Bala Ji

Inspirational Others

4  

Bala Ji

Inspirational Others

நாளைய இந்தியா

நாளைய இந்தியா

5 mins
298


"எப்படி மிஸ் நமக்கு சுதந்திரம் கிடைச்சது ?” . யுகபாரதி குழப்பத்துடன் கேட்டாள் .

மீரா இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கேள்வி கேட்பது வேறு ஒரு மாணவி எனில் தெரிந்த பதில் சொல்லி சமாளிக்கலாம். ஆனால் கேட்பது பாரதி என்பதால் மீராவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.


ஓரிரு வரி பதில்களால் அவள் சமாதானம் அடைய மாட்டாள் . அவளின் அறிவு தாகம் அப்படி. ஒரு விஷயம் பற்றி முழுவதுமாக தெரியும் வரை கேள்விகளால் துளைத்து விடுவாள் . மீராவுக்கு யுகபாரதி பற்றி தெரியும்.

அவள் தன் சக வயதினரை போல் உள்ளவள் அல்ல. கேள்வி தாகம் தான் அவள் சிறப்பு.

யுகபாரதி 10 ம் வகுப்பு படிக்கும் மாணவி. மற்ற குழந்தைகள் கார்டூன் பார்த்து பொம்மைகளுடன் விளையாடும் சிறு வயதில் அவள் அப்பா அவளுக்கு நாளிதழ் வாசிக்க கற்று கொடுத்தார். முதலில் வாசிக்கும் திறன் வளர்ச்சிக்காக படிக்க ஆரம்பித்து, இப்பொது அதுவே பிடித்த பொழுது போக்காக மாறியது.

தினசரி செய்திகள் அனைத்தையும் ஆழமாக படிப்பது, நிறைய புத்தகங்களை தேடி படிப்பது, அதில் எழும் சந்தேகங்களுக்கு ஆசிரியர்களிடம் கேள்விகளால் விடை தேட முயல்வது இதுவே அவளின் தினசரி அலுவல். ஆனால் அவளின் அறிவு பசிக்கு தீனி போட , அவளின் சந்தேகங்களை தீர்த்து வைக்க மற்றவர்க்கு பொறுமையில்லை.

இவையனைத்தும் மீரா டீச்சர் அந்த ஸ்கூலுக்கு வரும்வரைதான். யுக பாரதியை மீரா நன்கு புரிந்து கொண்டாள் . இந்த வயதில் இப்படிபட்ட அறிவு தாகம் கொண்ட யுக பாரதி மீராவுக்கு வியப்பான பெண். அவளின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்வாள். தெரியா விட்டாலும் தேடி பிடித்து பதில் கூற முனைவாள் . இல்லையெல் நூலகத்தில் இருந்து தேவைபடும் புத்தகம் கொண்டு வந்து பதில் சொல்வாள் . இதனால் மீராதான் யுகபாரதிக்கு ஃபேவரைட் டீச்சர்.


சில மாதங்களாக இந்திய வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து தேடி தேடி படிக்கிறாள் பாரதி.அன்று சுதந்திர தினம். பள்ளியில் அதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன . அப்பொது தான் பாரதி அந்த கேள்வி கேட்டாள் .

“ என் பாரதி ? உனக்கு தெரியாதா?” மீரா கிண்டலாக கேட்டாள் .

“சொல்லுங்க மிஸ் ”

“நமக்கு அவ்வளவு எளிதாக சுதந்திரம் கிடைக்கல. பல வருஷம் பல ஆயிரக்கணக்கான பேர் அடி வாங்கி ரத்தம் சிந்தி போராடி தான் இந்த சுதந்திரம் வாங்கி தந்திருக்காங்க நான் கூட அத பத்தி நிறைய சொல்லியிருக்கேனே .”


“அவ்வளவு கஷ்ட பட்டு வாங்குன சுதந்திரத்த ,நாம எந்த அளவுக்கு மதிக்கிரொம் மிஸ் ?”


“……”


“சொல்லுங்க மிஸ் .”


மீரா யுக பாரதியை உற்றுபார்த்தாள் அவள் கண்களில் இப்பொது அறிவு பசி இல்லை. ஞான தேடல் மிகுந்திருந்தது.

“ இந்த சில மாசமா நான் நம்ம நாட்ட பத்தியும் நம்ம சுதந்திர போராட்டம் பற்றியும் நிறைய படிச்சென். அத படிக்க படிக்க இந்தியா மேல அளவு கடந்த மதிப்பு வந்துச்சு. நமக்காக போராடுன பல சுதத்திர போரட்ட தியாகிகள் மேல நிறைய மரியாதை வந்துச்சு. எப்பேர்பட்ட பூமில பிறந்துறர்கோம்னு எனக்கெ பெருமையா இருந்துசு. ஆனா?”


