அவள் கடந்த பாதை
அவள் கடந்த பாதை
"இத்தனை வருஷம் ஒண்ணா இருந்துட்டு இப்போ நீ போறது சரியா? அதும் எல்லா பொம்பள புள்ள வேற! கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணலாம்லே! “நான் ஏன் இன்னும் இந்த வீட்ல இருக்கனும்? நான் கேட்டது எனக்கு கெடைச்சிச்சா? உங்க அப்பா கிட்ட சொல்லி ஆயிரம் வெள்ளி கொடுத்தாதான் அம்மா இந்த வீட்ல இருப்பேன்னு சொல்லிட்டேன் நம்ம மக தேவி கிட்ட. அவ உங்க கிட்ட சொல்லியும் நீங்க அத பெருசா எடுத்துக்களையே?! அப்புறம் எதுக்கு நான் இன்னும் இங்க டைம் வேஸ்ட் பண்ணனும்? "ஒன்னு இல்ல ரெண்டு இல்ல நாளு பொம்பள புள்ளைங்க. நான் மட்டும் எப்படி தனியா வளர்க்க போறேன்? “இப்போ பேசி எந்த புண்ணியமும் இல்ல! நான் கெளம்பறேன்.
” போகாதீங்க மா!
பட்டணத்தில் அகழ்எந்திர ஆபரேட்டர்ரான மணியன் ஒரு சராசரி வாழ்க்கையை வாழும் சராசரி மனிதன். மணியனுக்கும் கவிதாவுக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள். வீட்டில் பல போராட்டங்களை கடந்து திருமணம் புரிந்த இவர்களின் திருமணம் ஒரு காதல் திருமணமே. அப்படி போராடி கிடைத்த பரிசுதான் நான்கு புதல்விகள். தேவி, தர்ஷினி, தனம் மற்றும் சாந்தினி. மூத்த மகளான தேவிக்கு 13 வயது. தான் வசிக்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடைநிலைப்பள்ளியில் பயில்கிறாள். இரண்டாவது மகளான தர்ஷினிக்கோ 12 வயது. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் முக்கிய தேர்வான யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் அமர்பவள். ஆரம்பப்பள்ளியில் பயிலும் தனத்துக்கோ வயது 9. பாலர் பள்ளியில் பயிலும் இளைய மகள் சாந்தினியின் வயதோ 6. பிள்ளைகள் தலையெடுக்க மணியன் இன்னும் கடுமையாக உழைத்தார்.
இரவும் பகலும் பாராமல் தன் நான்கு புதல்விகளை கஷ்டம் தெரியாமல் வளர்க்க உழைப்பாளியானார். கவிதாவோ ஒரு முழுநேர குடும்பத் தலைவியானாள். நாள், நேரம் தெரியாமல் மணியன் தன் குடும்பத்திற்காக உழைத்தாலும் அவரின் மனைவிக்கு இருக்கும் முன்னுரிமையை அவர் ஒரு போதும் மறந்ததே இல்லை.தன் மனைவியின் சின்ன சின்ன ஆசையை பூர்த்தி செய்வதில் மணியனுக்கு இருக்கும் ஆனந்தமோ வேறு. நூற்றில் என்பது சதவிகிதம் பெண்களுக்கு இருக்கும் ஆசைதான் கவிதாவுக்கும் இருந்தது. ஆனால் கவிதாவின் ஆசையோ இக்கரை மாட்டுக்கு அக்கறை பச்சை போல் தான் இருக்கும் சூழ்நிலை மறந்து பேராசைக்கு அதிபதியாக தொடங்கினாள்.
பாவம் மணியன் தன் குடும்பம் செழிப்பான வாழ்க்கை முறை அணுகுவதற்கு பணம் சம்பாதிப்பதில் முன்னோட்டமாக இருந்தார். வேளை முடிந்து களைத்து வரும் மணியனுக்கோ "அப்பா எங்க நாளு பேருல உங்களுக்கு யார ரொம்ப புடிக்கும்?" என்று தன் மூத்த மகள் தேவி கேட்க "எனக்கு என் நாளு இளவரசியும் ரொம்ப புடிக்கும். அதுல எந்த ஒரு சந்தேகமும் இல்லை சரியா? இப்போ இருக்கற மாதிரியே நீங்க நாளு பேரும் ஒன்னா இருக்கனும். அவ்ளோதான் இந்த அப்பாவோட ஆசை," என்றார் மணியம் கண்கலங்கிய வாரே. "அப்பா நாங்க நாளு பேரும் உங்க பிரின்சஸ்-ன நீங்க எங்க கிங் ஆச்சே? இந்த ராஜாவோட ஆசை கண்டிப்பா நிறைவேறும்.
கவலை படாதிங்க பா," என்று தேவி பதிலளிக்க மணியனின் கண்ணீர் சிந்தி வழிந்தது. "நான் உங்க கிட்ட ரெண்டாயிரம் வெள்ளி கேட்டேனே எங்க? மறந்துடிங்களா இல்ல மறந்த மாதிரி நடிக்கிறிங்களா?" என்று திடிரென்று ஓர் அறையிலிருந்து கவிதாவின் குரல். "மணி 6 ஆச்சி போய் குளி தேவி,"மணியன் தன் மகளை குளிக்க சொல்லிவிட்டு "எதுக்கு இப்போ ரெண்டாயிரம் வெள்ளி? அப்போ போன வாரம் நான் குடுத்த ஆயிரம் வெள்ளி எங்க?" என்று அதிர்ச்சியில் மணியன் கேட்க, “போன வாரம் நீங்க கொடுத்த ஆயிரம் வெள்ளியில்தான் நம்ம பக்கத்து வீட்டு பார்வதி கிட்ட நம்ம வீட்டுக்கு திரைச்சீலை ஆர்டர் கொடுத்திருக்கேன்," என்று இயல்பான நிலையில் பதிலளித்தாள் கவிதா.
"திரைச்சீலையா?? நம்ம வீட்ல ஒன்னுக்கு நாலு இருக்கு!!அப்புறம் எதுக்கு இன்னொன்னு புதுசா? பணம் பத்தும் செய்யும் அதற்காக இப்படியா வீண் செலவு செய்வது? இப்படி செலவு செய்தால் கண்டிப்பா நான் கோடிக்கணக்கில் சம்பாதிச்சாலும் பத்தாது,"என்றது மணியனின் கோபக்குரல். நெஞ்சில் புயல் வீசிய போதும் மணியன் தன் வார்த்தைகளையும் நடத்தையும் தன் உயிருக்கு உயிரான மனைவியின் முன்னால் கட்டுப்படுத்திக்கொண்டார். தன் மனைவியின் மாற்றத்தை எண்ணி வருத்தப்பட்டார். அன்று முதல் மணியன் கவிதாவின் உறவில் விழுந்தது ஒரு சின்ன விரிசல்...
