காதல் பிறந்தது.... கணக்கு வந்தது
காதல் பிறந்தது.... கணக்கு வந்தது


சிந்தியா ராஜகோபாலன் என்றொரு ஆசிரியை சென்னை பெரம்பூரிலிருந்து புதியதாய் கணக்கு ஆசிரியர் பணிக்கு அமர்த்த்ப் பட்டிருந்தார்!
நான் கணக்கில் ஒன்றும் சுட்டி இல்லை. சுமாராக படிக்கும் மாணவி. அந்த கணித ஆசிரியர் மிக நேர்த்தியாக புடவைகளை அணிந்திருப்பார். அளவுகோலால் அளந்தது போல் .அதே சமயம் மாணவிகள் எளிதாக அணுகக் கூடிய வகையில் அன்பாக நடந்து கொள்வார். கணிதத்தை எளிதாக கற்பிப்பார்.
அவரது ஆடைகள் உடுத்தும் அழகு... அன்பான பேச்சு கற்பித்தல் திறன் இவற்றால் கவர்ந்திழுக்க பட்டேன்! கணித ஆசிரியர் மீது மட்டுமல்ல.... கணிதத
்தின் மீதும் காதல் உண்டானது. 10 ம்வகுப்பு பொதுத் தேர்வில் ஒரேஒரு சிறு அலட்சியத்தால் 100 மதிப்பெண் பெறும் பாக்கியத்தை இழந்து விட்டேன். ஆனால் கணக்கு கற்கண்டு ஆனது அவரால். டீச்சர் இந்த அழகிய தருணத்தில் உங்களுக்கு நன்றியை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி சமர்ப்பிக்கிறேன்.
பாடங்கள் கடினம் ஆயினும் தனது அன்பால்.... கற்பித்தல் திறனால்.... மாணவர்களிடத்தில் அணுகும் விதத்தினால் ஓர் ஆசிரியர் பாடங்களை எளிதாக்கி அதன்மீது ஈர்ப்பினை உருவாக்கிட முடியும் என்பதற்கு அவரே எடுத்துக்காட்டு. நானே அதற்கு சாட்சி.