அம்மா
அம்மா


"ஐந்து பெற்றால் அரசனும் ஆன்டி ஆவான்" என்பது பழமொழி.
ஆனால் என் தாய் ஆறு பெண் குழந்தையை ஈன்றவள். என் தந்தை தீயவர்களின் சகவாசத்தினால், நல்ல நிலமையிலிருந்த நாங்கள் வருமைக்கு தல்லப்பட்டோம்.
தகப்பன் சரியில்லை ஆதலால் அனைவரின் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்புமாறு என் தாயிக்கு அறிவுரைக்கப்பட்டது.
அனாலும் என் தாய் அதை காதில் வாங்காமல்,
"பிச்சை எடுத்தாது, எங்களை படிக்க வைப்பேன் என்று கூறி படிக்கவைத்தார்.
எங்கள் மூத்த சகோதரியை தவிர
மற்ற அனைவரும் நன்றாக படித்து பட்டதாரி ஆனோம். நாங்கள் அனைவரும் இன்று நல்ல வேலையில் உள்ளோம்.
ஆதலால், என் அன்னையே என்னை கவர்ந்த வீர மங்கை.
தான் படிக்காவ்விட்டாலும் தன்னுடைய ஆறு மகளையும் படிக்க வைத்த என் தாயிக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்வேன்.