Hemadevi Mani

Drama Tragedy Inspirational

4.8  

Hemadevi Mani

Drama Tragedy Inspirational

அவள் கடந்த பாதை ...

அவள் கடந்த பாதை ...

3 mins
537


மரக்கிளை அசைவில், பறவையர் பாட்டில் பூங்காவனத்தில் கண்ணுக்கு தெரியாத தேவதையின் மெல்லிய ஆடை மேலே விழுவதுபோல் உடம்பைத் திருட்டுத் தனமாகத் தொட்டுவிட்டுப் போகும் தென்றலை ரசிக்கும் சமயத்தில் “அக்கா! கொஞ்ச நேரம் உங்க போன் குடுக்க முடியுமா? என் போன் பேட்டரி முடிஞ்சி போச்சு.


ஒரே ஒரு கால் மட்டும் பண்ணனும்,” என்று ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது. அந்த குரலுக்கு சொந்தக்காரியை பெண் என்பதா அல்ல பெண்ணாக போபவள் என்பதா என்பதில் எனக்கொரு சந்தேகம் எழுந்தது! பள்ளி பருவத்திலிருந்து முற்றுப்பெறாத ஒரு தோற்றம், பள்ளிப்பை சுமக்கும் தோளில் துணிப்பை, கண்களில் கனவுகள் அதை மறைக்கும் இளம் வயதுக்கோளாறு, சொல்வதை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத ஒரு வயது.


ஆம்! இடைநிலைப் பள்ளி மாணவியாக தான் இருக்க முடியும்! “அக்கா! அக்கா! ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க!” என்று சுவற்றில் எறிந்த பந்தாய் என்னை நிகழ்காலத்திற்க்கு இழுத்து வந்தது அந்த குரல். "இந்தா மா. கால் பண்ணிக்கோ!" என்று சொல்லி முடிப்பதற்குள் என் கையிலிருந்த தொலைபேசியை வெடுக்கென்று பிடுங்கி அரக்க பறக்க எண்களை அழுத்த தொடங்கினாள்.


தூரத்திலிருந்து கவனித்தேன்; தொடர்ப்பு கொண்ட சில வினாடிகளிலே முகத்தை சுளித்துக்கொண்டாள். மீண்டும் எண்களை அழுத்தினாள். அவளது பொறுமையோ காற்றில் வைத்த கற்பூரமாய் ரகசியமாகக் கரைந்து கொண்டிருந்ததை அப்பெண்ணுக்கே தெரியாமல் உணர்ந்தேன். “ரொம்ப நன்றி கா!" நன்றியை தெரிவித்த நாவிலிருந்து ஏதோ ஒரு பொய்மை மற்றும் லேசான சோகம் முகத்தை பொத்தியிருந்ததையும் உணர்ந்தேன்.


"என்ன ஆச்சு? ஏதாச்சும் பிரச்சனையா? உதவி ஏதாச்சும் வேணும்னா சொல்லுமா!" என்று ஒரு பெரிய மனிதனுக்குரிய பக்குவத்தோடு அப்பெண்ணின் எதிரே இருந்த பெஞ்சில் பணிவோடு அமர்ந்தேன். அவளது முகத்தை வெறித்துப்பார்த்தேன். மறுவார்த்தை பேசமாட்டாளோ என்ற ஒரு ஏக்கம்.


தன் இரு கரங்களை கன்னத்தில் வைத்தபடி குனிந்து அமர்ந்திருந்தாள். "என்ன ஆச்சின்னு சொல்லலாம்லே. கையில் என்ன துணிப்பையா? எங்க போற? கூட யாரும் பெரியவங்க வரலையா? கால் பண்ணி வீட்ல யாரும் எடுக்கலயா?" காவல் அதிகாரி விசாரணை செய்வதுபோல் நான் அப்பெண்ணை பல கோணங்கிலிருந்து விசாரித்தேன்! காரணம்..


