இன்றைய ரக்ஷாபந்தன்
இன்றைய ரக்ஷாபந்தன்


அக்கா! ரக்ஷாபந்தனுக்கு உனக்கு ஆபிசில் லீவு இல்லையா?
அக்கா நிரஞ்சனா காலேஜ் படித்துக் கொண்டிருந்த தம்பியை நிமிர்ந்து பார்க்காமல் பேசினாள். வெள்ளிக் கம்பிகள் வரிவரியாய் தலையில் நெளிந்ததைக் கவலையுடன் கண்ணாடியில் பார்த்தாள்.
அவளாகவே செய்த ரக்ஷாபந்தன் கயிறை டிராயரிலிருந்து எடுத்தாள். இது எனக்கா அக்கா என்றான் தம்பி ரகு. உனக்கு ஆபிசில் வரும்போது வாங்கி வருகிறேன். இந்த கயிறு ஆபிசில் ஒரு ஆளுக்காக வைத்திருக்கிறேன். யாருக்கா அது? நாலு பிள்ளை பெற்று ஒரு தாத்தா என்னை இரண்டாந்தாரமா கல்யாணம் செய்துக்கறேன்னு நிற்கிறார்.
அவருக்காகத்தான் வைத்திருக்கிருக்கிறேன். அவரு நல்லா வசதியாக்கா? ஏண்டா! தள்ளி விடலாம்னு பார்க்கறியா? இத்தனை வயதிற்கும் மேல் உன்னை யாருக்கா கல்யாணம் பண்ணப்போறா? எனக்காகவாவது வழி விடு! உனக்கு முடிஞ்சாத்தான் எனக்கு முடியும் என்று சொன்ன தம்பி ரகுவை உற்றுப் பார்த்தபடி நகர்ந்தாள்