பாரதி சிறு இடைவெளி விட்டாள் .


“ஆனா என்ன பாரதி?”


“இன்னிக்கு அதுக்கு எல்லாம் நாம காட்டுற நன்றி கடன் என்ன மிஸ் ? நம்ம நாட்டுல எங்க பாத்தாலும் ஊழல், லஞ்சம்,கொலை,கொள்ளை,சாதி அரசியல்,மத வெறியை தூண்டுவது. இங்க எல்லாம் ரொம்ப தப்பா இருக்கு மிஸ் ..”


பாரதியின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

“ இதையெலாம் சரிபண்ண வேண்டிய நம்ம இளைஞர் கூட்டம் சினிமா, கேளிக்கைனு திசைமாறி போய்கிட்டு இருக்கே மிஸ்.. இந்த நாட்டுக்காக போராடுன தியாகிகளை நாம வருஷத்துல இந்த ஒரு நாள் தான நினைக்கிறோம். ஆனா அதையும் ஒரு சாதாரண லீவு நாளா தான் கடந்து போறோம்.. "

இதையெல்லாம் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு மிஸ்.. "


அழுத கண்களுடனே சொல்லி முடித்த பாரதி . மேலே எதுவும் பேசாமல் பாரதி சென்று விட்டாள்.. மீராவுக்கு அவளை எப்படி தேற்றுவதென தெரியவில்லை.. !!

அன்று பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக முடிந்தது.. !!!


அடுத்த நாள் பாரதி பள்ளிக்கு வரவில்லை.. மீரா அவளை நினைத்து கவலை கொண்டாள்.. அவளுக்கு எப்படி நம்பிக்கை ஊட்டுவது என ஆழ்ந்து சிந்தித்தாள்..


ஆனால் அதற்கு அடுத்த நாள் தன்னை தேடி வந்த பாரதியை கண்டு மீராவுக்கு ஆச்சரியம்.. பாரதியின் முகத்தில் ஏக மகிழ்ச்சி தென்பட்டது..


"மிஸ் மிஸ்... நேத்து நடந்தத கேட்டா நீங்க நம்ப மாட்டீங்க.. கேளுங்களேன்.. "


"என்ன நடந்திருக்கும் ?" ஆவலுடன் மீரா பாரதி சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்..


"நேத்து ஒரு கனவு மிஸ்... அதுல... "


கனவில் பாரதி கால மியூசியம் முன் நின்று கொண்டு இருந்தாள்.. அவள் முன் ஒரு உருவம் கோமாளி உடையில் ஒரு கதவை திறந்து வைத்து உள்ளே போக சொல்லி சிரித்தது.. பயத்துடன் உள்ளே சென்றாள்...


அங்கு வரலாற்றின் பல கால கட்ட நிகழ்ச்சிகள் காட்சிகளாக பல கண்ணாடி திரைகளில் ஓடி கொண்டிருந்தன..பாரதிக்கு ஆச்சரியம்.. ஒவ்வொன்றாக பாரத்து கொண்டே சென்றாள்..


அங்கு இன்னொரு அறை.. அதில் நுழைந்தாள்..

இந்தியாவை அதன் பல்வேறு கால கட்டங்களில் அங்கு காண முடிந்தது.

முதல் திரை காட்சிகள் ஆங்கிலேயர்கள் இந்தியா வந்திறங்கிய தருணம்.. இந்தியா பல சிறு பிரதேசங்களாய் பிரிந்திருந்தது .. மன்னர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் போரிட்டு கொண்டிருந்தனர்..


இரண்டாம் திரையில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மிக மோசமாக அடிமை போல நடத்த பட்டனர்.. மக்கள் தங்கள் பிறப்பால் மதிக்கப்பட்டனர்.. அந்த கால சாதி கொடுமைகளின் காட்சிகள் பாரதியை கோபம் கொள்ள வைத்தன..


மூன்றாம் திரையில் பிரிட்டிஷ் இந்தியா காட்சிகள்.. தங்கள் சொந்த நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக வாழ்ந்தனர்.. ஆங்கிலேயரின் பல அடக்குமுறைகள் காட்சிகளாக விரிந்தன..


அதற்கடுத்த பல திரைகளில் இதே போல் பல வரலாற்று கொடூரங்கள்.. பஞ்சம் வறுமை ஒற்றுமையின்மையின் காட்சிகள்..

பாரதியின் மனம் இதை கொண்டு வேதனை கொண்டது..


அப்போது அவளுக்கு பின்னால் ஒரு உருவம் வெள்ளை உடையில் வந்து நின்றது.. திரும்பி பார்த்தாள்.. ஒரு பெரியவர் முகத்தில் மாறா புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார் .


