Anu Mva

Drama Romance

4.3  

Anu Mva

Drama Romance

சிவா vs ஸ்ருதி

சிவா vs ஸ்ருதி

5 mins
1.5K


"என்ன? என்ன சொன்ன இப்போ?"

என்று நம்ப முடியாத குரலில் ஸ்ருதி கேட்க, 


"நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சொன்னேன்"


என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினான் சிவா.


"விளையாட்டுக்குத் தான சிவா சொல்ற?"


"இல்லை... உண்மையாகத் தான் சொல்றேன். நாம பிரிந்துவிடலாம்"


"ஏன்? எதுக்காக திடீர்னு இப்படி ஒரு முடிவு? கடந்த ஆறு வருஷத்தில் நீ இப்படி பேசியதே இல்லையே... இப்போ மட்டும் எதற்காக பிரேக்கப் பற்றி பேசுற? அப்படி என்ன நடந்தது?"


"சரி வராது ஸ்ருதி..."


"என்ன சரி வராது?"


"..."


"சொல்லு சிவா என்ன சரி வராது?"

என்று ஸ்ருதி கண்களில் தேங்கிய கண்ணீருடன் வினவ, அதே நேரத்தில் அவள் செல்லவிருக்கும் பிலைட் கிளம்பும் நேரமும் அறிவிக்கப்பட்டது.


ஸ்ருதி சிவா... கடந்த ஆறு வருட காலமாக காதலிக்கின்றனர். ஸ்ருதியின் குடும்பம் சற்றே வசதியான மேல்தர வர்கத்தினை சேர்ந்தவர்கள். சிவாவின் குடும்பம் சராசரியான மிட்டில் கிளாஸ் குடும்பம். 


இருவருக்குள்ளும் அதிக கருத்து வேறுபாடுகள் இதுவரை வந்ததில்லை. கடந்த மாதம் ஸ்ருதிக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. அடுத்த மூன்று வருட காலம் அவள் ஆஸ்திரேலியாவில் தான் வேலை செய்யப் போகிறாள்.


இந்த விஷயத்தை சிவாவிடம் ஸ்ருதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட போதுதான் பிரச்சனையே ஆரம்பமானது. 


அடுத்து வந்த நாட்களில் சிவா ஸ்ருதியுடன் அதிகம் பேசவில்லை. அவளை தவிர்த்துக் கொண்டே இருந்தான். இதற்கான காரணம் புரியாததால் ஸ்ருதியே சிவாவிடம் இதைப் பற்றி கேட்டாள். 


"என்னாச்சு உனக்கு? ஏன் என் கூட சரியாவே பேச மாட்டேன்கிறாய் ?"


"...."


" நான் ஏதாவது தப்பு செய்துவிட்டேனா? இல்லை உனக்கு ஏதாவது பிரச்சனையா? "


".... "


"சொல்லித்தொலை... சொன்னால் தானே தெரியும் "


"ஸ்ருதி நீ ஆஸ்திரேலியா போகாதே ஸ்ருதி... பிலீஸ்..."


" என்ன? ஏன் போகக்கூடாது?"


"வேண்டாமடி பிலீஸ்..."


"ஹேய்.. நான் வேலைக்கு அப்ளை பண்ணும்போது நீயும் தானே இருந்த? நான் இன்டெர்வியூக்கு தயாராக நீயும் ஹெல்ப் பண்ணினியே... இப்போ என்ன திடீர்னு வேண்டாம்னு சொல்ற?"


"அது... உனக்கு வேலை கிடைக்காதுன்னு நினைத்தேன்... "


"வாட்?"


