


சுபா- நான் பாத்துக்குறேன். நீங்க கவலைப்படாதீங்க. போய் நல்லா வேண்டிட்டு வாங்க


சீதாலக்ஷ்மி- சரி கண்ணு நாங்க போயிட்டு வந்துடுறோம்னு சொல்லிட்டு அனைவரும் கிளம்பி சென்றுவிட சுபா அவர்கள் போவதை பார்த்திருந்து விட்டு உள்ளே சென்று நன்றாக முகத்தை அலம்பிவிட்டு தலையை நீட்டாக சீவிக் கொண்டு ஹால்க்கு வந்தாள். அவள் கோவிலுக்கு போகாத காரணம் அவளுக்கு தலை வலி என்று இல்லை.


இப்போது ரவி உணவு அருந்த வரும் நேரம். அதனால் தான் சுபா கோவிலுக்கு போக வில்லை. ரவி அங்கு வந்ததில் இருந்தே அவனை சுபாவிற்க்குப் பிடித்துவிட்டது. ஏன் என்று சொல்லத் தெரியாத அளவுக்கு ஒரு அன்பு அவன் மேல் ஏற்ப்பட்டு விட்டது. அதன் காரணமாகத் தான் அவள் வீட்டிலேயே இருந்தாள். 


வீட்டுக்குள் வந்த ரவி சுபா பூ கட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான். பிறகு சுற்றி சுற்றி பார்த்தான். வீட்டில் வேறு யாரும் இல்லாதது போல தெரிய அப்படியே வெளியே கிளம்பினான்.


சுபா- ஒரு நிமிஷம்


ரவி- ம்ம்ம்…


சுபா- என்ன வந்துட்டு கிளம்பிட்டீங்க


ரவி- வீட்டுல பெரியவங்க யாரும் இல்ல அதான் 


சுபா- அதுக்கு?


ரவி- நான் அப்படியே கிளம்பி வேலைக்குப் போறேன்


சுபா- சாப்பிடலயா?


ரவி- இல்ல பசிக்கவில்லை


சுபா- என்ன நீங்க? பசிச்சாலும் பசிக்கலைனாலும் காலையில சாப்பிடணும்னு தெரியாதா?


ரவி- அது… வீட்டுல யாரும் இல்ல போல நான் மதியம் வரேன்


சுபா- ஏன் என்னைப்பார்த்தால் மனுஷியா தெரியலையா?


ரவி- அப்படி சொல்லலைங்க…


சுபா- வேற எப்படி

என்று கேட்டுக்கொண்டே எழுந்து வந்து அவனுக்கு எதிர்த்தார் போல கையை கட்டி கொண்டு தூணில் சாய்ந்து நின்றாள். அவளது பார்வை குறும்புத்தனமாக இருக்க ரவி அவளது கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டு சொன்னான் 


ரவி- வீட்டுல பெரியவங்க இல்லாத நேரம் நான் இங்க இருக்குறது தப்பு


சுபா- என்ன தப்பு


ரவி- வயசு பொண்ணு இருக்குற இடத்துல இப்படி ஒரு ஆம்பள இருக்குறது சரி இல்லை


சுபா- ஏன் உங்க மனசுல ஏதாவது தப்பான எண்ணம் இருக்குதா?


ரவி- நோ...


சுபா- அப்புறம் என்ன தயக்கம்


ரவி- நான் கிளம்புறேன்


சுபா- எதுக்கு இவ்ளோ அவசரம்? வந்து சாப்டுட்டு அப்புறம் போங்க


ரவி- வேண்டாம்ங்க சொன்னால் கேளுங்க


சுபா- இப்போ நீங்க சாப்பிடலைனா இனி எப்போதுமே இங்க சாப்பிடக் கூடாது


ரவி- சரிங்க


சுபா- என்னங்க நீங்க எது சொன்னாலும் இப்படி பேசறீங்க?


ரவி- நான் வரேன்னு சொல்லிட்டு வாசல் பக்கம் சென்றவனை சுபாவின் அதிகார குரல் நிறுத்தியது


சுபா- நில்லுங்க ரவி. இப்போ நீங்க வந்து சாப்பிடலைனா அப்புறம் நானும் சாப்பிடமாட்டேன்


ரவி- என்னது இது உங்களோட வம்பா போய்டுச்சு


சுபா- [சிறிய புன்னகையோடு] ப்ளீஸ் பசியோடு வந்தவர்களை சாப்பிடாம அனுப்பறது எங்க பேமிலிக்கு சுத்தமா பிடிக்காது. வாங்க ப்ளீஸ். 


இப்படி அவள் அன்பாக கெஞ்சிக் கேட்கவும் எதுவும் சொல்ல முடியாமல் சாப்பிட வந்தான். உடனே சுபா சுறுசுறுப்பாக தட்டை வேகமாக எடுத்து வைத்தாள். இட்லி சாம்பார் சட்னி என அனைத்தையும் எடுத்து வைத்தாள். பிறகு பரிமாறினாள். அவனும் சாப்பிட சுபா, ரவி சாப்பிடுவதையே இரசித்தவாறு இருந்தாள்.


ரவி- ஏன் இப்படி பார்க்கறீங்க?


சுபா- ஒன்னும் இல்ல நீங்க சாப்பிடுங்க


ரவி- இனி நீங்க சாப்பிடுவீங்கல்ல?


சுபா- [லேசாக சிரித்துக் கொண்டு] நான் காலைலயே சாப்பிடுட்டேன்


ரவி- அப்புறம் எதுக்குங்க இப்படி மிரட்டி சாப்பிட வச்சிங்க


சுபா- உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது நல்ல பசயில் இருக்கிங்கன்னு. அப்படி இருக்கும் போது இந்த மாதிரி சின்ன காரணத்திற்காக நீங்க சாப்பிடாமல் போறது நல்லா இல்ல


ரவி- என் மேல அப்படி என்ன கரிசனம்


சுபா- [அவனது கண்ணையே பார்த்துக்கொண்டு] ஏன் உங்களுக்குத் தெரியாதா


ரவி- [அவளது பார்வையை தாங்க முடியாமல் கீழே குனிந்து கொண்டு] தெரியாது


சுபா- நீங்க நல்லா சாப்பிட்டா தான நல்லா வேலை செய்ய முடியும் அதுல லாபம் எங்களுக்குத் தான...அதனாலதான்


ரவி- ஓ…[ அந்த ஓ… வில் அவனது ஏமாற்றம் தெரிந்தது]


ஒருவாறு அவன் சாப்பிட்டுவிட்டு கை கழுவ வந்தான். பின்கட்டில் நீர் இறைத்து வந்திருந்த தொட்டியில் இருந்து நீரை மோந்து கை கழுவிக் கொண்டு இருக்கும் போது சுபா சொன்னாள்.


"நான் ஒரு விஷயம் சொன்னா கேட்பிங்களா”


அவன் நிமிர்ந்து பார்த்த போது கையில் துண்டுடன் சுபா நின்று கொண்டு இருந்தாள்.


“சொல்லுங்க. நீங்க எஜமானி நீங்க சொல்றத செய்யாம இருக்க முடியுமா?”


