இவையெல்லாம் உங்களால்
இவையெல்லாம் உங்களால்


எஸ்தர் ஜோதிமணி என்றொரு ஆசிரியை. குள்ளமான.... சற்றே பருத்த .... உடல்வாகு. யாரிடமும் சிரித்துப் பேசமாட்டார். கட்டுப்பாட்டிற்கும் ஒழுங்கிற்கும் அவர் தான் எடுத்துக் காட்டு! வகுப்பறையில் அலமாரி ஒன்று இருந்தது. பெயர் வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு... புத்தகப் பைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
பைகள் கலைந்து கிடந்தால் வகுப்பறையில் நுழைந்தவுடன் யாருடைய பை? என்பார். அந்த மாணவியை அழைத்து பிரம்பை கையில் கொடுத்து என்னை அடி என்பார். மாணவிகளோ செய்வதறியாது நடுங்குவர்!
ஆசிரியரை எவ்வாறு அடிப்பது? நாம் தானே தவறு செய்தோம்! ஆசிரியருக்கு தண்டனையா? உனக்கு நான் ஒழுக்கத்தை சரியாக சொல்லித்தரவில்லை. அதனால் தான் நீ இவ்வாறு பையை போடுகிறாய் என்பார்! இப்படியாக பாடக்குறிப்பேடு, கையெழுத்து ஏடு, ஏன் தர அட்டை, புத்தகங்கள் எல்லாமே! ஏப்ரல் மாத இறுதியில் கூட புத்தம் புதிதாய்! எந்த நேரம் யார் ஆய்வுக்கு வந்தாலும் கவலையில்லை!
அத்தனை நேர்த்தி! அன்றாட வேலைகளை அன்றே முடித்து வைக்கப்பட்டிருக்கும்! ஆக.... உங்கள் மாணவிகளாகிய எங்கள் நேர்த்தி, ஒழுங்கு, கட்டுப்பாடு, தெளிவான கையெழுத்து, இவையெல்லாம் உங்களால் மட்டுமே! நன்றி எஸ்தர் டீச்சர்!