Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

anuradha nazeer

Tragedy

5.0  

anuradha nazeer

Tragedy

காலை

காலை

1 min
364


ஒரு தேவாலயத்தில் நேற்று முன்தினம் காலை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.


அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் தேவாலயத்துக்குள் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.


அனைவரும் பயத்தில் அலறினர். பலர் தேவாலயத்தில் உள்ள மேஜைகளுக்கு அடியில் பதுங்கினர். எனினும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.


இந்த காட்சிகள் அனைத்தையும் அந்த நபர் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பினார். அதனை தொடர்ந்து, தேவாலயத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் உடனடியாக தனது கைத்துப்பாக்கியை எடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டு வீழ்த்தினார்.


இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.


படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Tragedy