" ஸ்ருதி நீ வேலைக்குப்போய் தான் நாம நம்ம எதிர்காலத்தை பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லை. என்னால உன்னை நல்லாவே பார்த்துக்க முடியும் "


"என்ன விளையாடுறியா நீ வாங்குற இருபதாயிரம் சம்பளத்தில் எத்தனை விஷயத்தை தான் கவனிக்க முடியும்? உன்னோட தங்கச்சி கல்யாணம் இருக்கு. அதையும் நீ தான் செய்தாகணும். அப்படியிருக்கும்போது எப்படி உன்னோட சம்பளம் மட்டும் நம்ம வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கும் ? அது மட்டும் இல்லாம எனக்கும் வேலைக்கு போகணும்னு ஆசையா இருக்கு. "


" உனக்கு வேலைக்குப் போகணும்னு ஆசையா இருந்தா இங்கேயே ஏதாவது ஒரு கம்பெனியில் வேலை செய்யலாமே? எதுக்காக ஆஸ்திரேலியா வரைக்கும் போகணும்? ப்ளீஸ் ஸ்ருதி என்னால உன்னை பிரிந்து இருக்க முடியாது. என் கூடவே இரு ஸ்ருதி "


"சிவா சுயநலமா யோசிக்காதே... நமக்கும் நம் எதிர்காலத்திற்காகவும் தான் இந்த தற்காலிகமான பிரிவு. மூணு வருஷம் காத்திருக்க மாட்டியா? நான் வேலைக்கு போகத்தான் போகிறேன் சிவா "


என்று உறுதியாக கூறிவிட்டுச் செல்ல சிவாவின் மனதிலோ பல குழப்பங்கள். 


'நான் சுயநலவாதியா? என்னை சுயநலமாய் யோசிக்க வேண்டாம் என்று சொல்கிறாளே... என்னைப் போய் இப்படி ஒரு வார்த்தை சொல்ல எப்படி அவளுக்கு மனசு வந்தது ?'


என்று வேதனையுடன் இதற்கு முன்னால் நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்தான்.


சிவாவிற்கு பலமுறை வெளிநாடுகளில் வேலை செய்யும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவன் அவற்றையெல்லாம் நிராகரித்து விட்டான். ஸ்ருதியுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவன் அவனது வாழ்க்கையில் கிடைத்த அரிய வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிட்டான். அவனைப்போய் சுயநலவாதி என்று கூறியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 


பல நாட்கள் தீவிரமாக யோசித்து அதற்குப் பின்னர் இன்று ஸ்ருதி ஆஸ்திரேலியா செல்ல இருக்கும் பொழுது ஏர்போர்ட்க்கு வந்து ஸ்ருதியிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தான் சிவா. 


" நல்லவேளை இப்பவாவது

வந்தியே. என் மேல இருக்கிற கோவத்தில் என்னை பார்க்க வராமலேயே இருந்து விடுவியோனு நினைத்தேன். இப்பவாவது என்னை பார்க்கணும்னு தோணுச்சே"


என்று ஸ்ருதி புன்சிரிப்புடன் சிவாவை நோக்க, அவனோ,


" நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்" என்றான்.


"என்ன? என்ன சொன்ன இப்போ?"

என்று நம்ப முடியாத குரலில் ஸ்ருதி கேட்க, 


"நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சொன்னேன்"


என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினான் சிவா.


"விளையாட்டுக்குத் தான சிவா சொல்ற?"


"இல்லை... உண்மையாகத் தான் சொல்றேன். நாம பிரிந்துவிடலாம்"


"ஏன்? எதுக்காக திடீர்னு இப்படி ஒரு முடிவு? கடந்த ஆறு வருஷத்தில் நீ இப்படி பேசியதே இல்லையே... இப்போ மட்டும் எதற்காக பிரேக்கப் பற்றி பேசுற? அப்படி என்ன நடந்தது?"


"சரி வராது ஸ்ருதி..."


"என்ன சரி வராது?"


"..."


"சொல்லு சிவா என்ன சரி வராது?"

என்று ஸ்ருதி கண்களில் தேங்கிய கண்ணீருடன் வினவ, அதே நேரத்தில் அவள் செல்லவிருக்கும் பிலைட் கிளம்பும் நேரமும் அறிவிக்கப்பட்டது.


"பிலைட்க்கு நேரமாகுது சிவா... தயவுசெய்து இந்த நேரத்தில் விளையாடாதே "


"ஸ்ருதி நான் உண்மையைத்தான் சொல்றேன். நாம நிஜமாவே பிரேக்கப் பண்ணிக்கலாம். "


"ஓஹோ நீ சொன்னதை மீறி நான் ஆஸ்திரேலியா போகிறேன் என்ற காரணத்திற்காகத்தான் பிரேக்கப் செய்துகொள்ளலாம்னு சொல்றியா?"