“இதோ இந்த மாதிரி பேசுறத கொஞ்சம் தூக்கி வீசரிங்களா? எதுக்கு நீங்க நாங்கனு பேசிட்டு இருக்கீங்க?நான் உங்களை விட சின்னவதான? பெயர் சொல்லியே கூப்பிடலாம்”


“அது… அதுலாம் நல்லா இல்ல என்ன இருந்தாலும் நீங்க முதலாளி நான் …”


“நிப்பாட்டுரிங்களா? இப்படி நினைக்குறத நிறுத்துங்க. என்னை வெறும் சாதாரண மனிஷியா பாருங்களேன்”


“அது எப்படி முடியும்..”ரவியின் பதில் சுபாவிற்க்கு எரிச்சலை தந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.



பிறகு சமாளித்துக் கொண்டு


“ரவி…மதியத்துக்கு இங்க தான் சாப்பாடு மறக்காம வந்துடுங்க”


“இல்ல வெளி ஊருக்குப் போறேன் அங்கயே சாப்டுக்குறேன்” 


“நீங்க இன்னைக்கு போக மாட்டீங்க இங்க தான் சாப்பிட வருவீங்க”


“எப்படி?”


“நீங்க இங்க தான் சாப்பிடணும்னு நான் முடிவு செஞ்சுட்டேன் அதான்” னு சொல்லிட்டு சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்யத் தொடங்கினாள். 


அப்போது கோவிலுக்கு சென்ற பெண்மணிகள் வந்தனர். ரவிக்கு பயம் வந்தது. அவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என எண்ணி கொண்டு இருந்தான். 


விசாலாட்சி- அடடே ரவி வா.. எப்போ வந்த


சுபா- அப்போவே வந்துட்டாரு


மீனக்ஷி- இந்தா பிரசாதம். 


ரவி- நன்றிமா


விசாலாட்சி- சாப்டியாப்பா


ரவி- சாப்பிட்டேன். இவங்க வச்சுக்கொடுத்தாங்க ( என்று சுபாவை காண்பித்தான்)


மீனாக்ஷி- அப்படியா? நாங்க மறந்துட்டோம் . சாரி சுபா உனக்குத்தான் கஷ்டம்


சுபா- இதுல என்ன சித்தி கஷ்டம் இருக்குது


ரவி- அப்போ நான் கிளம்புறேன்


சுபா- ஒரு நிமிஷம் மதியம் சாப்பாடு நம்ம வீட்டுல தான் வந்துடுங்க 


ரவி- இல்ல அது…


சீதாலட்சுமி- ஆமா ரவி இன்னைக்கு என் பையன் பிறந்த நாள் அதனால எல்லாருக்கும் சாப்பாடு இங்க தான். வந்துடு


ரவி- சரிங்க வரேன். இப்போ கிளம்புறேன்னு சொல்லிட்டு சுபாவைப் பார்த்தான்.


அவளும் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க அவளது பார்வையில் சிக்கி விடுபட முடியாமல் தவித்துப்போனான். அவளது பார்வையில் வெற்றியும் கலந்து இருந்தது. பின்னர் எப்படியோ சமாளித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் சென்ற பிறகு 


சுபா- என்ன அத்தை அர்ச்சனை செஞ்சாச்சா?


சீதாலட்சுமி- எல்லாம் நல்லா செஞ்சாச்சு நீ வராததுதான் குறை மருமகளே


சுபா- அதுக்கு என்ன அத்தை மனசுல வேண்டிக்கிட்டாலே போதுமே


மீனக்ஷி- சரி சமையலுக்கு என்ன செய்றது 


சுபா- உங்க இஷ்டம் அத்தை


விசாலாட்சி- அது எப்படி முடியும் என் பொண்ணு என்ன செய்ய சொல்கிறாளோ அதுதான் செய்யணும்னு உன் பெரியப்பா சொல்லிட்டாரு. நீ சொல்லு என்ன செய்யலாம் 


சீதாலக்ஷ்மி-சைவமா அசைவமா? என்ன செய்றது?


சுபா- பிறந்த நாளுக்கு யாராவது உயிரை கொன்னு விருந்து வைப்பாங்களா? சைவம் செய்வோம்


மீனாட்சி- அப்போ எண்ணலாம் செய்யலாம்


சுபா- சாப்பாடு , சாம்பார் , காரக் குழம்பு , ரசம், மோர், அவியல் , கேரட் பொரியல் , உருளை கிழங்கு மசியல், கிச்சடி , அப்பளம் ,சேமியா பாயாசம்


சீதாலக்ஷ்மி- ஸ்வீட்க்கு?


சுபா- குலாப்ஜாமுன். நானே செய்றேன்


சீதாலக்ஷ்மி- அடடே என் தங்கம் இன்னைக்கு ஸ்வீட் செய்யப்போகுதா? என்ன ஒரு அதிசயம்?


மீனாட்சி- கையில ஏதாவது சுட்டுக்கப்போற வேண்டாம்


சுபா- முடியாது நான் செய்வேன்

என்று அடம் பிடிக்கும் சிறு குழந்தை போல கேட்கவும் 


விசாலாட்சி- சரி கண்ணு நீயே செய் 


மீனாட்சி- ஆமா மதினி மதன் போன் பண்ணினானா?


சீதாலட்சுமி- இன்னும் இல்லயே


சுபா- இப்போதான் அங்க விடுஞ்சு இருக்கும் அத்தான் எந்திரிக்க இன்னும் சில மணி நேரம் ஆகும். அதுக்கு அப்புறம் நானே கால் செய்றேன். அத்தை நீங்க சமையல் வேலைய பாருங்க


சீதாலக்ஷ்மி- சரி என் செல்லம்னு நாடியை பிடித்து கொஞ்சி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்கள். 


சுபாக்கு இன்னைக்கு ரவிக்கு தனது கையால் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை. அதனால் தான் குலாப்ஜாமுனை அவளே செய்வதாகக் கூறினாள்.


கொஞ்ச நேரம் சென்ற பின்னர் மதனுக்கு கால் செய்தால் சுபா 


"அத்தான்”


“சுபா ஸ்வீட்டி எப்படி இருக்க?”


“அதுலாம் இருக்கட்டும் அத்தான் மெனு மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே”


"ஓ… தான்க்ஸ் ஸ்வீட்டி. நீ தான் முதல் விஷ் பண்ணிருக்க தேங்க்ஸ் எ லாட் டியர்”


“நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்லாம்? சரி என்ன ஸ்பெஷல்”


“ஸ்பெஷல் என்ன. .. பிரின்ட்ஸ் கூட வெளில போகணும். ட்ரீட் கொடுக்கணும்”


“என்ன பீர் ஆஹ் இல்ல ஸ்காட்ச் ஆஹ்?”


“ ஸ்காட்ச் தான்”


“சரி நீங்க அளவா குடிங்க அதிகமா குடிக்காதீங்க அப்புறம் அடுத்த நாள் தலைவலி வந்துடும்”


“அனுபவமா ஸ்வீட்டி?”


“அடி வாங்க போறீங்க”


“ஓகே ஓகே வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?”