தனியாக இருக்கிறாள்; அதை விட அவள் ஒரு பெண் அல்லவா! "ஏதோ அவசரத்துக்கு போன் கேட்டா எதுக்கு தேவையில்லாத விஷியத்துலே மூக்கை நுழைக்கிறிங்க? வேணும்னா உங்க போன் யூஸ் பண்ணுனதுக்கான பணத்தை குடுக்கறேன்! உங்க வேலைய பாத்திட்டு போங்க," என்று படாரென்று கதவை சாத்துவதுபோல் முகத்துக்கு நேராக பேசினாள். "இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன்?


பொம்பள புள்ள தனியா இருக்கியேன்னு விசாரிச்சேன்! தப்பா??” என்று கேட்டு முடிப்பதற்குள் "தப்புதான்! என் விஷியத்துல தலையிடறது தப்பு! நீங்க யாரு என்மேல் அக்கறை பட்றதுக்கு? நான் எப்படி போனா உங்களுக்கென்ன? தயவு செய்து உங்க வேலைய மட்டும் பாருங்க. அக்கறை எடுத்ததற்கு ரொம்ப நன்றி!” இரு கரங்களை கூப்பி தன் பேச்சை முடித்தாள் அப்பெரியமனுஷி! ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தேன்! இன்னும் ஒரு நிமிடம்.


அங்கிருந்தாலும் என் தன்மானத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்தது எனக்குள்! மீண்டும் ஒரு முறை யோசித்தேன்! ஏதோ ஒரு இனம்புரியா உணர்வு. அப்பெண்ணுக்காக அல்ல அவளின் பாதுகாப்புக்காக! ஒரு பெண்ணின் பாதுகாப்புக்காக இன்னொரு பெண் தன் தன்மானத்தை இழப்பது தவறில்லையே என்று தோனியது!


அதுவும் நமது இந்திய சமுதாயத்தில் ஆணோ பெண்ணோ நம் கண்ணெதிரில் கஷ்டப்படுவதை பார்த்து எப்படி கண்டும் காணாமல் போக முடியும்? மனதை கல்லாக்கிக் கொண்டு "நான் உன் பக்கத்தில உட்காரலாமா?" என்று வினவினேன்.


மௌனம் காவல் காத்தது. பிரச்சனைகளின்றி, குழப்பமின்றி, வாழ்க்கையின் கரடு முரடு அறியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள்; சேமிக்கும் உத்தியோகம், செலவழிக்காத இளமை, ஆரவார கல்யாணத்திற்க்கு தயாராகும் இளைஞர்கள்; முகத்தில் சுருக்கம் விழுந்து, தலை முடி நரைத்து, தன் வாழ்க்கையின் இறுதி காலகட்டத்தை ரசிக்கும் முதியவர்கள்; இவர்களுக்கு மத்தியில் நாங்கள் இருவரும் மட்டும் அமைதி காத்தோம் அப்பூங்காவில்.


“நான் எது கேட்டாலும் நீ அமைதியாவே இருக்க, நான் வேணும்னா ஒரு கதை சொல்லட்டா? பொழுது போகும்-ல,” என்று பேச்சை தொடங்கினேன் அப்பெண்ணிடம். அவளோ “சாரி எனக்கு கதை கேட்கற பழக்கம் இல்ல. ‘சோ ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ’ என்று நான் எதிர்பார்த்ததை போலவே நறுக்குன்னு பேசிட்டா.


நானோ வேறு வழியில் அவளிடம் பேச தொடங்கினேன். “ஐ பெட் யூ உனக்கு கண்டிப்பா நான் சொல்ற கதை புடிக்கும். அப்படி புடிக்கலான பாதிலே என்ன நிறுத்தலாம். எப்படி டீல் ஓகே வா?” சிறு வினாடிகளில் “சரி சொல்லி தொலைங்க! புடிக்கலான கதை மட்டும் இல்ல நீங்களே இங்கு இருக்க கூடாது. என் டீல் எப்படி? ஓகே மீன்ஸ் யூ கேன் ஸ்டர்ட்,” என்றால் வேடிக்கையான ஒரு சிரிப்புடன். மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் சட்டையின் நுனி பகுதியில் துடைத்துக்கொண்டே யோசித்தேன். கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அவளின் கோரிக்கைக்கு தலையாட்டி சம்மதித்தேன்.


***கதை சொல்ல தொடங்கினேன்,,,


Rate this content
Log in

Similar tamil story from Drama