" அப்படி இல்லை.."


" வேறு எப்படி?"


"..."


" சரி உனக்கு என்ன இப்போ நான் ஆஸ்திரேலியா போகக்கூடாது அவ்வளவு தானே ? நான் போகவில்லை. வா வீட்டுக்குப் போகலாம் "


என்று ஸ்ருதி நடக்க முற்பட அவளது கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் சிவா.


"இங்கே பாரு ஸ்ருதி நான் உன்னை போகவேண்டாம்னு சொன்னது தப்பு... உன்னுடைய எதிர்காலம் இதுல இருக்கு. நீ போயிட்டு வா. உன்னுடைய எதிர்காலம் நல்லபடியா அமையனும். "


"வேற என்னதான்டா உன்னோட பிரச்சனை?"


" நீ வசதியான குடும்பத்தில் பிறந்தவள். நான் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் பிறந்தவன். உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது"


"என்னடா இது? எங்கிருந்து இந்த அந்தஸ்து எல்லாம் வந்தது? இத்தனை நாட்கள் இல்லாத குழப்பம் ஏன் இப்போது வருது?"


" இதுக்கு முன்னாடி உனக்கு வேலை இல்லாமல் இருந்தது. இப்போ நீயும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாய். "


"அதுக்கு என்ன இப்போ?"


"வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் உனக்கு நான் தகுதி இல்லாதவன் என்பது புரியும்... நீ என்னை நிராகரித்தால் அந்த வலியை என்னால தாங்கிக்கொள்ள முடியாது ஸ்ருதி..."


"பைத்தியம் மாதிரி பேசாத "


"இல்ல நான் பேசுவது சரிதான். இதோட நம் உறவை முடிச்சுக்கலாம்"


என்று கூறிவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் வீட்டிற்கு அவசரமாக வந்தான் சிவா. 


ஸ்ருதியை சிவா நேசிக்கும் அளவிற்கு யாரும் நேசிக்க முடியாது. இருப்பினும் அவன் ஸ்ருதியை நிராகரித்ததன் காரணம் அவனுக்குள் ஏற்பட்ட பயம் தான். சிவாவின் அண்ணன் இப்போது உயிருடன் இல்லை.


அவன் உயிருடன் இருக்கும் பொழுது ஒரு பெண்ணைக் காதலித்தான். அவர்கள் இருவரும் நான்கு வருடமாக காதலித்தனர். இருப்பினும் அந்தப் பெண் சிவாவின் அண்ணனை திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டாள். அவனை விட சிறந்த மாப்பிள்ளையை அவளது வீட்டில் பார்த்து இருப்பதாகவும் சிவாவின் குடும்பம் எந்த வகையிலும் தனது குடும்பத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்றும்  கூறிவிட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டாள்.



இந்த வலியை பொறுக்க முடியாமல் சிவாவின் அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு சிவாவின் மனதில் ஆழமாகப் பதிந்து இருக்க இப்போது ஸ்ருதி மீது எவ்வளவு காதல் இருப்பினும், பின் நாளில் அவளும் இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி தன்னை விட்டுப் பிரிந்து விடுவாளோ என்ற பயத்தினாலேயே இப்போது அவளை விட்டு விலகிவிட்டான்.


இதுவரை சிவா எதற்காகவும் அழுததில்ல.  முதன்முறையாக ஸ்ருதியை பிரியப் போகிறோம் என்பதனால் அவனது அறையில் கதவை பூட்டிக்கொண்டு கட்டிலில் படுத்து வெளியே சத்தம் கேட்டுவிடக்கூடாது என்று வாயை பொத்திக்கொண்டு கதறி அழுதான்.


சிவாவின் பார்வையில்:


'எல்லா காதலும் வெற்றியில் முடிவதில்லை. வெற்றி பெற்ற காதல்களை விட தோல்வி பெற்ற காதல்கள் தான் நம் நாட்டில் அதிகம். அதில் என்னோட காதலும் ஒன்று. 



