சிறுமி பாலியல் வழக்கு
சிறுமி பாலியல் வழக்கு


சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பழனி என்ற கைதி இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி 2018-ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், சுரேஷ், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரை போலீஸார் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இவர்கள் மீது போக்ஸோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலைமுயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.: இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரையில் 11 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கினார். வழக்கு விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்ட 10-வது நபரான பாபு, மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, 16 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சுமத்தப்பட்ட 15-வது நபரான தோட்டக்காரர் குணசேகரன் விடுதலை செய்யப்பட்டார்.