"சார் நீங்களா..? "


பெரியவர் சிரித்தார்.. "ஏன் ரொம்ப வருத்தமா இருக்க குழந்த? "


பாரதி தான் கண்ட காட்சிகளை, தன் கவலையை கூறினாள்..


"ஏன் பின்னாடி வா.. உனக்கு ஒன்னு காட்றேன் "


பெரியவர் அவள் கைபிடித்து அழைத்து சென்றாள்.

"உன் எல்லா கவலைக்குமான விடை... இதோ இந்த திரையில பாக்கலாம்.. "


திரையில் அந்த காலத்து ரயில்.. அதன் முதல் வகுப்பில் பயணம் செய்ததற்காக ,ஆங்கிலேயன் உட்கார இடம் தர மறுத்ததற்காக ஒரு இந்திய இளைஞர் ரயிலிலிருந்து வெளியே இழுத்து தள்ளப்படும் காட்சி.. ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்றான். அவன் போராட்ட முறை புதியதாக இருந்தது.. அவன் நாட்டு மக்களால் மகாத்மா எனப்பட்டார்.. அவரை போன்ற பல தலைவர்கள் வழிகாட்ட நாட்டு மக்கள் சுதந்திரத்திற்காக போராடும் காட்சிகள் பாரதியை மெய் சிலிர்க்க வைத்தன. காட்சி முடிந்தது..

பாரதி பெரியவரை பார்த்தாள்


"இப்போ சொல்லு உனக்கு என்ன கவலை குழந்த? "

"சார்.. நம்ம நாடு முன்ன மாறி இல்ல.. எல்லா இடத்திலும் தப்பா இருக்கு.. "


"இப்போ நீ பாரத்த கொடுமைகள விடவா இப்ப நாட்ல கொடுமைகள் நடக்குது? எல்லா காலத்திலும் துன்பங்கள் இருந்துட்டு தான் இருக்கு.. அதனோட வடிவங்கள் வேறனாலும் அதன் அளவு ஒன்னு தான்.. "


பாரதி யோசிக்க தொடங்கினாள்..


"நாம எப்பவுமே நல்ல விஷயங்களை கவனிக்க மறக்கிறோம்.. இப்பொ நீ பாத்த இவ்ளோ கொடுமைகளையும் எப்படி நம்ம தலைவர்கள் மாற்றி எப்படி ஒரு சுதந்திரமான ஒன்றுப்பட்ட இந்தியாவ உண்டாக்குனங்களோ அதே மாறி உன்னால நம்ம நாட்டுக்காக என்ன செய்ய முடியும்னு யோசி... உனக்கான பதில் கிடைக்கும் "

என பேசி முடித்த பெரியவர் அவள் கையில் இரண்டு வாழ்த்து அட்டைகள் கொடுத்து பாரதியை வழி அனுப்பி வைத்தார்..


--------

"அதுக்கப்புறம் நான் கனவு கலைஞ்சி எந்திரிச்சிட்டேன் மிஸ் "


பாரதி சொல்லி முடிக்கவும் மீரா அவளை வியப்புடன் நோக்கினாள்..


"மிஸ் அந்த பெரியவர் எனக்கு ரெண்டு அறிவுரைகள் இருக்கிற வாழ்த்து அட்டைகள குடுத்தாரு.. அது என்னனா.. .. 1) . நம்ம நாட்ல நம்மள சுத்தி இப்போ நடக்குற எதிர்மறையான சம்பவங்கள மட்டும் பாக்க தெரிஞ்ச எனக்கு நம்ம நாட்டுல இது வரைக்கும் நடந்த, நடந்துகிட்டு இருககிற நேர்மறையான பல நல்ல விஷயங்கள பாக்க தவறிட்டேன். எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கைய கை விட மாட்டேன் மிஸ். 2) பிறருக்காக செய்யற ஒவ்வொரு உதவியும் நமக்கு சிங்கம் போன்ற பலத்தை கொண்டு வரும்.. அதனால நான் இனி என் உழைப்பு இந்த நாட்டுக்காக இருக்கும் மிஸ்

இப்போ எனக்கு எந்த சந்தேகமும் இல்ல மிஸ்.. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மிஸ் "


கடகடவென பாரதி பேசி முடித்தாள்


மீரா பாரதியை நினைத்து பெருமிதம் கொண்டாள்.. அவளை ஆர தழுவி உச்சி முகர்ந்தாள் .


"பாரதி... இதெல்லாம் சரி.. அந்த பெரியவர் யாரு? எங்கயாவது பாத்துருக்கியா? "


பாரதி சிரித்துக் கொண்டே கைகாட்டினாள்.. சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்தில் புன்னகைத்து கொண்டிருந்தார் அப்துல் கலாம்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational