காதலின் அவஸ்தை
காதலின் அவஸ்தை


அவனது அன்னையின் பிடிவாதத்தால் பெண் பார்க்க சென்றவனுக்கு பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது. அவன் பார்க்க வந்த பெண் வேறு யாரும் இல்லை நேத்ரா தான்.
"என்னடா பார்க்குற? ஒரு வாரத்துக்கு முன்னாடித்தான் நேத்ரா இந்தியா வந்தா... வந்ததுமே அவளைப்பற்றி விசாரித்தேன். இன்னும் உன்னையே நினைத்துக்கொண்டு திருமணம் செய்யாமல் இருக்கிறாள்... அதனால அவங்க வீட்டுக்கு நானே வந்து பேசினேன். முதலில் மறுத்தாங்க.. இப்படிப்பட்ட பையனுக்கு எப்படி எங்க பெண்ணை திருமணம் செய்துகொடுக்க முடியும்னு கேட்டாங்க... ஆனால் நேத்ரா தான் அவங்ககிட்ட பேசி புரியவச்சு கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினாள். நானே பார்திருந்தால் கூட இப்படி ஒரு பொண்ணு கிடைத்திருக்க மாட்டாள்... கொடுத்து வைத்தவன் நீ"
என்று அவனது அம்மா கூறவும் அஸ்வினுக்கு தொலைந்து போன அவனது சந்தோசம் மீண்டும் அவனிடம் வந்துவிட்ட மகிழ்ச்சியில் நேத்ராவின் கரம் பற்றி மன்னிப்பு கேட்டான்.
"உன்னோட காதல் எப்பவோ எனக்கு புரிஞ்சுருச்சு நேத்ரா... ஆனால் நானும் உன்னை காதலிக்கிறேன் என்பது புரியத்தான் இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது... உனக்கு காதலுக்கு நான் தகுதியே இல்லாதவன் நேத்ரா"
"கல்யாணம் பண்ணிக்க
லாமா?"
"நான் மோசமானவன் டி"
"கல்யாணம் பண்ணிக்கலாமா?"
"எனக்கு ஏற்கன்வே கல்யாணம் ஆகி விவாகரத்தும் ஆகிருச்சு"
"டேய் அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கு தெரியும்... கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா? அதை மட்டும் சொல்லு?"
"எப்படி உன்னால என்னை ஏற்றுக்கொள்ள முடிந்தது?"
"நான் எப்போதும் சொல்றதுதான்... ஒருத்தரோட நிறைகளை மட்டும் இல்ல குறைகளையும் ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான காதல்... "
"எந்த நம்பிக்கையில் எனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் 5 வருஷமா நீ எனக்காக காத்திருந்த?"
"இது உன்மேல இருக்குற நம்பிக்கையோ இல்ல என்மேல இருக்குற நம்பிக்கையே இல்ல... காதல் மேல இருக்குற நம்பிக்கை. என் காதல் உண்மையாக இருந்தால் எப்படியும் நீ என்கிட்ட வருவனு நான் காதல் மேல வைத்த நம்பிக்கை"
அஸ்வின் வார்தைகழற்று கண்களில் தேங்கிய கண்ணீருடன் அவளை நோக்க , அதற்கு மேல் அவனது கண்ணீரைப் பார்க்க பொறுமை இல்லாமல் அஸ்வினை கட்டி அணைத்துக்கொண்டாள்.
அஸ்வினின் காதல் அவஸ்தையும் முடிவிற்கு வந்தது.
முற்றும்...