ஸ்ருதியுடன் நான் பிரேக் செய்து கொண்டதற்கான காரணம் என்னோட பயம். என்னோட அண்ணனுக்கு நேர்ந்தது போல் எனக்கும் நேர்ந்துவிடுமோ என்ற பயம். அப்படி ஸ்ருதி என்னை வேண்டாம் என்று சொன்னால் என்னால் உயிருடனே இருக்க முடியாது. 


அவள் என்னை நிராகரிப்பதற்கு முன்னர் நானே விலகி விடுவது தான் நல்லது என்று தோன்றியது. அதனால் தான் அவளிடமிருந்து விலகிவிட்டேன். ஆனால் அவளை மறப்பது என்பது சாத்தியம் இல்லாத விஷயம் என்று தோணுது இப்போ என்னை நானே உயர்த்திக்கொள்ள மேற்படிப்பு படித்துவிட்டு 35000 சம்பளத்தில் வேலை பார்க்கிறேன்.


ஆனால் ஸ்ருதி வீட்ல 35000 என்பது ரொம்பவே குறைவான காசு. அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எனக்கோ இது மாத வருமானம். அப்படி இருக்கும் போது எனக்கும் அவளுக்கும் எப்படி சரி வரும் ? 


ஸ்ருதி எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். அவளுக்குப் பிடித்த பையனை அவளது குடும்பத்திற்கு ஏற்ற பையனை திருமணம் செய்து கொண்டு அவள் சந்தோஷமாக இருந்தாலே போதும். ஒரு காதலனாக நான் இதைத்தான் கடவுளிடம் வேண்டுகிறேன் '


ஸ்ருதியின் பார்வையில்:


அவன்தான் என் கூட பிரேக்கப் பண்ணி இருக்கான். நான் இன்னும் அதை அக்செப்ட் பண்ணல. லவ்வில் மட்டும் ஒருத்தர் சொல்லி இன்னொருத்தர் ஏற்றுக் கொண்டால் தானே அது காதல் என்றே சொல்ல முடியும். அப்படிப் பார்த்தால் சிவா என் கூட பிரேக்கப்ன்னு சொல்லி நானும் சரி என்று சொன்னால்தான் அது பிரேக்கப்பாக ஏற்றுக் கொள்ளனும். நான் என்னைக்குமே இதுக்கு சரி என்று சொல்ல மாட்டேன்.


என்ன நினைச்சிட்டு இருக்கிறேன் அவனோட மனசுல? சரியான பைத்தியக்காரன். இப்படித்தான் தேவையில்லாத விஷயங்களை மனசுல போட்டு குழப்பிட்டு இருப்பான்.  நான் யாரு கூட சந்தோஷமா இருப்பேனோ அவனைத் தான் கல்யாணம் பண்ணுவேன். 


என்னோட சந்தோஷம் சிவா கூட மட்டும்தான். வேறுயாரையும் என்னால கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாது. நான் ஆஸ்திரேலியா வந்து இரண்டரை வருடம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் என்னோட மனசுல எந்த ஒரு குழப்பமும் இல்லை எந்த ஒரு சஞ்சலமும் இல்ல. ஆனால் இவன் மட்டும் ஏதேதோ பேசிட்டு இருக்கிறான். 


வேற ஒன்னும் இல்லங்க... நான் அவன் பக்கத்துல இல்லையே அதனாலதான் அவனுக்கு பைத்தியம் பிடிச்சுருச்சு.. ரொம்ப குழம்பி இருக்கிறான். இன்னும் ஆறு மாசத்துல திரும்பி இந்தியா போய்விடுவேன். அப்போ அவன் கன்னத்தில் நான் நாலு அறை கொடுத்தாலே அவனோட குழப்பம் தீர்ந்துடும். 


நீங்க இதையெல்லாம் பெரிய விஷயமா நினைக்காதீங்க. எனக்கு இதெல்லாம் பழகிருச்சு. அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள எங்க கல்யாண பத்திரிக்கை உங்களைத் தேடி வரும். இதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்


Rate this content
Log in

Similar tamil story from Drama