சிலர் உயிரையும் இழந்துள்ளனர்
சிலர் உயிரையும் இழந்துள்ளனர்


ரூ.3,500 கொடுத்தால்தான் அனுப்புவோம்!' - தமிழர்களிடத்தில் பணம் கேட்கும் மகாராஷ்டிர அதிகாரிகள்?
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சாங்லி மாவட்டம், குப்வாட் கிராமத்தில் தமிழர்கள் 400 பேர் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் தவிக்கும் தமிழர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்ப அந்த மாநில அதிகாரிகள், தலா ரூ.3,500 கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், `மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சாங்லி மாவட்டம், குப்வாட் கிராமத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்ட 400 பேர் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளனர்.
வேலைக்காக அங்கு சென்றவர்களால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தமிழகம் திரும்ப முடியவில்லை. இவர்களைத் தமிழகம் போக அனுமதி தர வேண்டுமென்றால் தலா ரூ.3,500 செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். பணம் செலு
த்த முடியாத அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே, அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தமிழக டி.ஜி.பி, மகாராஷ்டிர மாநிலம், சாங்லி மாவட்ட எஸ்.பி ஆகியோர் ஒருவாரத்துக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்'' என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் லாக்டௌன் அறிவிக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும் சைக்கிளிலும், கிடைத்த வாகனங்களிலும் சொந்த ஊருக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில், சிலர் உயிரையும் இழந்துள்ளனர்