“சூப்பர் அத்தான் நல்லா இருக்கோம் எல்லாருமே. நீங்க எப்படி இருக்கீங்க?”


“உண்மைய சொல்லவா பொய் சொல்லவா?”


“என்னிடம் பொய் வேற சொல்லுவிங்களா?”


“சரி சரி உண்மையே சொல்றேன். முன்னாடிக்கு இப்போ கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்”


“டெய்லி பீர் குடிச்சா அப்படித்தான்”


“டெய்லி லாம் இல்ல சுபா ஜஸ்ட் வீக்லி ஒன்ஸ் ”


“வீக்லி ஒன்ஸ் ஆஹ்? நீங்க ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க. இங்க வாங்க அப்புறம் பாத்துக்கறேன். சரி அத்தையிடம் கொடுக்கறேன்”


“ஓகே கொடு”


சுபா போன் எடுத்துட்டுப்போய் சீதாலட்சுமியிடம் கொடுத்தாள். அவள் வாங்கிப் பேச அவளைத் தொடர்ந்து மற்ற அனைவரும் சந்தோசமாக அவனிடம் பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனது. கடைசியாக சுபாவிடமே போன் வந்தது.


“ஓகே அத்தான் நீங்க வேலைக்கு கிளம்ப லேட்டாகுது கிளம்புங்க”


“இன்னைக்கு லீவு. பர்த்டே அன்னைக்கு யாராவது வேலைக்குப் போவார்களா? நான் பிரன்ட்ஸ் கூட வெளிய போறேன்”


“ஓகே என்ஜோய் அத்தான்”


“ஓகே பை டியர் டேக் கேர்”


“பை”னு சொல்லிட்டு போனை வைத்தாள்.


அன்று மதியம் சாப்பிட வந்தவர்களை கவனித்தே களைத்துப் போனார்கள் வீட்டில் இருந்த பெண்கள். கடைசி பந்தியில் தான் ரவி அமர்ந்தான்.


சீதாலக்ஷ்மி- என்ன இவ்ளோ லேட்டா வர


ரவி- வேலை நிறைய இருந்ததும்மா அதனாலதான் லேட்.


மீனாக்ஷ்மி- என்ன ரவி சாப்பாடு எப்படி?


ரவி- சூப்பர்ம்மா அதுலயும் குலாப்ஜாமுன் செம ஸ்வீட்


மீனாக்ஷ்மி- என் பொண்ணு செஞ்சதுதான்னு சொல்லவும் ரவி சுபாவைத் தேடினான்.


அவள் ஒரு ஓரத்தில் நின்று அவனையே பார்த்துக் கொண்டு இருக்க அவன் என்ன செய்வது என தெரியாமல் சற்று திகைத்தான். பின்னர் லேசாக புன்னகைத்து விட்டு சாப்பிடத் தொடங்கினான். அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு கிளம்பினார்கள்.


சுந்தரம்- ரவி வேலை ஒன்னும் அதிகமா இல்ல அதனால நீ வீட்டுக்குப் போ நாளைக்கு வந்தா போதும்


ரவி- சரிங்க 


ரவி- சித்தப்பா ஒரு நிமிஷம் இருக்கச் சொல்லுங்க வெளிய மழை வர மாதிரி இருக்குது விட்டதும் போகட்டும்


ரவி- மழை இன்னும் வரலையே அதுக்குள்ள போய்விடுவேன்


சுந்தரம்- இல்ல சுபா சொன்னா சரியாய் இருக்கும் மழை வர மாதிரி தான் இருக்குது நீ கொஞ்சம் இருந்து போ


ரவி- என்னப்பா நீங்க வானிலை அறிக்கை கணிக்கும் ரமணன் சொன்னாலே இப்போதெல்லாம் மழை வருவதில்லையே ... இவங்க சொல்லியா..

னு சொல்லிட்டு இருக்கும் போதே இடி மின்னலுடன் கனமாக மழை பெய்யத் தொடங்கியது


சுந்தரம்- பார்த்தியா எங்க பொண்ணு சொன்னா சரியாத்தான் இருக்கும்


ரவி சுபாவைப் பார்க்க அவளும் அவனையே நோக்கிக் கொண்டு இருந்தாள். 


எப்போதும் போல குறும்புச் சிரிப்புடன் இருந்தாள். பிறகு அவனுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து


சுபா- நீங்க புக்ஸ் நெறைய படிப்பிங்கனு கேள்விப்பட்டேன்


ரவி- ம்ம்.. ஏதோ ஒரு அளவுக்கு


சுபா- என்ன புக்ஸ்லாம் படிப்பிங்க?


ரவி- கதை கவிதை கட்டுரைன்னு எது கிடைச்சாலும் படிப்பான். அதிகமா வரலாற்று புத்தினங்களைத்தான் படிப்பேன்


மீனாக்ஷி- என் பொண்ணுக்கும் அதுதான் பிடிக்கும் அப்படித்தானே சுபா. 

என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே, மலர் வந்தாள்.[ அவர்களிடம் வேலை செய்யும் இளம் பெண். ரவி என்றால் அவளுக்கும் ஒரு விருப்பம் இருந்தது]


மலர்- ஆனால் இவர் அளவுக்கு யாராலும் படிக்க முடியாது. பொன்னியின் செல்வன் நாவலை 3 நாளுல படிச்சு முடிச்சாரு பாத்துக்கோங்க

என்று கூற,


சுபா மனதுக்குள் மலர் சொன்னது எரிச்சலைத் தந்தது 

‘ இவள் எப்படி இதை தெரிந்து வைத்து இருக்கிறாள்?’


சுந்தரம்- ரவி நீ கூட மலைக்கள்ளன் புக் தேடிட்டு இருக்குறதா சொன்னியே... சுபா உன்கிட்ட இருக்குமே அது?


சுபா- இருக்குது சித்தப்பா ஆனால் மாடி அறையில் இருக்குற பரண் மேல் இருக்குது . எனக்கு எட்டாது. ரவி நீங்க என் கூட கொஞ்சம் வாங்க. புத்தகம் இருக்குற இடத்தை காமிக்கிறேன். எடுத்துக்கோங்க.


ரவி- இருக்கட்டும் பரவாயில்லை. 


சுபா- எனக்கும் ஒரு புக் தேவைப்படு்து. அதுவும் அங்க தான் இருக்குது. அதுக்குத்தான் கேட்கிறேன்


சுந்தரம்- போய் எடுத்துக் கொடுப்பா


ரவி- சரினு சொல்லி ஆவலுடன் வந்தான். இருவரும் நடந்து மாடியில் இருந்த கடைசி அறைக்குச் சென்றார்கள். 


சுபா பரணைக் காண்ப்பித்தாள். அந்த இடம் மிகவும் இருட்டாக இருந்தது


“மேல கைய வச்சு பார்த்தீங்கன்னா இருக்கும்”


“ஏன் இந்த ரூம் இவ்ளோ டார்க்கா இருக்குது?”


