Uma Subramanian

Others

4.1  

Uma Subramanian

Others

திருந்த மறுக்கிறது

திருந்த மறுக்கிறது

1 min
217


மாலை நேரத் தென்றல்.... அலை முழங்கும் கடல்.... அவைகளின் நடுவே துள்ளி விளையாடும் பிள்ளைகள்! ஏதோ சிந்தனையில் தன்னை தொலைத்து விட்ட யாழினி திடுக்கிட்டு திரும்பினாள்! அக்கா எனும் அழைப்பு ஒலி கேட்டு....

 ஆ... ஆ... ஹரி! நல்லா இருக்கீயா? அம்மா உடம்பு சரியாகி விட்டதா? தங்கச்சி பாப்பா நல்லா இருக்காளா? கரிசனத்துடன் விசாரித்தாள். 


எல்லாரும் நல்லா இருக்காங்க! நீங்க எப்படி? விசாரித்தான் ஹரி!

நல்லா இருக்கேன் டா செல்லம்! உங்க அப்பா எப்படி..... கேட்டு முடிப்பதற்குள் கண்ணீர் தாரை தாரையாய் வழிய எங்கள விட்டுவிட்டு போயிட்டாரு அக்கா!

ஐயோ பாவம்... !அழாதேடா கண்ணா! கவலைப்படாதே! அக்கா நான் இருக்கேன்! ஏதாச்சும் உதவி வேணும்ன்னா கேளு! என்ன செய்வது? எல்லாம் விதிப் பயன்! ஆறுதல் கூற....

அக்கா, சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம அம்மா 3 நாளா பட்டினி கிடக்கிறாங்க! சுண்டல் வித்த காசுல எங்க 2 பேருக்கும் பாலும் பழமும் வாங்கிக் கொடுத்தாங்க!


அம்மா ஈரத்துணிய வயித்துல கட்டிக்கிட்டு படுத்துக்கிட்டாங்க! கேட்டா இப்படி கட்டிக்கிட்டா பசிக்காதுன்னு சொல்றாங்க! அப்படியா அக்கா?

  கேட்பதற்கே மனம் கணக்கிறது! எத்தனை கஷ்டங்கள் இந்த பிஞ்சு வயதில்? வாய் ஆறுதல் சொன்னாலும்.... கண்களில் வெள்ளம் ஆறாய்ப் பெருக்கெடுத்தது ! 

கவலைப்படாதே! அம்மாவை நாளைக்கு கூட்டிக் கொண்டு வா! தெரிந்த இடத்தில் வீட்டு வேலைக்கு சேர்த்து விடுறேன்! இந்தா பணத்தை வாங்கிக்கோ..... அரிசி வாங்கிட்டுப் போய் அம்மாகிட்ட குடு!

இல்ல... வேணாம்... அக்கா! மறுத்து விட்டு ஓடியவனை பிடித்து இழுத்து கையில் திணித்தாள்! ரொம்ப நன்றிக்கா... கூறி விட்டு அழுதான்! 


அழாதே! நீ படித்து பெரிய ஆளாய் வா! ஆறுதல் கூறினாள்! 

பொறுப்பில்லாத ஆண்கள்..... உடம்பில் தெம்பு இருக்கும் வரை குடித்து விட்டு கும்மாளம் அடிப்பது ...நகை நட்டு.. சொத்து பத்து.... ரேஷன் கார்ட் ஒன்று விடாமல் விற்று தொலைத்து குடித்து குடித்து தன்னையும் கெடுத்து தன் குடும்பத்தை அனாதைகளாக்கி... நிற்கதியாக்கும்.... எத்தனை ஆண்கள்! எத்தனை பரிதாபத்துக்குரிய பெண்கள்! எண்ண எண்ண மனம் வலிக்கிறது! ஏனோ இதை பார்த்தும் சமூகம் திருந்த மறுக்கிறது! 

குடி குடியைக் கெடுக்கும்! 

குடியை மறப்போம்! குடும்பத்தைக் காப்போம்! 


Rate this content
Log in