வல்லன் (Vallan)

Drama

2.3  

வல்லன் (Vallan)

Drama

அரேஞ் மேரேஜ்

அரேஞ் மேரேஜ்

3 mins
259



    என்ன சார் பொண்ணுக்கு மாப்பிள்ள பாக்கறீங்களே எதாச்சும் செட் ஆச்சா? என முன்னே போய்க்கொண்டிருந்த கிருஷ்ணனைக் கேட்டார் ராஜீ.


     அடடே வாங்க சார் நா உங்கள கவனிக்கவே இல்ல, எங்க சார் பையன புடிச்சா வேலை செட் ஆகல வேலை நல்லா இருந்தா பொண்ணுக்கு பையன புடிக்கல. நாமபாட்டுக்கு ஏதோ ஒன்னுன்னு பொண்ண பிடிச்சு தள்ளிவிட்டுட முடியுமா கொஞ்சம் பொறுமையா தான் பாக்கனும் என நாசுக்காக சொன்னார் கிருஷ்ணன்


    எங்க இந்த காலத்துல கல்யாணம் பண்ணுறது பெரிய குதிரைக்கொம்பால்ல இருக்கு. பசங்க பொண்ணுங்க எண்ணிக்கை அதிகம். ஆனா பொண்ணுங்க பசங்களவிட அதிகமா படிச்சுடறாங்க, அவங்க படிப்புக்கு ஏத்தமாதிரி அதிகமா படிச்சிருந்த பையனா இருந்தா குடும்பம் ஸ்மூத்தா போகும் அப்படிப்பட்ட பையன தேடி கண்டுபடிக்கறத்துக்குள்ள பெரிய கம்பசூத்திரமா இருக்கு. இன்னைக்கு இருக்க டாப் பிஸ்னஸ்ல ஒன்னு மேட்ரிமோனியும் புரோக்கரேஜும்தான். 

கல்யாணத்துக்குத் தர வரதட்சனையவிட இவங்களுக்குத் தர பணம் தான் அதிகமா இருக்கு. 


    இன்னு வர காலத்துல எப்டி எப்டிலாம் இருக்கப் போகுதோ தெரியல என வேதனையை மனசுக்குள்ளே குமுறிக் கொண்டு வீட்டுக்குள் களைப்போடு வந்து ஹாலில் இருந்த சோஃபாவில் சாய்ந்தார். 


    வந்தாச்சுங்களா.‌.. போன காரியம் என்ன ஆச்சுன்னு சமையல்கட்டுல இருந்து மஞ்சுவின் குரல்... 


    அது ஒன்னுமில்ல மா, எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காஃபி எடுத்துட்டு வா... பொறுமையா சொல்றேன்...


    இதோ ரெண்டு நிமிஷங்க வந்துடறேன்...


    இந்தாங்க காஃபி... இப்ப சொல்லுங்க என்ன ஆச்சு, அந்த பையன் செட் ஆகுமா? குடும்பம் எப்படி? எங்க வேலை பாக்கறான்? கூட பொறந்தவங்க எத்தன பேர்? என வரிசையா கேள்வி பறந்தது அலைந்து கலைத்துத் திரிந்து வந்த கிருஷ்ணன் மேல். 


    பையன் ஏதோ ஐடி கம்பெனில வேலைக்கு போறானாம், குடும்பத்த பத்தி விசாரிச்சதுல ஒன்னும் எந்த குறையும் யாரும் சொல்லல. கூடபொறந்தது ஒரு அக்கா, ஒரு தம்பியாம். நல்ல குடும்பம்னு தான் சொல்றாங்க. சொந்தமா ஒரு வீடு இருக்கு, ரெண்டு ஃபுளோர் இருக்காம். பொண்ணுக்கு கல்யாணமாகி இப்போ பாரின்ல செட்டில்டாம், சின்ன பையன் காலேஜ் படிக்கறானாம். விசாரிச்ச வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்ல. 


    ஸ்வேதாகிட்ட அந்த பையனோட போட்டோவ காட்டி அவ சமதம் வாங்கனும். அவ என்ன சொல்லுவானு தெரியலமா ஈவ்னிங்க வரட்டும் பேசுவோம்.


    ஸ்வேதா தான்ங்க நம்ம ஹீரோயின், அவ எம்.எஸ்சி பி.எட் முடிச்சுட்டு ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சரா வேலை செய்யுறா. ரொம்ப கலர் எல்லா இல்லங்க நல்ல மாநிறம், கலையான முகம், நல்ல உருண்ட பளபளப்பான கண்கள், சற்றே ஏறிய புருவம், நல்ல கிளி மாதிரி மூக்கு, இடுப்புக்கு கீழ தொங்குற முடி, அளவான உடல்வாகு மொத்தத்தில் கச்சிதமா சிக்குனு இருக்க சின்ன பொண்ணு. 


    நம்ம ஸ்வேதாக்கு பிடிக்கலனா அவங்கள கண்டுக்கமாட்டா, இத்தன வருசத்துல லவ்வு கிவ்வுனு ஒன்னுமில்ல, பெத்தவங்க பாக்குற பையனதான் கல்யாணம் பண்ணிக்கறேன்னு வெயிட் பண்ணுறா. ஆனா எதுவும் கூடி வரல. 