“லைட் பியூஸ் போய்டுச்சு "


அவன் கையை வைக்கவும் அந்த புக் தான் கிடைத்தது


“உங்களுக்கு எந்த புக் எடுக்கணும்”


“எனக்கு ஏதும் எடுக்க வேண்டியது இல்ல சும்மா தான் சொன்னேன்”


“அப்போவே நினைத்தேன்”


ரவிக்கு அந்த புக் கிடைத்துவிட்ட போதும் அவன் அந்த ரூமில் இருந்து நகராமல் இருக்கவே சுபா கேட்டாள்,


"மலருக்கு எப்படி நீங்க 3 நாளில் அந்த புத்தகத்தை படித்து முடிச்சது தெரியும்?”


“நானும் உங்க சித்தப்பாவும் பேசிட்டு இருக்கும் போது நான் அவரிடம் சொன்ன விஷயம் அது. அப்போ பக்கத்துல அந்த பொண்ணு கோணி தச்சுட்டு இருந்துச்சு. அவளுக்கும் கேட்டுருக்கும்னு நினைக்கிறேன்”


“ம்ம்ம்… அவ்ளோ தான வேற ஏதும் இல்லையே?”


“வேற என்ன?”


“ஒன்னும் இல்ல”


“போகலாமா?”


“போங்க”


“நீங்க?”


“இங்கேயேவா இருக்கப்போகிறான் வந்துடுவேன்”


அவன் முன்னே செல்ல சுபா பின்னாடி வந்தாள். அதற்குள் மழை சற்று தணிந்து இருக்க மலர் குடை உடன் நின்று கொண்டு இருந்தாள்.


சுபா- என்ன மலர் வீட்டுக்கு போகலையா? அதான் குடை வச்சுருக்கியே?


மலர்- என் வீட்டுக்கு பக்கத்துல தான அவரு வீடு. அதனாலதான் சேர்ந்து போய்டலாம்னு இருக்கேன்

‘அவர்’ என்று அவள் குறிப்பிட்டது ரவிவைத்தான். 


சுபாக்கு உள்ளூர எரிந்தது. இருவரும் ஒரே குடையிலா என பொருமினாள். ரவி எதுவும் சொல்லாமல் மலருடன் அந்த குடையிலேயே செல்வதை பார்த்து இன்னமும் மனசு பொறுமியது.


அடுத்த நாள் ரவி சாப்பிட வரவில்லை. விசாரித்த போது முந்தய நாள் மழையில் பாதி நனைந்து கொண்டே சென்றதால் காயிச்சல் வந்துவிட்டது எனத் தெரிந்தது. சுபா அவனைப் பார்க்க மீனாட்சி உடன் அவனது வீட்டுக்குச் சென்றாள். 


அங்கு அவள் கண்ட காட்சி அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ரவி முடியாமல் படுத்து இருக்க மலர் அவனுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு இருந்தாள்.


‘இவள் யாரு இதை செய்றதுக்கு’ னு உள்ளூர கோவத்தில் பொங்கினாள் சுபா. அவனைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு ஆத்திரம் தாங்கமாட்டாமல் சித்தியிடம் கொட்டினாள். 


"என்ன சித்தி இது? ச்சி… எப்படி கல்யாணம் ஆகாத ஒருத்தர் வீட்டுல அந்த மலர் அவ்ளோ பணிவிடை செய்றது. எனக்கு பார்க்கவே சகிக்கவில்லை. என்ன பொண்ணு இவள்? இந்த மலர்தான் இப்படின்னு பார்த்தா அவரும் ஏதும் சொல்லாம இருக்காரு… பார்க்கவே கன்றாவியா இருந்தது”


“சுபா ஏன் உனக்கு இவ்ளோ கோவம்? இங்க பாரு நீ படிச்ச பொண்ணு தான? உனக்குத் தெரியாததா? தனியா இருக்குற ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லனா பக்கத்துல இருக்குறவங்க பார்த்துக்கறது வழக்கம் தான? அதுல என்ன ஆண் பெண் வித்தியாசம் வேண்டி இருக்குது? அது மட்டும் இல்ல நீ ஏன் அந்த கண்ணோட்டத்துல பார்க்குறனு எனக்குப் புரியல! உடம்புக்கு முடியாதவர்களை கவனிக்கும் அந்த பெண்ணை செவிலியா பாரு”னு சொல்லிட்டு செல்ல சுபாக்கு ஒரு பக்கம் அதுவும் சரி எனத் தோன்றியது. 


அதே நேரத்தில் முழுதாகவும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகுதான் ரவிக்கு முழுதும் குணமானது. அது வரைக்கும் மலர் வீட்டு சாப்பாடுதான் அவனுக்கு. இப்போது ஒரு வாரத்திற்கு பிறகு சுபா வீட்டுக்கு வந்தான்.


மீனாட்சி- உட்காரு ரவி சாப்பாடு எடுத்து வைக்கிறேன்


ரவி- பரவாயில்லை. இனி நான் வீட்டுலயே சாப்பிட்டுக்கிறேன்.


சுபா- ஏன் சமைக்க கத்துக்கிட்டீங்களா?


ரவி- அது இல்ல மலர் வீட்டுல எனக்கும் சேர்த்து சமைக்குறதா சொல்லிட்டாங்க


மீனாக்ஷி- அவங்க வீட்டுலயே சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறாங்க


ரவி- என் சம்பளத்துல இருந்து என் சாப்பாட்டுக்குனு அவங்களுக்கு தனியா பணம் தருவதா இருக்கேன்


விசாலாட்சி- ஏன்ப்பா இங்க சாப்பிட பிடிக்கலையா?


ரவி- இல்ல டெய்லி அவ்ளோ தூரம் வந்து போக வேண்டி இருக்குது. அதனால தான்


மீனக்ஷி- சரிப்பா உன் இஷ்டம்


சுபா கண்களில் அனல் பறப்பது அவனுக்கு நன்றாக தெரிந்தது.


மீனாட்சி- அடலீஸ்ட் இன்னைக்காவது எங்க வீட்டுல சாப்பிடுப்பா


ரவி- சரிம்மா வைங்க


மீனாட்சி சாப்பாடு வைத்துக் கொண்டு இருக்க போன் மணி அடித்தது சுபா தான். அட்டென்ட் செய்தாள்.


“ஹலோ” (உயிரற்ற குரலில் அவள் பேச, அடுத்த முனையில் மதனின் குரல்)


“ஹலோ ஸ்வீட்டு நான் மதன்”


மதன் குரல் சுபாக்கு ஆச்சர்யத்தை தந்தது


“அத்தான் நீங்க என்ன இந்த நேரத்துல? இந்த நேரத்திற்கு நீங்க எந்திரிச்சுருக்கவே மாட்டீங்களே?”


சுபா அத்தான்னு சொன்னதும் மீனாட்சி உணவு பரிமாறுவதை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தார். சுபா போன் வாயை பொத்து கொண்டு


“மதன் அத்தான் சித்தி”

னு சொல்லிட்டு திரும்பவும் போனில் பேசினாள்.


"சுபா நான் இப்போ எங்க என்ன பண்ணிட்டு இருக்கேன் சொல்லு?”


