Bala Ji

Drama Romance Others

4  

Bala Ji

Drama Romance Others

என் இனிய கயலுக்கு கல்யாணம்

என் இனிய கயலுக்கு கல்யாணம்

3 mins
382


அதோ வந்துவிட்டாள் என் ஆருயிர் காதலி !!.. கல்யாண கோலத்தில் ..!

இன்று அவளுக்கு திருமணம் .. ஆனால் மாப்பிள்ளை நான் அல்ல .


அதோ மண மேடையில் உட்கார்ந்து இருக்கிறானே அவன்தான் அவளை மணக்க போகிறவன் .அவனை எங்கேயோ பார்த்திருக்கிறேன் . கூட பழகிய நட்பினை போல் தெரிகிறான் ஆனால் அதுவா இப்போது முக்கியம் ..?

அவன் எப்படி என் காதலிக்கு மாப்பிள்ளை ஆனான் ? சத்தியமாக தெரியவில்லை .


"சரவணா .. இங்க கொஞ்சம் வாப்பா .அங்க மதியம் விருந்துக்கு சமைக்க காய்கறி பத்தலன்னு அந்த காண்ட்ராக்டர் கத்திகிட்டே இருக்கான் .அது கொஞ்சம் என்னனு பாருப்பா " எனது அத்தை . என் கயலின் அம்மா. மிக உரிமையுடன் என்னை ஏவி கொண்டிருக்கிறாள் . ஒரு வகையில் தூரத்து சொந்தம் .

"நான் இருக்க வேண்டிய இடத்தில் இவன் யார் ? உடனடியாக இந்த கல்யாணத்தை நிறுத்துங்க .நான்தான் அவளை கணவனாக வேண்டியவன்."


இப்படி சத்தம் போட்டு சொல்ல தோன்றியது . ஆனால் என்னையும் அறியாமல் நான் அத்தையின் ஏவலுக்கு கட்டுப்படுகிறேன் .

"சரிங்க அத்தை .இதோ போய் பாக்கிறேன் "


------------------------------------------------------------------------------------------------------

மணமேடையில் அவள் அவனுடன் அழகாக சிரித்து பேசி கொண்டிருக்கிறாள் .இதுவே வேறொரு தருணமாக இருந்தால் அவளின் கொள்ளை கொள்ளும் அழகை நின்று ரசித்து கொண்டிருப்பேன் . ஆனால் இப்போது என் மனம் முழுக்க வெறுப்புணர்வு தான் மிஞ்சியுள்ளது .

அவள் மேடையிலிருந்து என்னை அழைத்தாள் .ஓடோடி சென்றேன் நான் !!

"டேய் என் பிரெண்ட்ஸ் மண்டபம் சரியா தெரியாம ரயில்வே ஸ்டேஷன்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க . அவங்களுக்கு போன் பண்ணி மண்டபத்துக்கு எப்படி வரணும்னு கொஞ்சம் சொல்றியா ப்ளீஸ் " என சொல்லி கொண்டே போனை என்னிடம் நீட்டினாள் .

அவள் போனில் எங்கள் இருவரின் ஜோடி போட்டோவை தானே வால்பேப்பராக வைத்திருந்தாள் ?! தற்போது வேறு ஒரு படம் வால்பேப்பராக மின்னியது .


"ஏன் கயல் ? ஒரு வாரம் நாம ரெண்டு பேரும் எவ்ளோ உயிருக்கு உயிரா லவ் பண்ணிக்கிட்டு இருந்தோம் . நான் இல்லாம உன்னால வாழவே முடியாதுனு சொன்னியே கயல் .."

"டேய் எரும ! என்னடா உளர்ற ? ஏதாச்சும் பிராங்க் பண்றியா ? அவர் கேட்டுட போறாரு . நான் சொன்னதை செய் போ ..ப்ளீஸ் ."

என்னால் சற்றும் நம்ப முடியவில்லை .என்ன ஆயிற்று என் கயலுக்கு ?! என்னிடம் காதலுடன் இரவு பகலாய் உருகுருகி பேசிய என் கயலா இப்படி பேசுகிறாள் ? நான் பிராங்க் செய்கிறேனா ?! இல்லை இவள் நான் காதலித்த கயல் இல்லை .

வேகவேகமாய் மேடையிலிருந்து கீழே இறங்கினேன் .

"சார் சார் !! சின்ன ஹெல்ப் . நீங்க தப்பா நினைக்கலேனா அந்த லைட் ஸ்டாண்ட ஆன் பண்ணி கொஞ்சம் இந்த பக்கம் அட்ஜஸ்ட் பண்ணி வெக்குறிங்களா ப்ளீஸ் .."

போட்டோகிராஃபர் என்னை பார்த்து கேட்டார் .

வரும் கோபத்திற்கு மொத்த ஆத்திரத்தையும் போட்டோகிராஃபர் மேல் காட்ட தோன்றியது .

