அடிக்ஷன்
அடிக்ஷன்


இந்த உலகத்துல அடிக்ஷன் இல்லாத ஆளே இல்ல. இது பல ஆய்வுகளும் ஊர்ஜிதம் பண்ணியிருக்கு. சிகரெட், கஞ்சா, குடி மட்டும் தான் போதைன்னு நாம சொல்லிட முடியாது. சிலரால டீ குடிக்காம இருக்க முடியாது, சிலரால பார்ன் படங்கள் பார்க்காம இருக்க முடியாது... ஏன் பப்ஜி விளையாட்டு கூட ஒரு அடிக்ஷன் தான்.
அடிக்ஷன்ங்கிறது நம்ம எல்லாருக்குள்ளயும் இருக்க ஒன்னு. ஆனா, மூணு பேருல ஒருத்தர் கிட்ட இந்த அடிக்ஷன் அளவுக்கு மீறி இருக்கும். அதனால, அவங்க வாழ்க்கையில நிறையா பாதிப்புகள், தாக்கங்கள் உருவாக அவங்களே காரணமா இருப்பாங்கங்கிறது தான் அதிர்ச்சியான விஷயம்.
என் வாழ்க்கையில என் மனைவிக்கு இருந்த அளவுக்கு மீறின அந்த பார்ட்டி லைஃப் போதையினால, என்னோட வர்க்கஹாலிக் அடிக்ஷனால என்னென்ன மாதிரியான தாக்கங்க
ள் எல்லாம் உருவாச்சுங்கிறத My Story மூலமா உங்க கூட பகிர்ந்துக்க விரும்புறேன்.
எல்லார் வாழ்க்கையும் ஒரு பாடம் தானே... இது உங்களுக்கோ இல்ல உங்கள சுத்தி இருக்கிற யாருக்காவது ஒரு பாடமா இல்ல, முன்னெச்சரிக்கையா அமையலாம்ங்கிறது என்னோட நம்பிக்கை. (முழு தவறையும் என் மனைவி மேல சுமத்த நான் விரும்புல, அது நியாயமும் இல்ல, உண்மையும் இல்ல... தப்பு என் மேலையும் இருக்கு...)
பார்ட்டி லைப்! என் மனைவிக்கு பார்ட்டி லைஃப் மேல அடிக்ஷன்னு சொன்னா... எனக்கு வர்க் லைஃப் மேல பெரிய அடிக்ஷன் இருந்துச்சு. என் மேனேஜர் என்ன பாராட்டிட்டா போதும் வர்க்கஹாலிக்னு யாராகிச்சும் சொல்லிட்டா போதும் ஓவர் டைம் தாண்டி வேலை பண்ணுவேன். எங்க ரெண்டு பேரோட இந்த அடிக்ஷன் எங்க குழந்தையோட வாழ்க்கையை பாதிச்சது.