“வேற எங்க இருப்பிங்க?உங்க அபார்ட்மெண்ட்ல தான் இருப்பிங்க”


“இல்ல சுபா இப்போ நான் சென்னையில் இருக்கேன்”


“சென்னையா?”

சுபா வாயில் இருந்து சென்னை என்ற வார்த்தை வந்ததும் வீட்டில் இருந்த அனைவரும் சுபாவின் பக்கத்தில் வந்துவிட்டனர்.


மீனாட்சியும் உணவை அவசரமாக பரிமாறி விட்டு வந்தாள். ரவி நடப்பதை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தான


“என்ன சுபா?”

னு அனைவரும் கேட்க


“அத்தான் சென்னைல இருக்குறதா சொன்னாரு ” னு சொல்லிட்டு போனை ஸ்பீக்கரில போட்டாள்.


"அத்தான் என்ன சொல்ட்ரிங்க சென்னைலயா இருக்கீங்க?”


“ஆமா உங்க எல்லாருக்கும் சரப்ரைஸ் கொடுக்கத்தான் நான் கிளம்பி வருவதை சொல்லவே இல்ல. இப்போ சென்னைல இருந்து கிளம்பிட்டேன். இன்னும் 3 மணி நேரத்துல நம்ம வீட்டில் இருப்பேன்.”


“என்ன அத்தான் நீங்க என் கிட்ட கூட சொல்லல ”


“நீங்க தேவை இல்லாம அலைய வேண்டாம்னு தான் நானே வந்துட்டு இருக்கேன். நீ ஏர்போர்ட்க்கு கார் எடுத்துட்டு வா ஸ்வீட்டி”


“மாமாவை வர சொல்லவா?”


“நான் உன்னை வர சொன்னேன். நீயே வா. அவங்க வந்தா செம போர். ஊரு புராணத்தைப்பாடி சாகடிப்பாங்க”


“ஐயோ அத்தான் கொஞ்சம் பார்த்துப் பேசுங்க. நான் போனை ஸ்பீக்கர்ல போட்டுருக்கேன்”


"அடிப்பாவி முன்னாடியே சொல்லலாம்ல யாரு பக்கத்துல இருக்காங்க?”


“மொத்த குடும்பமும் இருக்கோம்டா” னு சீதாலெட்சுமியின் குரல் வந்ததும


“அம்மா நான் சும்மா தான் சொல்லிட்டு இருந்தேன்”


“சொல்லுவடா சொல்லுவ”


“சுபா டார்லிங் நீ கார் எடுத்துட்டு ஏர்போர்ட்க்கு வா . நான் வந்துட்டு அப்புறம் பேசறேன்” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டான். 


ஷண்முகம்- பார்த்தியா எத்தனை பேரு இருக்கோம் ஆனால் நீ தான் வரணுமாம்


சுபா- தெரிஞ்சதுதான? இவரு ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் இதே கஷ்டம் தான் எனக்கு. சரி நான் கொஞ்ச நேரத்தில் கார் எடுத்துட்டு கிளம்புறேன்.


ஷண்முகம்- சரி கூட யாரயாவது கூட்டிட்டு போ


சுபா- எதுக்கு பெரியப்பா. நான் பார்த்துக்குறேன் 


ஷண்முகம்- இல்ல சுபா இப்போ பாதையெல்லாம் கொஞ்சம் மாறியிருக்கு. உனக்கு போக வழி தெரியனும்ல அதுக்குத்தான் சொல்றேன். நம்ம ரவிவை கூட்டிட்டு போயேன்


சுபா- எதுக்கும் அவருகிட்ட கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டு ரவிவைப் பார்க்க , அவனது முகம் இருண்டு இருந்தது. அதுக்குக் காரணம் மதன் சுபாவிடம் ஸ்வீட்டி டார்லிங் என்று பேசியது தான். பொதுவாக கிராமத்தில் இந்த மாதிரி பேசுவது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. ஆனால் வீட்டில் இருக்கும் யாரும் இதை பெரிதாக எண்ணவில்லை.


அப்படி என்றால் எப்போதுமே மதன் இப்படித்தான் கூப்பிடுவான் போல என்று எண்ணினான். அவன் சுபாவைப் பார்த்த போது அவள் அவனை கேள்வியாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.


ரவி- எனக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல தலை சுத்துற மாதிரி இருக்குது


ஷண்முகம்- அட நீயே இப்போதான் காயிச்சல் சரியாகி வந்துருக்க. அதுக்குள்ள வெளி ஊருக்கு அனுப்புறது தப்பு தான். நான் தான் மறந்துவிட்டேன். சுபா நீ நம்ம சுகனை அழைத்துப்போ


சுகன்- அப்பா எனக்கு…


ஷண்முகம்- எதுவும் பேசாத போயிட்டு வா


சுகன்- அட எனக்கு ஏதும் வேலை இல்ல நானே போகிறேன்னு சொல்ல வந்தேன் 


க்ஷண்முகம்- அப்படினா சரி 

என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட சுகனும் சுபாவும் சாப்பிட அமர்ந்தார்கள்


சுகன்- சுபா மதன் எப்படி இருப்பானு நினைக்குற?


சுபா- போன முறை பார்த்ததை விட இப்போ கொஞ்சம் உடம்பு போட்டுடுச்சுன்னு சொன்னாரு . ஒரு நிமிஷம் நான் போய் மிளகாய்ப் பொடி எடுத்துட்டு வந்துடுறேன்.


சுகன்- ரவி நீங்க மதனை பார்த்தது இல்லைல. எல்லார்கிட்டயும் நல்லா பழகுவான். 


ரவி- ஓ... அவரு இனி இங்க தான் இருப்பாரா?


சுகன்- இல்ல. விடுமுறைக்கு வருகிறான். அவன் வந்தாலே வீடு கலகலப்பா இருக்கும். 


ரவி- அப்படியா?.. அவருக்கு ஏஜ் என்ன இருக்கும்?


சுகன்- நம்ம ஏஜ் தான்


ரவி- அவரு எல்லார் கிடக்கும் இப்படித்தான் பேசுவாரா? டார்லிங் ஸ்வீட்டி னு…?


சுகன் ரவிவை ஒரு நிமிடம் திகைப்பாக பார்த்தான். பிறகு சிரித்துக்கொண்டே 


சுகன்- அவன் சின்ன வயசுல இருந்தே சுபாவ அப்படித்தான் கூப்பிடுவான். எங்களுக்கு பழகிடுச்சு. ஆனால் எல்லாரும் சுபா ஆகிட முடியாதே .... அதனால சுபாவைத் தவிர மற்ற பொண்ணுங்க கிட்ட அப்படி பேசமாட்டான்.


அதற்குள் சுபா வந்துவிட ரவி எழுந்து கை கழுவ சென்றான். அன்று முழுவதும் ரவிக்கு வேலை ஓடவே இல்லை. எப்படி ஒரு பெண்ணை ஒருவர் இப்படி கூப்பிடலாம்? அந்த பெண்ணும் எதுவும் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம்? பழகிவிட்டது? இல்லை… ஒரு வேலை ஒருவர் மீது ஒருவருக்கு விருப்பம் இருக்கிறதா? என்று எண்ணியவன்...