"இது ஓகேவா ?" லைட் ஸ்டாண்டை அட்ஜஸ்ட் செய்து விட்டு அங்கிருந்து நகர்ந்து கொண்டிருக்கிறேன் .

-----------------------------------------------------------------------------------------------------

அதோ தூரத்தில் என் பெற்றோர் .எங்களின் காதல் விஷயம் அவர்களுக்கும் தெரியுமே .!! கயலை மருமகளாக அடைவதில் தங்களுக்கு மிகுந்த சந்தோசம் என மகிழ்ச்சியுடன் கூறினார்களே ?

இப்பொழுது அவளை இன்னொருவன் மணம் முடிக்க போகும் இந்த கணத்தில் ஒன்றும் நடக்காதது போல் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார்கள் .!!

இவ்வுலகில் தனித்து விடப்பட்டவனாக ,யாரும் இல்லாதவனாய் உணர்வற்றவனாக உணர தொடங்கினேன் .


"கெட்டி மேளம் ..கெட்டி மேளம் "

ஐயர் கல்யாண மந்திரம் முழங்க இதோ அவன் அவளுக்கு தாலி கட்டி கொண்டிருக்கிறான் . இனி எல்லாம் முடிந்தது . என் கயல் இன்னொருவனுக்கு உரியவனாகி கொண்டிருக்கும் தருணம் . அங்கிருந்து ஓடி விட தோன்றியது .ஆனால் முடியாமல் அந்த மண மேடையையே பார்த்து கொண்டிருக்கிறேன் .

தீடிரென என் கண்கள் சொக்க ஆரம்பித்தன .கால்கள் தடுமாறின .என்னை சுற்றி உலகம் தீடிரென வேகமாய் சுழன்று இருட்டில் மறைய தொடங்கியது .


--------------------------------------------------------------------------------------------------


"சரவணா ..என்ன பாரு ..என்னாச்சி ?"

சட்டென கண் விழித்து பார்த்தேன் .பக்கத்தில் என் கயல் உட்கார்ந்து இருந்தாள் . ஆனால் நான் எப்படி இங்கே இந்த படுக்கையில் ? கல்யாணம் என்ன ஆயிற்று ?இவள் எப்படி இங்கே ?

"கயல் ..கல்யாணம் முடிஞ்சுருச்சா ?"

"என்னடா உளர்ற .. எந்த கல்யாணம் ..மணிய பாரு .நைட் 2 மணி . நீ போட்ட சத்தத்துல குழந்தையும் எந்திருச்சுடுச்சு .இப்ப மறுபடியும் சமாதானம் பண்ணி தூங்க வெக்கணும் "..ஒரு வித சலிப்புடனே எழுந்து செல்கிறாள் என் கயல் .

என்னால் எதையுமே நம்ப முடியவில்லை .

நான் சுற்றும் முற்றும் பார்த்தேன் . கடிகாரத்தை பார்த்தேன் . 2 மணி காட்டியது . பக்கத்தில் சுவற்றில் என் கல்யாண போட்டோ .அதில் என் பக்கத்தில் மண பெண்ணாய் கயல் சிரித்து கொண்டிருந்தாள் . அதோ குழந்தை அழுகிறது. ஆம் ! அது என் ஒரு வயது செல்ல குட்டி !

அப்படியென்றால் நான் கண்டத்தெல்லாம் கனவா ? நிஜம் போலவே இருந்ததே ?!

பின்பு முகம் கழுவி கொண்டு வந்து படுக்கையில் அமர்ந்து என் கனவை பற்றி எண்ணி பார்த்தேன் . எதுவும் உண்மையில்லை .நாங்கள் இருவரும் இரண்டாண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதை தவிர !!

எப்போதோ யாருக்கோ நடந்த நிகழ்வுகள் ,படித்த அனுபவங்கள் என ஒன்றாய் சேர்த்து என் மூளை எனக்கே ஒரு கற்பனை சினிமா படம் போட்டு காட்டியிருக்கிறது .

படுக்கையை விட்டு எழுந்தேன் .கயல் குழந்தையை சமாதான படுத்தி கொண்டிருந்தாள் .நான் குழந்தையை வாங்கி தாலாட்டி தொட்டிலில் கிடத்தினேன் .அது தூங்கும் அழகை புதிதாய் பார்ப்பது போல் பார்த்து கொண்டிருந்தேன் .

அருகில் வந்த கயலை பிரியத்துடன் அணைத்து முத்தமிட்டேன் .என் தீடிர் பிரியத்தை அவள் சற்று வியப்பாகவே உணர்ந்து இருக்க கூடும் .


எப்படியோ ஒரு சிறுகதைக்கான கரு எனக்கு இப்போது கிடைத்திருந்தது !!!!


 


Rate this content
Log in

Similar tamil story from Drama