இரண்டாவது மனைவி தற்கொலை
இரண்டாவது மனைவி தற்கொலை


அறையில் கேட்ட குழந்தை அழும் சத்தம்!’ -இரண்டாவது மனைவி தற்கொலையில் சிக்கிய சென்னை டிரைவர்
`படுக்கையறையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது காதல் திருமணம் செய்த என் மகள் கோகிலா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள்' என அவரின் அம்மா உமா, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு, கருக்கு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமா (53). இவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், ``நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் கடந்த ஓராண்டாக வசித்துவருகிறேன். என் கணவர் ராதாகிருஷ்ணன், 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்கு அனிதா, கோகிலா என இரண்டு மகள்கள்.
என் மூத்த மகள் அனிதா சிறுவயதில் இறந்துவிட்டாள். நான் பட்ரவாக்கத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கான்ட்ராக்ட் முறையில் பேக்கிங் வேலை செய்துவருகிறேன். என் இளைய மகள் கோகிலா (24) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளாள். நாங்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சண்முகபுரம், அன்னை இந்திரா நகரில் குடியிருந்தோம். அப்போது அங்கு குடியிருந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை கோகிலா காதலித்தார்.
என் மகள் கோகிலாவுக்கு 2 சவரன் நகை சீதனமாக கொடுத்தேன். மருமகன் கோபாலகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர் டிரைவராக வேலை செய்துவருகிறார். கோபாலகிருஷ்ணன் சரிவர வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு கோகிலாவிடம் தகராறு செய்வார். மூத்த மனைவி ராஜேஸ்வரியின் மகன் மணிகண்டனை நாங்கள்தான் வளர்த்து வந்தோம்.
இந்தத் தகவல் தெரியவந்ததும் வீட்டில் வைத்து பெரியவர்கள் முன்னிலையில் கோபாலகிருஷ்ணனுக்கும் கோகிலாவுக்கும் முறைப்படி 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம்
செய்து வைத்தோம். திருமணத்துக்குப்பிறகு கோபாலகிருஷ்ணன் குறித்து விசாரித்தபோது அவருக்கு அம்மா கிடையாது என்றும் ஏற்கெனவே அவருக்கு 2007-ம் ஆண்டு ராஜேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ராஜேஸ்வரி ஸ்டவ் வெடித்து தீயில் கருகி இறந்துவிட்டார். அதன்பிறகுதான் என் மகள் கோகிலாவை 2-வதாக காதலித்து திருமணம் செய்தது எனக்குத் தெரியவந்தது.
என் மகள் கோகிலாவுக்கு 2 சவரன் நகை சீதனமாக கொடுத்தேன். மருமகன் கோபாலகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர் டிரைவராக வேலை செய்துவருகிறார். கோபாலகிருஷ்ணன் சரிவர வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு கோகிலாவிடம் தகராறு செய்வார். மூத்த மனைவி ராஜேஸ்வரியின் மகன் மணிகண்டனை நாங்கள்தான் வளர்த்து வந்தோம். இந்த நிலையில், 24.5.2020-ல் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். அப்போது கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் கோகிலாவிடம் தகராறு செய்தார். மகளிடம் தகராறு செய்துவிட்டு கோபாலகிருஷ்ணன் வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டார். நான் வீட்டின் முன்பகுதியில் படுத்துக்கொண்டேன்.
இரவு 10.30 மணியளவில் வீட்டின் படுக்கையறையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு நான் உள்ளே சென்று பார்த்தேன். அப்போது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் கோகிலா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கோகிலாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். எனவே, மகளின் சடலத்தை அடக்கம் செய்ய ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.