‘ச்ச… நாம எதுக்கு இதை யோசிக்கணும்? நமக்கு இதுல என்ன உரிமை இருக்குது’ னு சமாதானம் சொல்லிக்கொண்டாலும் அவனது மனதின் ஓரத்தில் ஏதோ இனம் புரியாத வேதனையும் வலியும் குடிக்கொண்டது.


அன்று மலரின் பாட்டி இறந்துவிட்டார் என செய்தி வந்ததால் அவள் குடும்பத்துடன் ஊருக்குச் சென்றுவிட்டாள். அதனால் ரவி மீண்டும் சில நாட்கள் சுபா வீட்டில் சாப்பிட நேர்ந்தது. அவன் இரவு உணவுக்காக வந்த போது அவனது கண்கள் வழக்கம் போல சுபாவைத் தேடவில்லை. இம்முறை மதனைத் தேடியது.


முருகன்- வாங்க தம்பி உட்காருங்க. என்ன வேலைலாம் எப்படி போகுது


ரவி- நல்லா போகுதுங்க சார்


முருகன்- என்னப்பா நீ சார் அது இது னு சொல்லிக்கிட்டு? அப்பானு கூப்பிடு


ரவி- சரிப்பா


முருகன்- அப்புறம் வேலை பிடிச்சிருக்கா? என்னடா இவன் பேசினத்தையே பேசுறானேனு பார்க்கரியா? என்ன செய்ய சமையல் இன்னும் தயாராகவில்லை. இந்த மதன் செஞ்ச வேலையால் இன்னைக்கு சமையல் லேட்டா செய்ய வேண்டியதா இருக்குது. நீ இன்னும் என் பையன பார்க்கவில்லையே.. இரு. மதன்… மதன்….


மாடியில் இருந்து“வரேன் ” னு சத்தம் மட்டும் வந்தது. சற்று நேரத்தில் மதன் கீழிறங்கி வந்தான். நல்ல வாட்ட சாட்டமாக அழகாக இருந்தான். சுபா சுகனிடம் பேசியதை வைத்துப் பார்த்து மதன் கொஞ்சம் குண்டாக இருப்பான் என எண்ணியவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது.


முருகன்- மதன் இது தான் ரவி. ரவி இதுதான் என் பையன். நீங்க பேசிட்டு இருங்க. இப்போ வந்துடுறேன்னு உள்ளே சென்றார்


மதன்- உங்களைப் பற்றி அப்பா நிறைய சொல்லிருக்காரு ரவி


ரவி- உங்களைப் பற்றியும் சொல்லிருக்காங்கனு சொல்லிட்டு இருக்கும் போதே அத்தான் னு சினுங்கிட்டே வந்த சுபாவைப் பார்த்து ரவி சற்று திகைத்துவிட்டான். சுபாவும் ரவிவை எதிர் பார்க்கவில்லை. அதனால் அவளும் திகைத்துவிட்டாள். 


காரணம் அவளது தலை பேய் போல இருந்தது. மதன் அவளைப் பார்த்து சிரிக்க


சுபா- என்ன நீங்க இப்படி செஞ்சுட்டீங்க?


சுந்தரம்- என்ன கண்ணு இது? இப்படி வந்துருக்க


சுபா- பாருங்க சித்தப்பா அத்தான் செஞ்ச வேலைய? தல வலிக்குதுன்னு படுத்து இருந்தேன். எழுந்து பார்த்தால் இந்த மாதிரி இருக்குது. இந்த வீட்டுல இந்த வேலையெல்லாம் செய்றது அத்தான் தான் என்று சிணுங்க


சுந்தரம்- என்னப்பா இது? 


மதன்- மாமா சும்மா மாமா இவ்ளோ நாள் இவள் கூட விளையாடாம செம போரா இருந்துச்சு 


சுந்தரம்- அதுக்கு இப்படியா?


சுபா- போங்க நான் உங்க கூட பேசமாட்டேன்னு சென்றவளது கையை பிடித்து இழுத்து அவளிடம் நெருங்கி நின்ற மதனைப் பார்த்த போது ரவிக்கு உள்ளுக்குள் அனலாக இருந்தது


மதன்- சாரி ஸ்வீட்டி சும்மா விளையாட்டுக்கு அப்படி செய்தேன்


.சுபா- இப்போ எப்படி நான் தலை சீவுறது


மதன்- வா செல்லம் நான் எதுக்கு இருக்கேன். நானே சீவி விடுறேன்


சுபா- யாரு நீங்க அழகுதான்


மதன்- முடியாதுனு நினைக்குரியா? பாருன்னு சொல்லி அவளை தரையில் அமர வைத்து விட்டு சீப்பை எடுத்து கொண்டு அவளது தலையை பொறுமையாக சீவினான்


சுபா- இப்படி சீவினால் விடிஞ்சுடும்


மதன்- ஷு… பேசாம இரு


சுபா- அத்தான் எனக்கு தூக்கம் வருது.. இவ்ளோ மெதுவா சீவினா சுகமா இருக்குது தூக்கம் வருது


மதன்- பேசாம இரு செல்லம்னு பொறுமையாக அவன் அவளுக்கு தலையை சீவி விட்டு அழகாக பின்னி விட ரவியினால் அதை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.


அவன் சுபாவைப் பார்க்க சுபாவும் தன்னை தான் பார்ப்பாள் என எண்ணியவனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அவள் அவனை கண்டு கொள்ளவே இல்லை. ஒரு வழியாக மதன் தலையை அழகாக பின்னிவிட்டான்


மதன்- இப்போ எப்படி இருக்குது


சுபா- அழகா தான் இருக்குது. சரி நன் போய் சாப்பாடு ரெடியானு பார்த்துட்டு வந்துடுறேன்னு சுபா உள்ளே செல்ல


மதன்- இவளிடம் வம்பு செய்யவில்லை என்றால் எனக்கு தூக்கமே வராது ரவி. எத்தனை நாலா ரொம்ப மிஸ் பண்ணினேன். இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்குது. 


ரவிவும் வேண்டா வெறுப்பாக புன்னகைத்து வைத்தான். ஒரு வழியாக உணவை முடித்துக்கொண்டு இரவு வீட்டுக்கு கிளம்பும் போது ரவி யிடம் ஷண்முகம் அடுத்தநாள் குலதெய்வம் கோவிலுக்கு போகிறோம் நீயும் உடன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். ரவி்க்கு மதனை பார்க்கும் போது எரிச்சல் வந்தாலும் சுபாவின் பார்வை ஒன்றே போதும் என எண்ணி அவர்களுடன் அடுத்த நாள் காலையில் குலதெய்வம் கோவிலுக்குச் சென்றான்.


அவர்களின் குல தெய்வம் கோவில் வேறு ஒரு ஊரில் இருந்தது. அங்கு சென்று பொங்கல் வைப்பதற்காக கிளம்பினார்கள். அங்கு செல்வதற்கு வேன் ஏற்பாடு செய்து இருந்தனர். வேனில் தம்பதிகளாக அமர்ந்து இருந்தனர். சுகனும் ரவியும் சேர்ந்து அமரும் போது ‘மதனும் சுபாவும் சேர்ந்து அமரக் கூடாது’ என எண்ணினான். 