   இதோ நம்ம ஹீரோயின் வந்துட்டா வீட்டுக்குள்ள, கிருஷ்ணன் ரெடியா இருக்காரு போட்டோவ காட்ட. வந்தவள் கை கால் முகம் கழுவி சோர்ந்தாப்போல வந்து உட்கார்ந்து டிவி ரிமோட்டை ஆன் செய்தாள். கண்ணாலனே பட்டு ஒடுது... இது கோயின்சிடென்ஸ்தாங்க. அப்பா வந்து ஏம்மா ஸ்வே இந்த பையன் போட்டோ பாரும்மா எப்டி இருக்கு? புடிச்சிருக்கா பாத்து சொல்லுன்னார். 


    கொஞ்சம் தலவலியா இருக்குப்பா செத்த ரிலாக்ஸாகிட்டு பாத்து சொல்றேன் என் ரூம்ல வச்சிருங்க.


    சரிம்மா அப்றம் பொறுமையா பாத்துட்டு சொல்லு மா ஸ்வே...


    கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு ரூம்குள்ள போனாள் நம்ம ஹீரோயின்.


    போட்டோவை மெல்ல எடுத்து பார்த்தாள், போட்டோ அவள் கண்களைக் கவரவில்லை, மனதுக்குள் பெரிய எண்ணவோட்டம் வந்து தொற்றிக்கொண்டது. 


   அரேஞ் மேரேஜ்! என்னமோ தெரில அந்த காலத்துல விவரம் தெரியாத வயசுல கல்யாணம் பண்ணி வச்சா அவங்க கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணி அன்டர்ஸ்டேன்ட் பண்ணிப்பாங்க, ஆனா இப்ப இருபத்தியஞ்சு வருசம் ஒரே வீட்டுல இருந்துட்டு திடீர்னு ஒருத்தன பாத்து அவன் குடும்பத்த பத்தி முழுசா எதுவும் தெரியாம நாலுபேர் சொல்றத நம்பி ஓகே பண்ணி மூனு மாசத்துல பேசி பழகி என்னத்த தெரிஞ்சு நம்பி அவங்க வீட்டுக்கு போறதோ எப்டி தான் இதெல்லாம் நடக்குதோ தெரியல. ஆனா மனசு ரொம்ப சங்கடமா இருக்கு. 


   சரி கல்யாணம் பண்ணி வீட்டுக்கு போனா அதோட விட்டா பரவால்ல ஒரு வாரத்துக்குள்ள ஃபர்ஸ்ட் நைட் அது இது லொட்டு லொசுக்குனு உயிர எடுப்பாங்க. ஒரு பொண்ணு அவளோட உடம்ப ஒருத்தன நம்பி ஒப்படைக்க ஒருவார டைம்லா எப்டி பத்தும்? என்னதான் கல்யாணம் பண்ண புருஷனா இருந்தாலும் அவன பத்தி தெரிஞ்சது என்னவோ கடுகளவுதானே! 


   கல்யாணமான உடனே செக்ஸ் லைஃப் ஸ்டார்ட் பண்றது எல்லாம் ஏதோ அன்னீஸியா இருக்கு. என்ன சாஸ்திரமோ சம்பிரதாயமோ! ஐ ஹேட் தட். 

ஒரு பொண்ணுக்கு அவளோட பிஸிக்கல் லைஃப் எப்ப ஸ்டார்ட் பண்ணறதுனு கூட ஃப்ரீடம் இல்ல ச்சை என்ன சொசைட்டியோ தெரில. 


   என்னடா நம்ம ஹீரோயின் ஒரேயடியா சொசைட்டிய திட்டறானு நினைக்காதீங்க, எத்தனை பொண்ணுங்களோட வெளியக்காட்ட முடியாத ஆதங்கந்தான். இங்க நம்ம ஸ்வே கூட வெளிய சொல்லல மனசுக்குள்ள தான் நினைச்சு குமைஞ்சுக்கறா. 


    எதையுமே நாம கொஞ்சம் காலத்துக்கு ஏத்தமாதிரி மாத்தி யோசிக்கனுங்க அந்த காலத்துல நா கல்யாணம் பண்ணி எண்ணி பத்து மாசத்துல புள்ள பெத்துக்கிட்டேனா அது அந்தகாலம்ங்க, இந்த காலத்துக்கு ஏற்றாப்போல மாறித்தான் ஆகனும். அப்போ கல்யாண வயசும் இப்போ கல்யாண வயசும் எம்புட்டு வித்தியாசத்தோட இருக்கு. செஸுவல் லைஃப் சைக்கலாஜிக்கல் சம்பந்தப்பட்டது. கல்யாணம் ஊருக்காக நடப்பது இந்த ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் எப்ப நடக்கனும்னு பொண்ணும் பையனும்தான் முடிவு பண்ணும். 


    கல்யாணத்த முடிச்சுட்டு பெரியவங்க கம்முனு இருந்தா அது அது நடக்க வேண்டிய காலத்துல தன்னபோல நடக்கும். 


   ஆயிரங்காலத்து பயிரை முதல் களைய பிடுங்கும்போதே சேர்த்து பிடுங்கிடகூடாது. 


    ஆயிரம் பொய் சொல்லாம ஆயிரம் முறை யோசிச்சு செய்யுங்க கல்யாணத்த.




Rate this content
Log in

Similar tamil story from Drama