ஆனால் அதிலும் அவனுக்கு ஏமாற்றம் தான். வேனில் ஏறிய சுபாவைப் பார்த்த ரவி மெய் மறந்து போனான். அன்று சுபா புடவை அணிந்து இருந்தாள். அவளது நிறத்திற்கு மெரூன் நிறப் புடவை மிகவும் எடுப்பாக இருந்தது. அவள் ஒரு இருக்கையில் அமர அதே இருக்கைக்குப் பக்கத்தில் மதன் அமர்ந்தான்.


கோவிலுக்கு போகும் வரை நன்றாக சிரித்துப் பேசிக் கொண்டு சென்றனர். கோவிலுக்கு சென்றதும் பெண்கள் பொங்கல் வைக்கும் ஏற்பாட்டை பார்க்கத் தொடங்க ஆண்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தனர்.


மதன் , சுகன், சுபா, ரவி நால்வரும் மரத்தடியில் போடப்பட்டு இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார்கள். 


மதன்- சுகன் இங்க ஓடை இருக்குமே எங்கன்னு தெரியுமா?


சுகன்- தெரியும் ஏன்?


மதன்- குளிக்கலாம்னு தான். ஓடையில் குளிச்சு ரொம்ப நாள் ஆகுதே 


சுகன்- சரி வா போவோம். சுபா நீ வரியா?


மதன்-அவ எதுக்கு? ஆண்கள் குளிக்குற இடத்துல இவளுக்கு என்ன வேலை?


சுபா- ஆஹா… நீங்க கூப்பிட்டாலும் நான் வரல


மதன்- மிக்க நன்றி. ரவி நீங்க?


ரவி- இல்ல வரல


சுகன்- சரி அப்போ நாங்க போயிட்டு வந்துடுறோம்

என்று சொல்லிட்டு இருவரும் நடந்து செல்ல ,


இப்போது ரவிவும் சுபாவும் தனியாக இருந்தனர்


"இந்த புடவை உனக்கு நல்லா இருக்குது"


"தான்க்ஸ்"


" மதன் எப்போதுமே இப்படித்தானா?"


"ஆமா எப்போதுமே செம பிரண்ட்லி. அத்தான் இல்லனா செம போரா இருக்கும்"


"அப்படினா நான் எப்படினு சொல்லவே இல்லயே"


" என்னது?"


" ஒன்னும் இல்ல. மதன் எப்போ கிளம்புவாரு?"


"இந்த முறை கல்யாணத்த முடிச்சுட்டு தான் போவார்"

சொல்லும் போதே சுபா முகத்தில் ஒரு புன்னகை தெரிய ரவிக்கு தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் சமாளித்து கொண்டு


" பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாச்சா?"


"சின்ன வயசுலயே முடிவானது தான்"


"சின்ன வயசுலயா?... ஆனால் அப்போ அறியாத வயசு அப்போ இருக்குற நிலைமை வேற"


"ரவி இப்போ நாம எதுக்கு இங்க வந்துருக்கோம் தெரியுமா? இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும்னு வேண்டிக்கத்தான். சோ ப்ளீஸ் எந்த தடங்கலும் சொல்லாதிங்க"

னு கோவமாகவும் கண்டிப்பாகவும் சொன்னாள். 


ரவிக்கு மனதில் முள் தைத்தது போல இருந்தது. சுபாவைப்பார்த்ததும் ரவிவின் மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. வார்த்தைகளால் வர்ணிக்கப்பட இயலாத அந்த சுகத்தை அவன் இரசித்துக்கொண்டிருக்கும் போதுதான் சுபா தனது முதலாளி வீட்டுப்பெண் என்பதே தெரிய வந்தது. தகுதிக்கு மீறிய ஆசை இருக்கக்கூடாது என்று அவன் எண்ணி தனது விருப்பத்தை மறைத்து வைத்திருந்த நேரம் தான் சுபாவின் மனதிலும் தான் இருக்கிறோம் என்பதையே உணரத்தொடங்கினான். ஆனால் இது நடைமுறைக்கு சரிவருமா என்று அவனுக்குத் தெரியவில்லை. காரணம் , அந்தஸ்து ஜாதி குடும்ப கௌரவம் என்று பல தடங்கல்கள். இதற்கு இடையில் சண்முகத்தின் மகன் காதல் திருமணம் செய்ததால் இன்று வரை அவனை வீட்டிற்குள் சேர்க்கவில்லை, அவனிடம் பேச்சு வார்த்தையும் இல்லை என்று ரவி அறிய நேர்ந்த போது தான் ரவி ஒரு முடிவெடுத்தான். வீடே போற்றும் சுபாவை தனது காதலின் விளைவாக யாரும் வெறுத்துவிடக்கூடாது என்று முடிவெடுத்தான். அதனாலேயே அவளிடமிருந்து விலக முயன்றான். ஆனால் மதன் வந்த பிறகுதான் அவனுக்குள் பயம் படரத்தொடங்கியது.


எக்காரணம் கொண்டும் தன்னால் சுபாவை இன்னொருவனுக்கு விட்டுக்கொடுக்க இயலாது என்பதை அறிந்துகொண்டான். இந்த சமயத்தில்தான் சுபா முதன் முறையாக ரவியின் மனம் புண்படும்படி பேசியிருக்கிறாள்.


“சாரி ரவி நான் அப்படி பேசியிருக்கக்கூடாது ஆனால் கல்யாண சமயத்துல இப்படி ஏதாவது சொன்னா கோவம் வரும் தானே?”


“கல்யாணம் எப்போ?”


“அத கேட்கத்தான் வந்துருக்கோம்”


“ஓ…” ரவிக்கு அடுத்து என்ன சொல்வது என புரியவில்லை.


ரவி- அப்படினா உன் கல்யாணம் எப்போனு இன்னைக்கு தெரிந்துவிடுமா ?னு மறைமுகமாக கேட்டான்.


சுபா- - [வெட்க புன்னகையோடு] ம்ம்… இன்னைக்கு நிச்சயம் ஆகிவிடும்


அவனுக்கு முழுவதும் புரிந்து விட்டது சுபாக்கும் மதனுக்கும் திருமணம் நடக்கப் போகிறது. அப்படி இருக்கும் போது எதற்காக சுபா தன்னிடம் அப்படி பேசினாள் என்று புரியவில்லை. ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டாளே.... என்று அவள் மீது கோவம் வந்தது. அதைவிட சுபா தனக்கில்லை என்று தெரிந்த போது கண்களில் கண்ணீர் நிரம்பியது. 


அங்கிருந்து நகர்ந்தான். சுபா தடுக்கவில்லை. பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். பிறகு மதிய உணவையும் அங்கேயே சமைத்து அனைவருக்கும் பறி மாறினார்கள். முதலில் ஆண்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ரவிக்கு சாப்பாடு உள்ளே செல்லவே இல்லை. அந்த நேரத்தில் ஒரு கார் அங்கு வந்தது.


அதில் இருந்து ஒரு தம்பதியினர் இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து ஒரு பெண்ணும் இறங்கினாள்.


ஷண்முகம் அவர்களை வரவேற்று அன்பாக பேசினார். ரவி இவர்கள் யார் என பார்த்துக் கொண்டே


ரவி- சுகன் இவங்க யாரு?


சுகன்- நம்ம வீட்டுக்கு சம்பந்தியாக போறவங்க. அந்த பொண்ணத்தான மதன் கல்யாணம் பண்ணிக்க போறான்

னு சொன்னதும்


ரவி- அப்போ சுபா?


சுகன்- சுபாவா? யாரு சொன்னது சுபாக்கும் மதனுக்கும் கல்யாணம்னு ? மதன் எப்போதுமே சுபாவை குழந்தை மாதிரி பார்த்துட்டு இருக்கான். . அவளை எப்படி அவனால கல்யாணம் பண்ணிக்க முடியும்? இந்த பொண்ண சின்ன வயசுலயே மதனுக்குன்னு முடிவு செஞ்சு வச்சுட்டாங்க. இன்னைக்கு இங்க வெற்றிலை பாக்கு மாற்றுவார்கள்

என்று சொல்லிட்டு அவன் சாப்பிட ரவி சுபாவைப் பார்த்தான்.


அவள் அவனைப் பார்த்து கேலியாக புன்னகை செய்ய அப்போதுதான் ரவிவுக்கு உயிரே வந்தது. சுபாக்கு கல்யாணம் இல்லை.


நன்றாக சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்ற போது சுபா தான் அங்கு நின்று கொண்டு இருந்தாள். கை கழுவிக் கொண்டே


" எதுக்கு பொய் சொன்ன?"


" என்ன பொய்?"


"மதனுக்கும் உனக்கும் கல்யாணம்னு"


"நான் அப்படி சொல்லலையே மதன் கல்யாணம் இன்னைக்கு நிச்சயம் செய்வாங்க. அதற்குப்பிறகு என்னோட திருமண நிச்சயமும் இன்னைக்கு நடக்கும்"


திரும்பவும் அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது.


"என்ன சொல்ற?"


"எனக்கும் இன்னைக்குத்தான் நிச்சயம் ஆகப்போகுது. அதுவும் என் மாமா பையனுடன்."



"யாரு அது?"


"சொல்றேன். முதலில் கையை துடைங்க"


"கெர்ச்சிப் கொண்டு வரல. சரி நீ சொல்லு யாரு அந்த பையன்"


"அத தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க?"


"அப்படினா உனக்கு என் மேல…"


"என்னது?"


"நான் நேராவே கேட்கிறேன். நீ என்னை விரும்பவில்லையா?"


"நான் எப்போதாவது அப்படி சொன்னேனா?"


ரவி திகைத்து நிற்க. 


சுகன்- நிச்சயத்துக்கு நேரம் ஆச்சு சுபா உன் நிச்சயம் தான இப்படி நீயே லேட் பண்ணலாமா சீக்கிரம் வா. நீங்களும் தான் ரவி னு சொல்லிட்டு செல்ல 


ரவிக்கு உள்ளுக்குள் பயங்கர வலி ஏற்பட்டது. அதை உணர்த்த சுபா, 


"யாருனு சொல்லவா? அவரு பெயர்…"


"வேண்டாம் எனக்கு எதையும் தெரிஞ்சுக்க வேண்டாம்"


"ஆனால் நான் சொல்லுவேன்"


அவன் எதையும் காது கொடுத்து கேட்காமல் அங்கிருந்து நகர முற்பட அவனது கையைப் பிடித்து நிறுத்தினாள். 


" என்ன செய்ற? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? அதுவும் இல்லாம இன்னைக்கு உன் நிச்சயம்"


" சரி. நான் பெயரை சொல்லிடுறேன் அப்புறம் நீங்க போங்க "


" விடு நான் போகணும்"


" அவரு பெயர் ரவி"


"என்ன சொன்ன?"

என்று அதிர்ச்சியில் திகைத்து நிற்க


"அவரு பெயர் ரவி"


"எனக்குப் புரியல"


மதன்- நான் சொல்றேன்


ரவி- நீங்களா?


ஷண்முகம்- ஆமாம் தம்பி இன்னைக்கு நிச்சயம் வேற யாருக்கும் இல்ல உனக்கும் சுபாக்கும் தான். எங்க வீட்டுப் பொண்ணோட விருப்பம் என்ன னு எங்களுக்கு தெரியாதா? அவளோட கண்ணசைவ பார்த்தே அவ விருப்பத்தை கண்டு பிடிச்சுடுவோம்.


மீனாட்சி- இங்க பாருப்பா உன்னை மாதிரி ஒரு தங்கமான பையன் கிடைக்க எங்க வீட்டுப் பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.


விசாலாட்சி- இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும்னு உன்கிட்ட சொல்லவே இல்லை



சுகன்- ஆனால் நீங்க ஏதேதோ கற்பனை செஞ்சுட்டீங்க ரவி.


மதன்- சுபா என்னைக்குமே உங்களுக்குத்தான் சொந்தம்


ஷண்முகம்- வசதி என்ன வசதி உன்ன மாதிரி கடுமையா உழைத்தால் ஒரே வருஷத்துல வசதி வந்துடும் ஆனால் உன்ன மாதிரி நல்ல பையன் கிடைப்பானா?


முருகன்- நாங்க எல்லாருமே நீ வந்த கொஞ்ச நாட்களிலேயே முடிவு பண்ணிட்டோம் சுபாக்கு நீ தான் பொருத்தமான பையன்னு. சுபாக்கும் அதே ஆசை இருந்ததால தான் இப்போ நிச்சயம்


மதன்-அது மட்டும் இல்ல ரவி உங்க மனசுலயும் சுபா இருக்கானு எங்களுக்கு நல்லாவே தெரியும்


ரவி வாயடைத்துப் போய் நிற்க


சுகன்- சரி இனி நமக்கு இங்க வேலை இல்ல சீக்கிரம் இருவரும் கோவிலுக்கு வாங்க நல்ல நேரத்துல நிச்சயத்தை செஞ்சுடலாம்னு சொல்லிட்டு அவர்கள் நகர


"ஏன் என்னிடம் சொல்லல" என்று ரவி சுபாவிடம் வினவினான்.


"அந்த மலர வச்சு என்னை எவ்வளவு கடுப்பு ஏத்துனீங்க அதுக்குத்தான் இது"


"அடிப்பாவி"


"ஹாஹா.... சரி நான் கைய துடைக்க துண்டை எடுத்துட்டு வந்துடுறேன்"


"நீதான் பொண்டாட்டி னு ஆகிடுச்சு அப்புறம் எதுக்கு அதுலாம்" என்று கூறிவிட்டு சுபாவின் புடவை முந்தானையில் கையை துடைத்து விட்டு அவளது கையோடு தனது கையையும் சேர்த்துக் கொண்டு இருவரும் கோவிலை நோக்கி நடந்தனர்...



Rate this content
Log in

Similar tamil story from Drama